இந்தியாவின் வெற்றி பயணம் - இந்தியா பாகிஸ்தான் போட்டி

இன்று, ஒரு வருடத்திற்கு முன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள், ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மோதியது. பாக்கிஸ்தான் அணியை பொறுத்த வரை, 27 வருடங்களாக உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவிக்கொண்டு இருக்கிறது. இதனால், வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கடமை பாகிஸ்தான் அணியிடம் இருந்தது. மறுபுறத்தில், புல்வாமா நகரில் நடந்த தாக்குதலுக்கு பழி தீர்க்கும் விதமாய், கிரிக்கெட் துறையில் பாக்கிஸ்தான் அணியை தோற்கடிக்க வேண்டிய நிலை.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை போட்டியை மிகவும் பாதித்தது. இடையினில், மழை பொழிய, ஆட்டத்தின் ஆர்வத்தை குறைத்தது. ஆனால், ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுலின் ஆட்டம், போட்டியை மிகவும் சுவாரஸ்யமாக அமைத்தது. பாக்கிஸ்தான் அணியை சேர்ந்த இடது கை பந்துவீச்சாளர்களை எதிர்த்து, அதிலும் முக்கியமாக, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற வாறு அமைந்த மைதானத்தில், சிறப்பாக பேட்டிங் செய்தல் என்பது மிகவும் சவாலான காரியம். ஆனால், அசத்தியமாய் அதனை செய்தனர். தவான் இல்லாத தருணத்தில், ரோஹித் ஷர்மா, அதிரடி ஆட்டத்தை கடைபிடிக்க மறுபுறம் ராகுல் சிறிது நிதானமாக விளையாடினார். ராகுல் 57 ரங்களுக்கு ஆட்டமிழக்க, ஸ்கோர் 136/1 என இருந்தது. ஆனால் ரோஹித் ஷர்மா அன்று நிற்கவில்லை. தனது ஆட்டத்தை தெளிவாகவும், நிறைவாகவும் விளையாடினார். சதம் அடித்தார். இவ்வுலககோப்பையின் இரண்டாவது சதம். கோலியும் அவருடன் இனைந்து சிறிது தந்திரத்துடன் ஒன்று இரண்டு ரன்களை திருடினார். ரன்களின் ஓட்டம் சிறிதும் தேய்ப்படவில்லை. ரோஹித் சர்மா 140 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். விராட் கோலியும் அரை சதம் அடித்தார். ஆனால், ரோஹித்தின் விக்கெட் இழப்பிற்கு பின், ஆட்டத்தின் வேகம் குறைந்தது. கடைசி 5 ஓவர்கள் மீதம் உள்ள நிலையில், மழை பொழிந்தது. இறுதியில் 336/5 என ஸ்கோர் அடித்தது இந்திய அணி.

பாகிஸ்தான் அணி களத்தில் பேட்டிங்கை மேற்கொள்ள இறங்கியது. தொடக்கத்தில் புவனேஷ்வர் குமார், கால்களின் பிடிப்பு காரணமாக களத்தை விட்டு வெளியேற, விஜய் ஷங்கரை வைத்து பந்துவீச வேண்டிய நிபந்தனை. கோலி, சவாலை மேற்கொண்டார். பாபர் ஆசாம் மற்றும் ஃபகார் சமன் சிறிது எதிர்ப்பு தெரிவித்தனர், தங்களின் ஆட்டத்தால். இருவருமே 104 ரன்களை கூற்றாக சேர்த்தனர். நன்கு விளையாடிக்கொண்டிருந்த பாபர் ஆசாம், 48 ரன்களுக்கு, குலதீப் யாதவ் வீசிய இடது கை சைனமான் பந்தில், தனது மாட்டியிற்கு, முட்டியிற்கும் இடையில் பந்து நுழைந்து ஸ்டம்ப்பை அடித்தது. அத்தருணமே, ஆட்டத்தின் திருப்புமுனை ஆகும். அங்கிருந்து சரிவு மட்டும் தான். பாதாளத்தை நோக்கி சென்றது பாகிஸ்தான் அணி. இடனியில் மழையும் தொல்லை கொடுக்க, போட்டி 40 ஓவர்களுக்கு குறைந்தது. அதில், கடைசி 30 பந்துகளில் 134 ரன்களை அடிக்க வேண்டும் என்று கணக்கு வைத்தது டக்வர்த் லீவிஸ் கணக்கு. அதனை அடிக்க இயலாது, 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போட்டியை வென்றது.

அன்று, பாகிஸ்தான் அணி, மூவற்றிலுமே நினைத்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதனால், பாகிஸ்தான் அணியின் தோல்வியடைந்தது

ஆட்ட நாயகன் விருதை பெற்றது - ரோஹித் சர்மா(140(113))              

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood