கிரிக்கெட் உலககோப்பையின் பிறப்பு

கிரிக்கெட்டில் உலகக்கோப்பை என்கிற தொடருக்காகவே அணைத்து அணிகளும் தங்களின் முழு வீச்சை காண்பிக்க பயிலுவர். அவ்வாறு உள்ள மிகவும் பெரிய தொடர் என்றே கூறலாம். நான்கு ஆண்டுகளுக்கு ஓர் முறை தான், நடக்கும். இதில், கிரிக்கெட்டை சேர்ந்த, தலைசிறந்த அணிகள் ஒன்றுக்கொன்று இனைந்து போராடி, அதில் இவ்வணி இறுதி போட்டியை அடைந்து வெல்லுதோ, அவ்வணியே கோப்பையை கைப்பற்றும். ஒவ்வொரு போட்டியும், வரலாற்றின் பக்கங்களில் இடம் பெரும். இது கிரிக்கெட்டில் மட்டும் அல்ல, அணைத்து விளையாட்டுகளிலும் உலகக்கோப்பை எனும் தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஓராண்டு நடைபெறும். 

கிரிக்கெட்டின் முதலாம் உலகக்கோப்பை தொடர், இன்று, 1975ம் ஆண்டில், இங்கிலாந்தில் தொடங்கியது. கிரிக்கெட்டின் கண்டுபிடிப்பாளர் இங்கிலாந்து தான். அதன் காரணமாக, இங்கிலாந்து நாட்டில் தொடக்கப்படுகின்றது. ப்ரூடென்ஷியல் அஷ்யூரன்ஸ் கப்பணி எனும் நிறுவனம் இதற்கு ஸ்பான்சர் செய்வதால், இக்கோப்பையை ப்ரூடென்ஸ் கோப்பை '75 என அழைக்கப்படுகின்றது.

இப்போது 10 அணிகள், இதற்கு முன் விளையாடிய 6 தொடர்களில் 15 அணிகள், ஆனால் முதல் உலகக்கோப்பையில் வெறும் 8 அணிகள் மட்டுமே பங்குபெறுகின்றது. அதாவது, இப்போதைய காலகட்டத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பையின் அடிநாதம் 1975ம் உலகக்கோப்பையை கண்டு தான் எடுக்கப்பட்டுள்ளது. அதிலும் அப்போது இருந்தது வெறும் 6 முழு நாடுகள்( டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகள்). மீதம் 2 நாடுகள், ஐசிசி'யின் அழைப்பினால் வந்தவை. அவ்வணிகள் - இலங்கை, மற்றும் கிழக்கு ஆஃப்ரிக்கா. தென் ஆஃப்ரிக்கா அணி பங்குபெறுவதாய் இருந்தது, ஆனால் அந்நாட்டில் நிலவரத்தில் இருந்த கருப்பு வெள்ளை இனப்பிரச்சனையின் காரணமாய் பங்குபெற இயலவில்லை. அப்போதைய காலகட்டத்தில், இலங்கை அணி ஓர் அஸோஸியேட் அணி என்றே புரிந்துக்கொள்ளவும். அப்போது விளையாடிய காலகட்டத்தில், ஒரு நாள் போட்டிகள் 60 ஓவர்களுக்கு நடைபெற்றது. மற்றும் சிவப்பு நிரப்பந்துகளுடன், வெள்ளை உடையணிந்து விளையாடப்பட்டது. இரு குழுவாக பிரிக்கப்பட்டு, அதில் நான்கு நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு. அதில் குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் போட்டியிட்டு, அப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியே அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். பின்னர், அதில் வெற்றி பெறுவோர் இறுதி சுற்றை அடைவர். அதிலும், வெற்றிபெற்றால் கோப்பையை கைப்பற்றுவர்.

அன்று முதல் நாள், ஜூன் 7ம் தேதி அன்று, நன்கு போட்டிகள், நான்கு வெவ்வேறு மைதானங்களில் நடைபெற்றது. முதல் போட்டி, இந்தியா அணி மற்றும் இங்கிலாந்து அணியிற்கு இடையே, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாட்டிற்கும் மற்றும் அந்நாட்டிற்கு கீழ் அடிமையாய் இருந்த நாட்டிற்கும் நடைபெற்ற போட்டி இது, என்றே அப்போது காணப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அப்போதைய காலகட்டத்தில் சிறப்பு வாய்ந்த, டென்னிஸ் அம்மிஸ் 147 பந்துகளில் 137 ரன்கள் குவிக்கின்றார். அதன் காரணமாக 334 ரன்கள், 60 ஓவர்களில் முடிவில் குவிக்கப்படுகின்றது. அப்போதைய காலகட்டத்தில், அதிகபட்ச ஒரு நாள் கிரிக்கெட் ஸ்கோர் அது.

