கிரிக்கெட் செய்திகள்
தற்போது, கிரிக்கெட்டில் சில முக்கிய செய்திகள் வெளிவந்துள்ளது. அச்செய்திகள், கிரிக்கெட் எனும் விளையாட்டு துறையினை கடந்து, தற்போதைய சூழலில் உள்ள பிரச்சனைகளை சார்ந்தவாறு அமைந்துள்ளது. அவ்வாறு வெளிவந்த செய்திகளை நாம், இனி வரும் பக்கங்களில் காணலாம்.
இதற்கு முன், ஒரு வாரத்திற்கு முன், ஷாஹித் அஃப்ரிடி, எனும் பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் தலைவன் மற்றும் சிறந்த ஆல் ரவுண்டர் அவர்களுக்கு காரோண நோயினால் பாதிப்பே ஏற்பட்டது. இதனையடுத்து, இப்போது இரண்டாவது முக்கிய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் உரிமம், சீன நாட்டின் நிறுவனமான விவோ'விடம் உள்ளது. இந்த ஒப்பந்தம், 2018ம் ஆண்டின் முதல் 2022ம் ஆண்டு வரை, உள்ளது. இதனை, 2,199 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. இந்நிறுவனம், இதற்கென வருடத்திற்கு 400 கோடி ரூபாய் பிசிசிஐ'க்கு வழங்கி வருகின்றது. இவ்வாறு உள்ள ஒப்பந்தத்தை, முடித்துக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் குரல் எழுப்பி உள்ளனர்.
மஷ்ரஃபே மோர்தசா - கொரோனா பாதிப்பு உறுதி
மஷ்ரஃபே மோர்தசா எனும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவனுக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை, இன்று காலையில், தனது தம்பியான மோர்சலின் மோர்தசா அதனை செய்தியாளர்களுக்கு அறிவித்தார். " இரண்டு நாட்களாக தனக்கு உடல் ஏதேனும் சரியாக இல்லை, புரிந்து கொண்ட மஷ்ரஃபே மோர்தசா, பங்களாதேஷ் நாட்டின் தலைநகரமான தாகா'வில் உள்ள மருத்துவமனையில் இவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், தனக்கு கொரோனா நோய் இருப்பதாக உறுதியாகிற்று".மேலும் அவர் "இப்போது, தன்னை தானே தனது இல்லத்தில் தனிமை படுத்திக்கொண்டுள்ளார்" என தனது தம்பி கூறியுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில், உலகில் உள்ள தலைசிறந்த கிரிக்கெட் அணிகளுள் ஒன்றாக பங்களாதேஷ் அணி திகழ்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் மஷ்ரஃபே மோர்தசா'வின் வழிநடத்துதல் தான். நாம், மீண்டும் இவருக்காக கடவுளை வணங்க வேண்டும் என்பதும் மற்றும் சுத்தமாகவும், தூரமாகவும் இருத்தல் வேண்டும், என்பதும் நான் தெரிவித்துக்கொள்கின்றேன். பங்களாதேஷ் நாட்டில், தற்போது 1,00,000 பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், உலகம் முழுவதும் சேர்த்து 8 கோடி மக்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகினர். மிகவும் இன்னலான காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். பாதுகாப்பும் சுகாதாரமும் தற்போது அத்தியாவசியம்.
ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் - சீன இந்திய விவகாரம், 2020
தற்போது, இந்தியா - சீன எல்லையில் உள்ள கல்வான் எனும் ஊரில், திடீர் தாக்குதலின் காரணமாக, நமது நாட்டை சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் உயிர் எய்தனர். பல காலமாக, காஷ்மீர் விவகாரம், இந்தியா - பாக்கிஸ்தான் நாடுகளை உலுக்கி கொண்டிருப்பது போல், இந்தியா - சீன நாட்டிற்கும் இடையே பல சர்ச்சைகள் மற்றும் விவகாரங்கள் நடந்துக் கொண்டிருக்கின்றது.
வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், சீன நாட்டை சார்ந்த எவ்வித பொருட்களாக இருப்பினும், அதனை பயன்படுத்த கூடாது என்றும், சீன நாட்டு நிறுவனங்களுடன் எவ்வித ஒப்பந்தமும் வைக்க வேண்டாம் எனவும் குரல்கள் எழுப்பப்பட்டது.
பல காலமாய், இரு நாட்டவருக்கும் இடையில், பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதி தொழில் நடைபெற, வர்த்தக ரீதியாக, நன்கு புரிதல் இருந்தது. ஆனால், இங்கு நல்லவனாக இருந்துவிட்டு, பின்னர் முதுகில் குத்துவது போல், சம்பவங்கள் நடைபெற்றால், யார் சினம் கொள்ளாது இருப்பர் ?, இதுவே மக்கள் உணர்வு.

இதற்கு, ஐபிஎல் நிறுவனம், தனது ட்விட்டெர் பக்கத்தில், "இந்திய ஜவான்களின் மறைவிற்காக, வரும் வாரத்தில், ஐபிஎல் ஸ்பான்சர் உரிமத்தை குறித்து மறுபரிசீலனை செய்ய படும்" என குறிப்பிட்டுள்ளது.
இதனையொட்டி, சிடிஐ நிறுவனத்தின் தலைவரான, பிரிஜேஷ் கோயல், பிசிசிஐ'யின் தலைவரான சௌரவ் கங்குலியிடம் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், சீன நாட்டினுடன் உள்ள அனைத்து வித ஒப்பந்தங்களையும் முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
Comments
Post a Comment