போராடி கிடைத்த வெற்றி - 2019 உலகக்கோப்பை நினைவுகள்
சரியாக இன்று, ஓர் ஆண்டிற்கு முன், நாட்டிங்கம் மைதானத்தில், தொடரின் தொகுப்பாளரான இங்கிலாந்து அணியை, பாகிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. மிகவும் விறுவிறுப்பான, மற்றும் அதிக ஸ்கோர் போட்டியாக அமைந்தது. போராட்டம் என்கிற வார்த்தையினை இங்கு குறிப்பிடுவதன் காரணம், அதே ஆண்டில், இதற்கு முன், அதே மைதானத்தில், அதே இரு அணிகள் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மோதியது. அதனை போன்று, அன்று 300க்கும் மேல் ரன்களை குவித்தது பாகிஸ்தான். அப்போது இங்கிலாந்து அணி அதனை விரைவாக துரத்தி பிடித்தது, ஆனால் இம்முறை நூல் அளவில் தவற விட்டது. "கைகளுக்கு எட்டியது வாயிற்கு எட்டாத" கதையாக மாறியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்'கிற்கு ஏற்ற விக்கெட்டாக அமைந்தது. ஒப்பனர்களான இமாம் உல் ஹக் மற்றும் ஃபகார் சமான், மிக சிறப்பாக தொடங்கினார்கள். முதல் 10 ஓவர்களில், ஆட்டத்தை முற்றிலும் தங்களின் கைகள் வசத்தில் கொண்டு வந்தனர். 82 ரன்களுக்கு முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது. ஒப்பனர்களின் வீழ்வுக்குப் பின், ஆட்டத்தில் இங்கிலாந்து அணி திரும்பி எழும் என்று நினைத்திருந்தால், அது தான் நம் தவறு. காரணம், முதலில் இங்கிலாந்து அணியின் ஃபீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. மற்றும், பாகிஸ்தான் அணி அன்று அதிரடியான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தினர். அதிலும் 3, 4 மற்றும் 5ம் இடங்களில் விளையாடிய பாபர் அசாம், மொஹம்மத் ஹபீஸ், மற்றும் சர்ஃபராஸ் அஹ்மத், ஆகிய மூவரும் அரை சதங்களை குவித்தார்கள், அதிலும் முக்கிய செய்தி, மூவருமே 100க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார்கள். குறிப்பாக ஹபீஸ், களமிறங்கிய முதற் பந்திலிருந்து பந்து வீச்சாளர்களை தாக்கினார். வெறும் 62 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார், ஹபீஸ். இறுதிக்கட்ட ஓவர்களில் சில விக்கெட்டுகளை கைப்பற்றினாலும், முழு 50 ஓவர்களில் முடிவில் அடிக்கப்பட்ட ஸ்கோர் 348/8. உலகக்கோப்பை தொடரில், திருப்பி அடிக்கமுடிந்த அதிகபட்ச ஸ்கோர் 322. 20 ரன்கள் கூடுதலாக அடிக்க வேண்டிய நிர்பந்தம், இங்கிலாந்து அணியிற்கு.
இங்கிலாந்து அணியினை பொறுத்த வரை, பாகிஸ்தான் அணி சரியாக செய்த ஓர் செயலை இவர்கள் செய்ய தவறினார்கள். ஆமாம், பாக்கிஸ்தான் அணி 348 ரன்களை குவித்ததற்கு அம்மூன்று வீரர்கள் அடித்த ரன்கள் மட்டும் இல்லை, முதலில் இரு ஒப்பனர்கள் குடுத்த ஒளிமயமான தொடக்கம் தான், ஓர் அடித்தளத்தை அமைத்தது. இங்கு இங்கிலாந்து அணியை பொறுத்த வரை, ரன்கள் வேகமாக அடித்தார்கள் ஆனால் முதல் 4 விக்கெட்டுகளை 118 ரன்கள் அடித்திருந்த நிலையில் இழந்தது. ஆனால், அங்கிருந்து ஆட்டத்தின் திருப்பமாக ரூட் மற்றும் பட்லர் இருவருமே நன்கு கூற்றாக சேர்ந்து ரன்களை உயர்த்தினார்கள். 130 ரன்கள் இனைந்து கூடுதலாக சேர்க்க, இங்கிலாந்து அணியின் கைகளில் போட்டி அமைந்தது. ரூட் தரையோரமாய் பந்தினை அடித்து ரன்களை சேர்க்க பட்லர் அவரைக்காட்டிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவருமே சதங்களை அடித்தார்கள். இவர்களுள் ஒருவர் இறுதி வரை நின்றிருந்தால், அல்லது பின்னர் இறங்கிய மோயின் அலி சிறிது விரைவாக ரன்கள் குவித்திருந்தால், இப்பொடியை தேன்கலந்து அணி கைகூடும். ஆனால், அது நடக்கவில்லை. பேக்வார்ட பாயிண்ட் திசையில் நின்றிருந்த ஃபீல்டர், சிறிது இடது புறமாக நகர்த்தப்பட்டு நிறுத்தப்பட்டார். அங்கு நின்று கொண்டிருந்தவரிடம், ரூட் மற்றும் பட்லர், இருவருமே கேட்ச் கொடுத்து விட்டு பெவிலியனை நோக்கி திரும்பினர். இறுதியில் மோயின் அலி, அடித்து விடுவார் எனப்பார்த்தால், அங்கு சிறிது வேகம் குறைந்து காணப்பட்டார். காரணம், இறுதி ஓவர்களில் பாக்கிஸ்தான் அணியின் பந்துவீச்சு மிகவும் அருமையாக இருந்தது. அதன் காரணமாக, இறுதியில் 334/9 என்கிற ஸ்கோரை அடித்தது. எவராவது ஒருவர் சில ரன்களை அடித்திருந்தால், போட்டி இங்கிலாந்து அணியின் கைகளில் இருந்திருக்கும். அது நடக்காதது, மற்றும் தொடக்கத்தில் கைவிட்ட சில விக்கெட்டுகள், தோல்வியை பரிசளித்தது.
ஆட்ட நாயகன் விருதை வென்றது - முகமத் ஹபீஸ், தனது 84(62) மற்றும் அவர் கைப்பற்றிய 1 விக்கெட், எதிரணியின் தலைவனின் விக்கெட்.
"இது உன் இடம், உன் ஆளுங்க, எனக்கு பயம் இல்ல, அதுக்கு இது தான் சாம்பிள்" என்கிற வசனத்தை உணர்த்திக்கொண்டு கெத்தாக வென்றது பாகிஸ்தான் அணி.


ஆட்ட நாயகன் விருதை வென்றது - முகமத் ஹபீஸ், தனது 84(62) மற்றும் அவர் கைப்பற்றிய 1 விக்கெட், எதிரணியின் தலைவனின் விக்கெட்.
"இது உன் இடம், உன் ஆளுங்க, எனக்கு பயம் இல்ல, அதுக்கு இது தான் சாம்பிள்" என்கிற வசனத்தை உணர்த்திக்கொண்டு கெத்தாக வென்றது பாகிஸ்தான் அணி.
Comments
Post a Comment