அதனை இந்திய அணி திரும்ப அடிக்க வேண்டும். ஆனால், இவ்விலக்கினை அடிப்பது மிகவும் கடினம் (பந்துவீச்சில் தரம் மிகவும் உக்கிரமாய் திகழ்ந்த காலகட்டம் அது), என நினைத்துக்கொண்டு, உணர்ந்து, மிகவும் பொறுமையாக விளையாடினர் இந்திய அணி. வரலாற்று சிறப்பு மிக்க சுனில் கவாஸ்கரின் வரலாற்று சிறப்பு மிக்க, பொறுமையான ஒரு நாள் கிரிக்கெட்டின் டெஸ்ட் இன்னிங்ஸ் என்றே கூறலாம். முழுதாக விளையாடி, அதில் 174 பந்துகளில் வெறும் 36 ரன்கள் அடித்தார். அப்போதைய இந்தியாவின் வீரர்கள் அனைவரும் தரையோரமாய் மட்டுமே விளையாடுவர் என கதைகள் உண்டு. அதற்கு ஏற்ப விளையாடினார் சுனில் கவாஸ்கர். இதனைக்கண்ட பழைய கிரிக்கெட் வீரர் குலப்ராய் ராமச்சந்த், ககாஷ்கர் ஏதேனும் பேட்டிங் பயிற்சி எடுத்துக்கொள்கின்றார் என நினைத்ததற்கு கூறினார். இந்திய அணியின் பயிற்சியாளர், அணியின் தலைவர் வெங்கட்ராகவன் மற்றும் ஓர் ரசிகர் மிகவும் கட்டுப்படைந்தனர். நினைத்துப்பாருங்கள், இப்போதைய காலகட்டத்தில் எவரேனும் இவ்வாறு விளையாடியிருந்தால், அவரின் நிலை என்னவாயிருக்கும் என்று. ஓர் எடுத்துக்காட்டு, 2014ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை இறுதி போட்டியில் யுவராஜ் சிங்க் 21 பந்துகளில் 11 ரன்கள் அடித்தார். அதன் காரணமாய், 130 ரன்கள் மட்டுமே அடிக்க இயன்றது. அன்று, அவரை விமர்சனம் செய்து வலைத்தளங்களில் கிழித்தோர் பலர். அவ்வாறு உள்ள நிலையில், இவ்வாறு எவரேனும் விளையாடியிருந்தால் அவ்வாறு தான். தனது கிரிக்கெட் வாழ்வை மறந்திருக்க வேண்டும்..........! இந்திய அணி அதனால் 132/3 என 60 ஓவர்களில் முடிவில் அடித்தது. 

மறுபுறம் நியூஸிலாந்து அணி, 309 ரன்களை கிழக்கு ஆஃப்ரிக்கா அணியிற்கு எதிரே அடித்தது. அவர்கள் 128/8 என திருப்பி அடிக்க, நியூஸிலாந்து அணி வென்றது. அதே நாளில் ஆஸ்திரேலியா அணியும் பாகிஸ்தான் அணியும் மோதியது. அதில் ஆஸ்திரேலியா அணி 278 ரன்கள் குவிக்க, மீண்டும் அடிப்பதில் 205 ரன்கள் மட்டுமே அடித்து அணைத்து விக்கெட்டுகளை இழந்தது. மற்றும் இலங்கை மேற்கு இந்திய தீவுகள் இடையே நடைபெற்ற போட்டி. உலகின் தலைசிறந்த அணி மேற்கு இந்திய தீவுகள். எதிரணிக்கு பயம் மற்றும் விளையாடும். அதில், மேற்கு இந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் சுழன்று விழுந்தது ஸ்ரீ இலங்கை அணி. மேற்கு இந்திய தீவுகள் சிறப்பாக வெற்றிபெற்றது.

      

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood