பிறந்தநாள் வாழ்த்துகள் ஷேன் வாட்சன்

ஒரு வீரர், தனது உடலில் எத்தனை காயங்கள் ஏற்பட்டாலும், களத்தில் ரத்தம் சிந்தினாலும், மீண்டும் மீண்டும் அதனை வெளிக்காட்டாமல் போராடும் மனநிலை உடையவர், ஷேன் வாட்சன். 2019ம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் இறுதி போட்டியினை வைத்து மட்டும் நான் இதனை கூறவில்லை. தொடக்கத்திலிருந்து, பல காயங்களால், பல வரலாற்று சிறப்புடைய போட்டிகளை தவற விட்ட நபர். பல காயங்கள் அவரை, வேறு விதமாக செதுக்கியது.

ஷேன் வாட்சன், ஜூன் 17, 1981ம் ஆண்டில், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியாவில் பிறக்கின்றார். தனது சிறு வயதிலிருந்தே, கிரிக்கெட் மீது பெரும் ஆர்வம் கொள்கின்றார். அதன் காரணமாக, பேட்டிங் மற்றும் வேகப்பந்து வீச்சு என இரண்டிலும் தேர்ச்சி பெறுகின்றார். தனது, சீரான வேகப்பந்து வீச்சிற்காக 2002ம் ஆண்டில் பௌலிங் ஆல் ரௌண்டராக அணியில் சேர்க்கப்படுகின்றார்.

உலக சிறப்பு பெற்ற ஸ்டீவ் வாக்'கிற்கு மாற்றாக இவர் அணியினுள் சேர்க்கப்படுகின்றார். தொடக்கத்தி மிகவும் சிறப்பான ஆட்டங்கள் வெளிப்படுத்திகின்றார். ஆனால், தொடை எலும்புகளில் ஏற்பட்ட காயம், 2003ம் ஆண்டின் சர்வதேச கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பங்குபெற இயலாமல் செய்தது. அவருக்கு மாற்றாக ஆண்ட்ரே சைமண்ட்ஸ், அணியினுள் சேர்க்கப்படுகின்றார்.

ஒரு ஆண்டிற்கு பின், 2004-05 ஆஸ்திரேலியா கிரிக்கெட் சீசனில், ஒரு நாள் கிரிக்கெட் அணியினுள் இடம் பெறுகின்றார். அதே தருணத்தில், பாக்கிஸ்தான் எதிரே, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், தனது கால்தடத்தை பதிக்கின்றார், 5வது பந்துவீச்சாளராக. அப்போதைய காலகட்டத்தில், அவர் பௌலிங் ஆல் ரௌண்டராக, அணியில் சேர்க்கப்பட்டதால், தனது இடத்திற்கென பல போட்டிகள் இருந்தது. அதிலும், குறிப்பாய் 2000ங்களில் திகழ்ந்த ஆஸ்திரேலியா அணி, உலக அளவில் எவ்வாறு சிறப்புடைய அணி என்பது அனைவரும் அறிந்திருப்பீர். அதனை மீறி போராடினார்.

2005ம் ஆண்டின் ஆஷஸ் தொடரில் அணியினுள் சேர்க்கப்படுகின்றார். இது வரை நடந்த ஆஷஸ் தொடர்களில், மிகவும் சிறந்த ஆஷஸ் தொடர் என கருதப்படும் இத்தொடரில் 5வது பந்துவீச்சாளராக சேர்க்க, இவர் ஆவலுடன் காத்திருந்தார். ஆனால், அதற்கு முன், உலக 11 அணியிற்கு எதிரே விளையாடிய போட்டியில், தனது தோள்பட்டையை சரித்துக்கொண்டார். அதனால், இவ்வாண்டின் இறுதி வரை, தான் அணியினுள் இடம் பெற இயலவில்லை.

2006ம் ஆண்டில், தனது கிரிக்கெட் வாழ்வில் ஓர் மாற்றம் என்றே கூறலாம். 2006ம் ஆண்டின் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், கில்கிறிஸ்ட்டுடன் இனைந்து ஒப்பனராக களமிறக்கப்பட்டார். முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பியிருந்தாலும், மூன்றாவது போட்டியில், தனது தேர்வினை சேரி செய்தார்.

