பொளக்கும் பாகிஸ்தான் - பிளந்தது நியூஸிலாந்து

ஒரு புறம் வெற்றி பசி, மறுபுறம் வெற்றியை தட்டிச்செல்ல காத்திருக்கும் கழுகு கூட்டம். அரை இறுதி சுற்றை அடையும், ஓர் ஓட்டப்பந்தயம் போட்டி. ஓட்டப்பந்தயம் என்றாலே, பல வீரர்கள் களத்தில் போட்டியிடுவர். வீரர்கள் இல்லையெனில், அதனை போட்டியென்றே கருத கூடாது. அவ்வாறு, 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றை அடையும் பொருட்டு பல அணிகள் போட்டியிடும் தருணத்தில் இவ்வாறு ஓர் போட்டி.

அவ்விரு அணிகள் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான். வெற்றி பசி கொண்ட அணி = பாகிஸ்தான், அப்போது கழுகு கூட்டம் = நியூஸிலாந்து. ஆம், இவ்விரு அணிகள், எட்ஜபாஸ்டன் மைதானத்தில் மோதியது. இதற்கு முன், தோல்வியை பார்க்காத நியூஸிலாந்து அணி. மறுபுறம், வெற்றி என்கிற சொல்லை குறிக்கோளாக கொண்ட பாகிஸ்தான் அணி. 

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அன்று, மழையின் காரணமாக, விக்கெட்டில் ஸ்விங் மற்றும் வேகம் இருந்தது. நியூஸிலாந்து அணியின் ஒப்பனர்களும், சொல்லும்படி சிறப்பான ஆட்டத்தை இத்தொடரில் வெளிப்படுத்தவில்லை. இவ்விரண்டு உண்மைகளையும் புரிந்து கொண்டு, பாகிஸ்தான் அணி தங்கள் கைவசம் ஆக்கியது. அன்றும், இரு ஒப்பனர்களான மார்ட்டின் கப்டில் மற்றும் கொலின் மன்றோ சொற்ப ரங்களில் வெளியேறினார்கள். ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் முஹம்மத் அமீரின் பந்துவீச்சு மிகவும் அருமையாக அமைந்தது. இருவரும் குட் லெங்த்தில், ஸ்டம்ப் லைனில் பந்துவீசி, அதனை உள்ளும் வெளியும் திருப்பினர். சர்ஃபராஸ் அஹ்மதின் எனும் வழிகாட்டி, நன்கு வழிநடத்தினார். பல ஓவர்களுக்கு, ஸ்லிப் திசையில் ஃபீல்டரைகளை நிற்க வைத்து வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை மாற்றி மாற்றி அமைத்தார். அதிலும், ரோஸ் டெய்லரின் விக்கெட் , மிகவும் அற்புதமாக இருந்தது. ஸ்லிப் திசையில் ஓர் ஃபீல்டரை நிறுத்து, ஷாஹீன் அஃப்ரிடி, ஸ்டம்ப் லைனில், குட் லெங்தில், சற்று நான்காவது ஸ்டம்ப்பை நோக்கி செல்லும் வாறு, பந்துவீசினார். அதனை, தடுக்க முயன்ற ரோஸ் டெய்லர், மட்டையின் ஓரத்தில் அடித்து, சர்ஃபராஸ் அஹ்மத் டைவ் செய்து பந்தினை பெற்றுக்கொண்டார். காணே வில்லியம்சனின் விக்கெட்டும், ஷடப கானின் சுழற்பந்து வீச்சில், ஷாட் ஒன்றை அடித்து முடித்தபின், பந்து வேகமின்றி அவரின் மட்டையின் ஓரப்பகுதியை அடித்து கீப்பரிடம் சென்றது. இவ்வாறு, பாக்கிஸ்தான் அணியின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால், நீஷம் மற்றும் கிராண்ட்ஹோம், மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். அவர்களும் சொதப்பியிருந்தால், அன்றும் நடந்திருப்பவை வேறு. நீசம் சிறிது நிதானத்துடன் விளையாட கிராண்ட்ஹோம், தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நீஷமின் திட்டம், கடைசி 5 ஓவர்களில் வேகத்தை கூட்டுவது என்று தான். அது வரை, தவறான பந்துகளை, குறிவைத்து தாக்க வேண்டும் என்றும், தேவையற்ற ஷாட்டுகளை அடிக்க வேண்டாம் என்றும் தான் இருந்தது.இருவரும் அரை சதங்கள் குவித்தனர். குறிப்பாக, நீஷம் 97 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் நிற்க, இறுதியில் 237/6  எனும் ஸ்கோரை அடித்தார்கள். பாகிஸ்தான் அணியை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான ஸ்கோர்.

பாகிஸ்தான் அணி பேட்டிங்கை மேற்கொள்ள, காலத்தில் இறங்கினர். தொடக்கத்தில் இரு விக்கெட்டுகள் மட மட வென்று விழுந்தாலும், பின்னர் உள்ள பாக்சிடனின் தலைசிறந்த பேட்ஸ்மேனான பாபர் ஆசாம், முஹம்மத் ஹஃபீஸ் மற்றும் ஹாரிஸ் சொஹைல் மிகவும் சிறப்பாக விளையாடினர்.ஆனால், எனக்கு தனிப்பட்ட முறையில், ஃபக்கர் சமானின் வீழ்ச்சி மிகவும் திருப்திகரமானது அல்ல. காரணம், அவர் விளையாடிய ஷாட். போல்ட் கால்களை நோக்கி பந்துவீச, கால்களில் எவ்வித மாற்றமும் ஏறி நின்ற இடத்திலிருந்து விளையாடினார். முன் கால்களை சற்று விலக்கி, டீப் லெக் திசையில் அடித்திருந்தால், சிக்ஸர் அல்லது பௌண்டரி கிடைத்திருந்திருக்கும். ஆனால், தவற்று நேர்ந்தது. அதனை தாண்டி, வேறு எங்கும் தவறு செய்ய வில்லை பாகிஸ்தான் அணி. நியூஸிலாந்து அணியிற்கு எதிரே தங்கள் கைகள் மேலோங்கி நின்றது. பாபர் ஆசாம் மீது இருந்த குற்றசாட்டு, தனக்கு கிடைக்கும் தொடக்கத்தை நன்கு பயன்படுத்த மாட்டார் என்று. அன்று, அதனை போக்கி, மிகவும் அருமையாக விளையாடினார். அவர் விளையாடிய கவர் ட்ரைவ் ஷாட்டுகள், மிகவும் நேர்த்தியாக இருந்தது. சதம் குவித்தார். ஹாரிஸ் சொஹைலின் அதிரடி ஆட்டமும் விதிவிலக்கு அல்ல. தேவையான தருணத்தில், மிகவும் துணிச்சலான ஓர் ஆட்டம். அவர் அரை சதம் குவித்தார். இறுதியில், 5 பந்துகள் மற்றும் 6 விக்கெட்டுகள் கையில் வைத்து வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி. முப்பெரும் பிரிவுகளிலும் பாகிஸ்தான் அணியின் கொடி பறந்தது.

ஆட்ட நாயகன் விருதை பெற்றது - பாபர் ஆசாம்.                           

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?