வலிகளுக்கு ஆறுதல் அளிக்கும் உலக சாதனை
2007ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் முதல் கட்ட சுற்றிலேயே இந்திய அணி வெளியேறிய சம்பவத்தைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர். அதன் காரணத்தினால் வெளிவந்த எதிரொலிகள், மக்களின் மத்தியில் வெடித்த புரட்சிகள், அப்புரட்சிகளால் வீரர்களுக்கு ஏற்பட்ட சேதாரம், என பல சம்பவங்களை கூறலாம். இதன் அடிப்படையில், இந்திய கிரிக்கெட் வீரர்களின் வீடுகளுக்கு பலத்த காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஒரு வார காலத்திற்கு, எவரும் வெளிவரவில்லை. இந்திய அணியின் அப்போது பயிற்சியாளராக பணிபுரிந்த கிரெக் சாபெல்லும், தனது அண்ணனான இயன் சாபெல்லும், டெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டும் என கருத்துகள் கூற, பல சாரார்கள் அதற்கு கொடி பிடித்தனர். டெண்டுல்கரும், தனது கிரிக்கெட் வாழ்விலிருந்து ஓய்வு பெற்றுவிடலாம், என்கிற எண்ணத்திற்கு ஆழ்த்தப்பட்டார். ஆனால், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரரான பிரையன் லாரா, டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்வு இன்னும் சில சம்பவங்களுடன் மிச்சம் உள்ளது என ஆறுதல் அளித்தார். ஆனால், அப்போது நாம் எதிர்கொண்ட இன்னல்கள் ஏராளம். அதனை சரிசெய்வதற்கு இன்னொரு உலகக்கோப்பை வெற்றியே தேவையாய் இருக்கும். அதற்கு இப்போது நான் கூறவுள்ள சம்பவம் சிறிதும் ஈடாகாது என்றாலும், நாம் பெற்ற காயங்களுக்கு மருந்தளிக்குமாறு அமைந்தது.
2007ம் ஆண்டு உலகக்கோப்பை முடிவிற்கு பின், இந்திய அணி பங்களாதேஷ் அணியிற்கு எதிராக ஓர் கிரிக்கெட் தொடர் விளையாடி, அதில் வெற்றிபெற்றனர். அந்த வெற்றியிற்கு பின்னர், தென் ஆஃப்ரிக்கா'விற்கு எதிராக, ஐயர்லாந்து நாட்டில் "ஃபியூச்சர் கப்" (எதிர்கால கோப்பை) எனும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி விளையாடியது. பங்களாதேஷ் அணியிற்கு எதிராக விளையாடிய தொடரில், டெண்டுல்கர் இடம்பெறவில்லை. தென் ஆஃப்ரிக்கா தொடரில் தான் அணியில் இடம் பெறுகின்றார். மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடராகும். முதல் போட்டியில், தென் ஆப்ரிக்கா மிக எளிதாக வெற்றிபெற, இரண்டாம் போட்டியை பற்றியும், அதில் நிகழ்த்திய உலகசாதனையை பற்றியும் இனிவரும் பக்கங்களில் நாம் காண்போம்.
13 வருடங்களுக்கு முன், இந்நாளில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்கத்தில், தென் ஆஃப்ரிக்கா அணி, 3 விக்கெட்டுகளை உடனுக்குடன் இழக்க, இந்திய அணியின் கைகள் மேலோங்கி நின்றது. அதில் குறிப்பாக வீழ்த்தப்பட்டது அணியின் தலைவரான ஜாக்கஸ் காலிஸ். ஜாஹீர் கான் மற்றும் ஆர்.பி.சிங், தென் ஆஃப்ரிக்கா அணியிற்கு மிகுந்த தொல்லை வழங்கினர். அங்கிருந்து மீண்டு வர வேண்டும் என்கிற நிலை, தென் ஆஃப்ரிக்கா அணியிற்கு. மீண்டு எழுந்தது. மோர்னே வெயின் வைக் மற்றும் மார்க் பௌன்ச்சர் மிகவும் நிதானத்துடன் விளையாடினர். நேரம் கடைபிடித்தாலும், வெற்றி பெற வேண்டிய இலக்கை வழங்க வேண்டும் என்கிற மனவலிமை, சிறிதும் குறையுமில்லை இருந்தது. அழுத்தமுள்ள, நெருக்கடியான தருணங்களில் இப்போது சொதப்பும் தென் ஆஃப்ரிக்கா அணியினை போன்று அல்லாது அப்போது, மிகவும் அழகாய் கையாண்டனர். இருவரும் அரை சதங்கள் அடிக்க, ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது. ஆனால், இருவரையும் இறுதிவரை விட்டு வைத்திருந்தால், நிச்சயம் 250க்கும் மேற்பட்ட இலக்கை இந்திய அணியிற்கு வழங்கியிருப்பர். ஆனால், அதை நடக்கவிடாமல், இருவரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றி, 226/6 என தடுத்து நிறுத்தியது இந்திய அணி. தென் ஆஃப்ரிக்கா அணியின் சார்பாக மோர்ன் வான் வைக் 126 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார்.
இந்திய அணி பேட்டிங்கை மேற்கொள்ள களமிறங்கியது. சென்ற போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே, தொடரை கைப்பற்ற ஓர் வாய்ப்பு கிடைக்கும் என நிலையை புரிந்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கிடைக்கும் வெற்றிகள், இந்திய அணியிற்கு நம்பிக்கை ஊட்டும். டெண்டுல்கர் மற்றும் கங்குலி, களமிறங்கினர். கங்குலி மிக மிக நிதானமாக விளையாட, டெண்டுல்கர் அதிரடி ஆட்டத்தை கடைபிடித்தார். பௌண்டரிகளை மிக எளிதில் குவிக்க,
"வயதானாலும், உனது பேட்டிங் சிறிதும் தேய்ப்படவில்லை" என படையப்பா திரைப்படத்தின் வசனம் இங்கு நன்கு பொருந்தியது. தான் அடித்த புள் ஷாட்டுகள் மிகவும் அழகாக இருந்தது. 10 ஓவர்கள் முடிவடைந்ததற்கு பின், பிட்சில் பந்தன் வேகம் குறைய தொடங்கியது. இதன் காரணமாக, டெண்டுல்கரின் வேகமும் தடைபட்டது. ஆனால், தனது சிறப்புள்ள ஆட்டம் சிறிதும் தடைப்படவில்லை. மிகவும் நேர்த்தியாக விளையாடினார். அதிலும், 18வது ஓவரில், ஆண்ட்ரே நெல் வீசும் வேகப்பந்தை, ஹூக் ஷாட்டின் மூலம் சிக்ஸர் அடிப்பார். அவையெல்லாம், நிறைவு செய்தல் என்பது மிகவும் கடினமாய் இருக்கும். ஆனால், மிக எளிதாக, அதனை நிகழ்த்துவார். அதே ஓவரின், இறுதி பந்தில், ஆண்ட்ரே நெல் வீசிய பந்தினை, மிட் ஆஃப் திசையில் நின்றுக்கொண்டிருந்த ஃபீல்டரிடம் அடித்துவிட்டு வெகு விரைவாக ஒரு ரன் எடுக்க, அதனை ரன் அவுட் அடிக்க முயன்று, மறுபுறத்தில் உள்ள ஸ்டம்ப்பை தவறி, காப்புப்பிரதியிற்கு ஒருவரும் இல்லாமல், லெக் திசையில் உள்ள பௌண்டரியை அடையும். அதனை காரணமாக, 5 ரன்கள் கிடைக்க, அவ்வைந்து ரன்களின் மூலம், தனது 79வது ஒரு நாள் அரை சதத்தை அடைந்தார் டெண்டுல்கர். இவ்வாறு அடித்த அரை சதத்தின் மூலம், ஒரு நாள் கிரிக்கெட்டில் 15000 ரன்களை குவிக்கின்றார், சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில், முதல் தருணம், ஒரு நாள் கிரிக்கெட்டில் 15000 ரன்களை குவிக்கும் வீரராய் மாறுகின்றார். நடைமுறை காலத்திலும், அதனை முறியடிக்கவில்லை. பிற்காலத்தில் அதனை வேறு எவராவது முறியடித்தாலும், இவருடைய பெயர், உலகெங்கும் ஒலிக்கும். இதையே, நான் வலிகளுக்கு மருந்தளிக்கும் ஓர் உலக சாதனை என்று கூறியது.
இங்கிருந்து போட்டி இந்திய அணியின் பக்கம் திரும்பியது. டெண்டுல்கர் சென்ற போட்டியை போன்று, இப்போட்டியிலும் தனது சதத்தை தவற விட்டார். இடையில் சில விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டாலும், யுவராஜ் மற்றும் தினேஷ் கார்த்திக், பதட்டமின்றி போட்டியை முடித்தார். ஆட்ட நாயகன் விருதை பெற்றது, சச்சின் டெண்டுல்கர்.

Comments
Post a Comment