ஆனால், காயங்கள் அவர் வாழ்வில் கூடைப்பந்து விளையாடியது. 2007ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரில், சூப்பர் 8 சுற்றில், முதல் 2 போட்டிகளை தவற விட்டார். ஆனால், பின்னர், தனது தரமான ஆட்டத்தினால், அரை இறுதி சுற்றை அடைந்தது ஆஸ்திரேலியா அணி. 2007ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில், பல போட்டிகளில் இடம் பெறவில்லை. மீண்டும் காயங்கள் விளையாட, இம்முறை இவர் காயங்களை எதிர்த்து விளையாட தொடங்கினார்.

2010ம் ஆண்டில், பங்களாதேஷ் அணியிற்கு எதிரே, 185 ரன்கள் அடிக்கின்றார். சேஸிங்கில், தனிப்பட்ட நபரின் அதிக ஸ்கோர், மற்றும் பௌண்டரிகளால் அதிக ரன்கள், தனிப்பட்ட ஆஸ்திரேலியா வீரரின் அதிக ஸ்கோர் என பல சாதனைகளை படைக்கின்றது.

2012ம் ஆண்டில் நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில், தொடரின் நாயகன் பட்டத்தை பெறுகின்றார். அத்தொடரில், தொடர்ச்சியாக 4 போட்டிகளில் 4 ஆட்ட நாயகன் விருதுகளை பெறுகின்றார். அதுமட்டுமின்றி, தொடரில் அதிக ரன்கள் அடித்தது இவர் தான், 2வது அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியது இவர் தான். உச்சகட்ட ஆட்டத்தில் திகழ்ந்த காலம்.

2011ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரை, 20 ஓவர் கிரிக்கெட்டில், சிறந்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்தார். 2015ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரில், 3 அரை சதங்களை அடிக்க, ஆஸ்திரேலியா அணியினை இறுதி போட்டி வரை அழைத்து சென்றது. கோப்பையும் ஜெயித்தது.

2016ம் ஆண்டில், 20 ஓவர் கிரிக்கெட்டில், 124 ரன்களை அடிக்கின்றார். தனது அதிக ஸ்கோராக அமைகின்றது. அதன் காரணமாக 4 மாதங்களுக்கு, இவர் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் தலை சிறந்து பேட்ஸ்மேனாக விளங்குகின்றார். ஆனால், அதே ஆண்டில், அணைத்து வித கிரிக்கெட் தொடர்களிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

இப்போது, வெளியூர்களில் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே பங்குபெறுகின்றார். நாம் தெருக்களில் அல்லது நமது இடத்தில உள்ள மைதானங்களில் கிரிக்கெட் விளையாடும் போது, நாம் கூறும் ஓர் சட்டம், முதலில் பேட்டிங் செய்தவர்கள் இறுதியில் தான் பந்துவீச வேண்டும் எனவும் இறுதியில் பேட்டிங் இறங்கியவர்கள் முதலில் பந்துவீச வேண்டும் என்று வைப்போம். அதனை மீறினால் கடுமையாக சண்டையிடுவோம். ஆனால், இவ்வாறு உள்ள தடங்களை உடைத்தவர் ஷேன் வாட்சன். இவர் பல முறை, முதலில் பேட்டிங் செய்து, அதே போட்டியில் முதல் ஓவரில் பந்துவீசுவதற்கும் களமிறங்குவார்.

இதனை பற்றியும் நான் கூறாமல் இருத்தல் நன்றல்லது. 38 வயது காலத்தில், ஏதேனும் உள்நாட்டு அணியிற்காக, அதிலும் தனது நாடு அல்லாது, வேறு உள்நாட்டு கிரிக்கெட் அணியிற்காக, தன மீது நம்பிக்கை வைத்த ஓர் காரணத்திற்காக, இறுதி போட்டியில், கால் முட்டியில் இரத்தம் சிந்த சிந்த அதனை சிறிதும் வெளிக்காட்டாமல் விளையாடினார். இரண்டு நாட்களுக்கு பிறகு, தனது கால்களில் இரத்தம் கொட்டியதும், அப்போது தையல் இட்டதும் சமூக வலைத்தளங்களின் மூலமாக தெரிய வர அனைவரும் கண்ணீர் விட்டனர். தான் நேசிக்கும் ஓர் துறையிற்காக, இவ்வித எல்லையாக இருந்தாலும் அதனை சிறிதும் பொருட்படுத்தாது அடைய முயறிச்சிக்கும் இவருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

   

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood