ஐபிஎல் 2020 நிச்சயம் நடைபெறும் !

நாம் அனைவரும் அறிந்திருப்போம், கொரோனா எனும் கொடிய நோயின் பாசக்கயிற்றில் , இவ்வுலகமே மாட்டிகொண்டிருக்கிறது. இந்நோயின் காரணத்தினால், உலகில் ஏராளாமானோர் உயிர் மாண்டனர். இதன் காரணத்தினால், பல விளையாட்டு தொடர்களை, தாமதப்படுத்தி வைத்துள்ளனர். அதில், ஓர் தொடர் தான், இந்திய நாட்டை சேர்ந்த, ஐபிஎல் கிரிக்கெட் தொடர்.

ஏப்ரல் - மே மாத காலகட்டத்தில், இத்தொடர் நடைபெறும் என அனைவரும் நம்பி, எதிர்பார்த்து, அதற்கு ஏற்ப அட்டவணைகளை தயார் செய்து, இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. அனைவரும் காத்திக்கொண்டிருக்க, ஒரு வார காலமே இருக்கும் நிலையில், திடீரென்று கொரோனா'வின் வீரியம் அதிகரித்தது. அதன் மீது கொண்ட அச்சத்திலும், அதன் செயல்பாடுகளையும் கண்டு, மத்திய அரசு ஓர் முடிவெடுக்கின்றது. இந்திய நாட்டை வீட்டுக்குள் தற்காலிகமாய் முடக்கி விடலாம் என்று அறிவிப்பு வெளியிட, ஐபிஎல் தொடரை தள்ளிவைக்கின்றது. 3 மாத காலத்திற்கு பிறகு, உலகில் கிரிக்கெட் மீண்டு எழ, ஐபிஎல் பற்றிய பேச்சுகள் பரவியது.

பலர், இவ்வாண்டின் ஐபிஎல் தொடர் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது என்றும், இதற்கு அடுத்த ஆண்டிலேயே இத்தொடர் நடைபெறும் என்றும் மக்களிடையில் வதந்திகள் பரவியது. ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான சௌரவ் கங்குலி, ஐபிஎல் தொடரை நடத்துவதில் ஆணித்தரமாக இருந்தார். அதன் பலனாய், பல ஆலோசனைகள் எழுப்ப, காலங்கள் கடந்தது.

ஆனால், சிறிதும் நம்பிக்கையை இழக்க வில்லை. இவ்வாண்டு செப்டம்பர் மாத காலத்திலிருந்து நவம்பர் மாத காலம் வரையில் உள்ள இடைவெளியில் நடத்தி விடலாம் என எண்ணினர். ஆனால், அந்த தருணத்தில் குறிக்கப்பட்டுள்ள 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் நிலையைப் பற்றி சிறிதும் தகவல் கிடைக்கவில்லை. அத்தொடர், நடைபெறாவிட்டால், ஐபிஎல் தொடரை அக்காலகட்டத்தில் நடத்தி விடலாம், என்கிற எண்ணம் இருந்தது.

இவ்வாறு பல ஆலோசனைகளிலும், குழு கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, ஜூலை மாத தொடக்கத்தில் வெளிவந்த ஓர் தகவல், " இவ்வாண்டின் ஆசியா கோப்பை தொடர், அடுத்த ஆண்டிற்கு தள்ளிவைக்கப்படுகின்றது " எனவாகும். இப்போது, ஐபிஎல் தொடரை நடத்துவதன் எண்ணத்தில், இன்னும் ஓர் வெளிச்சம் பிறந்தது. அப்போது, இவர்கள் முடிவெடுத்தது, ஜூலை 17ம் தேதி அன்று, இதற்கு தீர்ப்பு வழங்கிவிடலாம் என தீர்மானிக்க, நேற்று நடந்த கலந்துரையாடலில், "ஐபிஎல் தொடரை செப்டம்பர் மாதங்களிலிருந்து நவம்பர் மாதத்தின் தொடக்கம் வரை உள்ள இடைவெளியில் நடத்திவிடலாம்" என்றும், அத்தொடரை அரேபிய நாடுகளில் நடத்திவிடலாம்" எனவும் முடிவெடுத்துள்ளார்கள்.

கிட்டத்தட்ட 20 ஓவர் உலகக்கோப்பை நடைபெறாது என செய்திகள் வெளிவந்தது. ஐசிசி'யின் தரப்பிலிருந்து சட்டப்பூர்வமாக அறிவிப்பு மட்டுமே வெளிவரவில்லை. அதன் தீர்ப்பு ஜூலை 20ம் தேதி, அறிவிக்கப்படும். ஆனால், ஐபிஎல் நிர்வாகம், இப்பொழுதிலிருந்தே தீவிரமாய் திட்டமிடுகின்றனர்.

4 மாத போராட்டம், இறுதியில் நிறைவடைந்தது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஓர் சக்கரை பொங்கல். அடுத்தகட்ட நடவடிக்கைகள், இனி வரும்  எதிர்பாக்கலாம்.
       

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood