வேண்டப்பட்ட தருணத்தில் வாங்கி தந்த வெற்றி
ஆசிய கண்டத்தை சேர்ந்த இரு அணிகளான பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள், ஒரு ஆண்டிற்கு முன், உலகக்கோப்பை தொடரில் மோதியது. ஒரு புறம் இந்திய அணியிடம், இறுதி ஓவரில் தோல்வியடைந்த ஆஃப்கானிஸ்தான் அணி. மறுபுறம், ஆஸ்திரேலியா அணியிற்கு எதிரே, எங்களாலும் உங்களை போன்று விளையாட முடியும் என்று எடுத்துரைத்த பங்களாதேஷ் அணி. ஆஃப்கானிஸ்தான் அணியிற்கு, அரை இறுதி சுற்றினை அடையும் வாய்ப்பு உடைந்து நொறுங்கி விட, மறுபுறம் அரை இறுதி சுற்றிற்கென போராடும் பங்களாதேஷ் அணி. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போரை பற்றி இப்பதிவில் காண்போம்.
சௌதாம்ப்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியிற்கு எதிராக விளையாடிய போட்டியை போன்று, இப்போட்டியிலும் சுழற்பந்து வீச்சிற்கு ஓர் பெரிய பங்கு உண்டு என புரிந்து கொண்டு, சென்ற போட்டியை போன்று, பங்களாதேஷ் அணியை ஓர் சிறிய ஸ்கோரில் அடக்கி, அச்சிறு இலக்கை அடைந்து வெற்றிபெற்று விடலாம் என்று நினைத்தார்கள். அதற்கு ஏற்ப, தொடக்கத்தில் லிட்டான் தாஸின் விக்கெட்டையும் கைப்பற்றியது ஆஃப்கானிஸ்தான் அணி. ஆனால், பங்களாதேஷ் அணி மிகவும் தந்திரசாலிகள். அவர்களின் எண்ணமும், செயல்பாடும் மிகவும் சாதுர்யமாய் இருக்கும். உள்ளே களமிறங்கினார், பங்களாதேஷ் அணியின் சிறப்பு ஆட்டக்காரர், ஷாகிப் அல் ஹாசன். இத்தொடரில், பங்களாதேஷ் அணியின் அதிக ரன் குவிப்பாளர், ஷாகிப் அல் ஹாசன். அன்றும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின், அனுபவம் உள்ள வீரர் என்பதை மிகவும் நிரூபிக்கும் பொருட்டு, சிறிது நிதானத்துடன் விளையாடினார். அரை சதத்தை எட்டினார். பிட்சில், பந்து வழக்கத்தை விட, சற்று நின்று பேட்ஸ்மேனை நெருங்கியது. அதனால், 10 ஓவர்களுக்குள் 40ல் இருந்து 50 ரன்கள் வரை குவித்தால் போதுமானது, என அறிந்து அதற்கு ஏற்ப நன்கு செயல்பட்டனர். இவரை கடந்து, முஷ்ஃபிகுர் ரஹீம், சிறிது நேரம் கடைபிடித்து விளையாட, அவரும் அரை சதம் குவித்தார். அரை சதம் குவித்தவுடன் வீழ்த்தப்பட்டார் ஷாகிப். ஆனால், முஷ்ஃபிகுர் ரஹீம், சற்று நேரம் நின்று, பின்னர் கடைசியில் உள்ள ஓவர்களில் சிறிது அதிரடியாக விளையாடினார். இவருடன் இனைந்து, மொஸாடெக் ஹொசைன் சில பௌண்டரிகளை குவித்தார். இறுதியில் 262/7 எனும் ஸ்கோரை அடைந்தார்கள். ஆஃப்கானிஸ்தான் அணியின் சார்பாக, முஜீப் உர் ரஹ்மான் மிகவும் சிறப்பாக பந்துவீசினார். ஆனால், அவருடன் இனைந்து வேறு எவரும் மிக சிறப்பாக பந்துவீசவில்லை. பங்களாதேஷ் அணியின் அதிக ஸ்கோர் குவிப்பாளர் - 83(87).
ஆஃப்கானிஸ்தான் அணியை பொறுத்த வரை, "இந்த இலக்கு ஒன்றும் பெரிது அல்ல. இதனை அடையும் பலம் நம்மிடம் உள்ளது", என நம்பியிருந்திருப்பார்கள். ஆனால், பங்களாதேஷ் அணி அவையனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தது. முதலில், நாம் புரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம், அதிரடி ஆட்டம் ஆஃப்கானிஸ்தான் அணியிடமிருந்து எதிர்பாராமல் இருப்பது நன்று. சற்று பொறுமையாக விளையாடும் அணி. அதற்கு ஏற்ப, பங்களாதேஷ் அணியும், நெருக்கடியான லெங்தில் பந்துவீச, தடுமாறியது ஆஃப்கானிஸ்தான். ஷாகிப் அல் ஹாசன், பேட்டிங் மற்றும் அல்ல பந்துவீச்சில் சிறப்பாக திகழ்ந்தார். 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 2011ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரில், யுவராஜ் சிங் அயர்லாந்து அணியிற்கு எதிரே ஆடிய ஆட்டம் கண்முன் வந்து சென்றது. ஒரே போட்டியில் 50 ரன்களும் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய மற்ற வீரர். 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது ஆஃப்கானிஸ்தான் அணி.
வேண்டப்பட்ட தருணத்தில் வாங்கி தந்த வெற்றி என நான் குறிப்பட்டது பங்களாதேஷ் அணியின் வெற்றி. ஆட்ட நயன் விருதை பெற்றது - ஷாகிப் அல் ஹாசன் ( 51(69) & 5/29))
Comments
Post a Comment