உடைத்தல் - ஷாஹித் அஃப்ரிடி கொரோனா நோயால் தாக்கப்பட்டாரா ??
பாகிஸ்தான் அணியின், பிரபல கிரிக்கெட் வீரரான லாலா என்று அழைக்கப்படும் அஃப்ரிடி, கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆம், இப்போது உலகினையே உலுக்கும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அனைவரும் அறிந்திருப்பீர், பாகிஸ்தான் அணியின் தலைவராகவும் மற்றும் சிறந்த ஆல் ரவுண்டர் வீரராகவும் திகழ்ந்தவர் ஷாஹித் அஃப்ரிடி. 39 வயது கொண்ட அஃப்ரிடி, 2016ம் ஆண்டில் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். அதிரடி வலது கை பேட்ஸ்மேனாகவும் மற்றும் வலது கை சுழற்பந்து வீச்சாளராகவும் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியிற்காக அயராது உழைத்த வீரர். பாகிஸ்தான் அணியின் அணைத்து வெற்றி தோல்விகளில் இவரின் பங்கும் உண்டு.
வியாழன் அன்று, ஷாஹித் அஃப்ரிடி, தனது உடல்நிலையில் ஏதேனும் சரி அல்ல என்று புரிந்துக்கொண்டார். சிறிது தோய்வடைந்தது போன்று இருந்தது. வெள்ளியிலும் அவ்வாறு இருக்க, சனிக்கிழமை ( அதாவது இன்று), அருகில் உள்ள ஓர் மருத்துவமனையினை அணுகி, கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்பரிசோதனையில், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிந்தது. இந்நிகழ்வினை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இன்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில், இதுவே ஓர் பெரிய செய்தியாக பேசப்பட்டது. பாகிஸ்தான் நாட்டவர்கள் மற்றும் பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஒரு புறம், இவருக்காக வருத்தமுற்று கடவுளிடம் வணங்க, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதனை ஏதேனும் நையாண்டி நிகழ்வினை போன்று சிரித்து, வலைத்தளங்களில் பகிர்ந்தார்கள். இங்கு நான் நடுநிலையான கருத்துகளை மட்டுமே பகிரவுள்ளேன்.
நம்மை கண்டு தான் நாம் சிரிக்க வேண்டும். உலகினையே உலுக்கும் கொரோனா நோயிற்கு ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தியை கேட்டவுடன் எவ்வாறு நம்மால் சிரிக்க இயலும் என்பது எனக்கு புரியவில்லை. எதிரி நாட்டான பாகிஸ்தானை சேர்ந்தவர் என்கிற ஓர் காரணத்திற்காக நாம் இவ்வாறு கூறுதல் நன்றல்ல. மற்றும், பலர் காஷ்மீர் விவகாரத்தில் இவர் பேசிய கூற்றுகளால் இவ்வாறு நடந்துள்ளது எனவும், சிலர் " கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசின " என கேள்வி எழுப்புதலும் நான் பார்த்தேன். நம் நாட்டினை நாம் விட்டுக்கொடுக்காது பேசினால், அது தேசபக்தி அதே அவர் அவருடைய தாய்நாட்டிற்காக விட்டுக்கொடுக்காது பேசியிருந்தால் அது தவறு. மற்றும், காஷ்மீர் விவகாரங்களை மறந்துவிட்டு, உலகம் பழைய நிலையிற்கு திரும்புவதற்காக நாம் நமது அரசு கூறும் செயல்களை செய்தலே நன்று என நான் கூறுகின்றேன். மற்றும் இங்கு நாம் வலைத்தளங்களில், தினம்தோறும் பணிபுரியும் வேலைக்காரர்கள் என்ன செய்வார்கள் என கவலை கொண்டோம். ஆனால், அஃப்ரிடி, ஊரடங்கின் நேரங்களில், மற்றவரை போன்று வீட்டில் அமராது, பாகிஸ்தான் நாட்டில் உள்ள கிராமங்களுக்கு சென்று, அங்கு தனது தொண்டு நிறுவனதிலிருக்கும் பணத்தை செலவழித்து அனைத்து அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார். அந்நாட்டில் உள்ள கூலி தொழிலாளிகளுக்கு, தனிப்பட்ட முறையில் இவர் உதவியுள்ளார். இவையனைத்தும் வெளியில் சிறிதும் பரவாது, அமைதியாக செய்தார். நாம், இங்கு உண்மையில், கூலித்தொழிலாளிகளை
கண்டுகொண்டோமா ? கேள்விக்குறி தான்.
மற்றும் இறுதியில் நான் கூறவுள்ள செய்தி, சர்வதேச அளவில் பெருமை கொள்ளும் கிரிக்கெட் வீரர், மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும் நபரான இவருக்கு கொரோனா ஏற்பட்டிருந்தால், அதன் வீரியம் எவ்வாறு இருக்கின்றது என நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். தயவு செய்து, வீட்டில் அமருங்கள். கைகளை தண்ணீரை ஊற்றி நன்கு கழுவுங்கள். மிகவும் சுத்தமாக இருங்கள். "சுத்தம் சோறு போடும்" என்கிற பழமொழியினை மாற்றி, "சுத்தம் சோறு மட்டுமல்ல, உயிர் பிச்சையும் போடும்" என தற்போதைய நிலையை புரிந்து கொள்ளுங்கள்.
Comments
Post a Comment