விஸ்டென் கோப்பை, 2020 - ஓர் பார்வை
ஜூலை மாதம், 8ம் தேதி, இத்தொடர் ஆரம்பிக்க உள்ளது. 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட இத்தொடர், ஜூலை 8ம் தேதி முதல் ஜூலை 28ம் தேதி வரை அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பிடத்தக்க செய்தி, 3 மாத காலத்திற்கு பின், விளையாடவுள்ள முதல் கிரிக்கெட் தொடர். கொரோனா எனும் நோயின் காரணத்தினால், அம்மூன்று மாத தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது உள்ள சவால்கள், மைதானங்களில் கூட்டமின்றி, பல நெருக்கடியான விதிகளுடன் போட்டியிட வேண்டிய நிலை.
முதல் போட்டி - சௌதாம்ப்டன், ரோஸ் பௌல் மைதானத்தில் நடைபெறும். அம்மைதானத்தில், முதலில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளது. ஆதலால், டாஸ் வெல்லும் அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுக்க வேண்டும். முதல் இரு நாட்களுக்கு வேகப்பந்து வீச்சிற்கு மிகவும் வெள்ளைக்கோடும் பிட்சாக உள்ள சௌதாம்ப்டன் மைதானம், பின்னர் மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் நாட்களில், பிட்சின் வேகம் சிறிது குறைகின்றது. ஆதலால், பின்னர் வரவுள்ள நாட்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு, சுழற்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆதலால், வேகப்பந்து வீச்சிற்கும், சுழற்பந்து வீச்சிற்கும் உள்ள சமநிலை இருத்தல் வேண்டும். இங்கிலாந்து, சிறிது வலுவுடன் காணப்பட, மேற்கு இந்திய தீவுகள், எதிர்காலத்தை கணக்கில் கொண்டு அணிவகுப்பு அமைந்துள்ளது. ஆனால், இங்கிலாந்து நாட்டில் விளையாடுவதற்கு, அனுபவத்திற்கும் எதிர்காலத்திற்கும் உள்ள சமநிலை மிகவும் அவசியம்.
முதல் செய்தி - இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவரான ஜோ ரூட், முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெற மாட்டார். தனது, இரண்டாவது குழந்தையின் பிறப்பிற்கு, அவர் அணியினை விட்டு வெளியேறி, மருத்துவமனையில், தனது மனைவியுடன் இருக்க வேண்டும், என முடிவெடுத்து சென்றுள்ளார். அவர் இல்லாத நேரத்தில், பெண் ஸ்டோக்ஸ் அணியை வழிநடத்துவார், என செய்திகள் வெளிவந்தது.
தனிப்பட்ட முறையில், பெண் ஸ்டோக்ஸ் ஓர் நல்ல தலைவன். அவர் இதற்கு முன், ஒரு முறை, அணியினை வழி நடத்தியுள்ளார். ஆனால், இப்போது உள்ள சவால், பார்வையாளர்கள் இன்றி போட்டி விளையாடவுள்ள வீரர்களின் மனநிலையை நன்கு புரிந்து, அதற்கு ஏற்ப வழிநடத்த வேண்டும்.
ஸ்டுவர்ட் பிராட், ஓர் உளவியலாளரின் உறுதுணையில், தன்னை தயார் செய்து கொண்டிருக்கிறார். பொதுவாக எச்சிலின் உதவியால், வேகப்பந்து வீச்சாளர்கள், மிகவும் அருமையாக பந்துவீசுவர். இப்போது எச்சிலிற்கு தடை விதிக்கப்பட்டதனை குறித்து, தன் மன வலிமையை அதிகரிக்கின்றார்.

Comments
Post a Comment