சுஷாந்த் சிங் என்கிற அடுத்த தோனி

இன்று, சுஷாந்த் சிங் தனது பாந்டரா'வின் மாலிகையில் தற்கொலை செய்து கொண்டார். உயிர் பிரிந்தது. யார் இந்த சுஷாந்த் சிங்? ஏன் இவரை அடுத்த தோனி என அனைவரும் அழைக்கின்றார்கள்  ? இவர் கிரிக்கெட் வீரரா ? என கிரிக்கெட் பாராத மக்களின் மனதில் கேள்விகள் எழும். ஆனால் இக்கேள்வியினை கிரிக்கெட் ரசிகரிடம், குறிப்பாக தோனியின் ரசிகர்களிடம் கேட்டிருந்தால், நடப்பவை வேறு.

இவர் கிரிக்கெட் வீரர் அல்ல. ஹிந்தி திரைப்பட நாயகன்.  திரைப்பட நாயகனுக்காக ஏன் பதிவிடுகின்றாய் ? என கேட்போர் கிரிக்கெட்டை சிறிதும் புறிந்துக்கொள்ளாதவர்களே. இவர் 2016ம் ஆண்டில், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியின்  வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் இவர் தோனியின் கதாபாத்திரத்தை நடிக்கின்றார். சிறிது தவறு, இவர் தோனியாகவே வாழ்ந்துள்ளார்.

இவர் பீகாரில் 21ம் தேதி, ஜனவரி மாதம், 1986ம் ஆண்டில் பிறக்கின்றார். இவர் தனது 22 வயதிலிருந்து சின்ன திரை, வெள்ளித்திரை மற்றும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். PK போன்ற சில திரைப்படங்களில், சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இவருக்கு  மகேந்திர சிங்க் தோனியின் வாழ்க்கை வரலாற்றை சார்ந்த திரைப்படத்தில் தோனியின் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. ஆனால், இப்படத்திற்காக 2 ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்கிற நிபந்தனை. இவர் ஏற்றுக்கொண்டார். வாழ்வில், பெரிதாக சாதிக்க வேண்டும் என்கிற நெருப்பு அவரின் மனதில் இருந்தது. கடுமையாக உழைத்தார். சிறிதும் பிசிறு இல்லாமல் காரியத்தை முடிக்க வேண்டும் என்கிற எண்ணம், அவரை ஊக்குவித்தது.

தோனியை போன்று நடந்தார். தோனியை போன்று உடல் பாவனை சிறிதும் மாறுபடாமல், முழுமையாக செய்தார். தோனியின் பிரபல கிரிக்கெட் ஷாட் எனக் கருதப்படும் ஹெலிகாப்டர் ஷாட்டை இவர் மிகவும் கடுமையாக பயிற்சி செய்தார். அதில் தனது கால்களை உடைத்துக்கொண்டார். கால் உடைந்தாலும், அடிப்பட்ட சிங்கத்தின் குணம், முன்னதை விட மிகவும் வலுவாக எழும்புவது. எழுந்தார். பேட்டிங்கில் மிகவும் பயின்றார். இந்தியாவின் சிறப்பு கிரிக்கெட் வீரர்களின் பயிற்சியில் அயராது உழைத்தார். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் இரண்டனையும் செய்தார். மிகவும் கனக்கச்சிதமாக தோனியை போன்று, தோணியாகவே நின்று திரையில் காரியத்தை செய்தார். ஓர் சாகப்தத்தை திரையில் நிகழ்த்த வேண்டுமெனில்,  அச்சாகாப்தத்தின் அங்கமாக இருத்தல் வேண்டும். இவர், அதனை தாண்டி, தோனியாக திரையில் வாழ்ந்து, திரையுலகில் இவருக்கென சகாப்தம் ஒன்றை உருவாக்கினார்.

முக அமைப்பில் சிறிது வேறுபட்டிருந்தாலும், அத்திரைப்படத்தில் நிஜ  தோனியை நேரில் கண்டவாறு இருந்தது. ஓர் கிரிக்கெட் வீரனுக்காக, இந்தியாவில் வெளியிடும் முதல் திரைப்படம். அட்டகாசமாக இருந்தது. 4 ஆண்டுகள் கழிந்தும், எனது கண்களில் இன்னும் அந்நினைவுகள் நியாபகம் உள்ளது. கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள ஆரவாரமும், திரையில் பிரபல நடிகர்கள் களமிறங்கினால் வெளிப்படும் கோஷமும் இனைந்தால், எவ்வாறு இருக்கும் ?? அவ்வாறு உள்ள கற்பனையை விடவும் அதிகம் இருந்தது இவர் தோனியாக வெளிப்படும் போது.

அவ்வாறு சிறப்பு உள்ள இவர், தனது நிஜ வசழ்வில் தூக்கிட்டு இறந்தார். நீ இறந்தாலும், இப்போதும் நீவீர் செய்த சம்பவம் வரலாற்றில் நிச்சயம் இடம் பெரும். உனது உயிர் சாந்தியடைய நாங்கள் இறைவனை வழங்குவோம்

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood