ஐபிஎல் 2020 - மேலும் ஓர் தகவல்

சென்ற வாரம், நாம் அறிந்த செய்தி யாதெனில், " இவ்வாண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரை, நாங்கள் தள்ளிவைக்கின்றோம். இனி, பின் வரும் ஆண்டுகளில், இத்தொடரை நடத்துவதற்கு நாங்கள் திட்டமீட்டுளோம்" என ஐசிசி குறிப்பிட்டாதாகும். இந்த அறிவிப்பு, வெளிவந்தவுடன், பல ஐபிஎல் ரசிகர்கள், கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருந்தார்கள். காரணம், இவ்வாண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை தள்ளிச்சென்றால், தள்ளிச்சென்ற அவ்விடைவெளியில், ஐபிஎல் தொடரை நடத்த முடியும் என்பது தான்.

இதனையொட்டி, செப்டம்பர் 26ம் தேதியில், இவ்வாண்டின் ஐபிஎல் போட்டிகள், தனது வலது காலினை எடுத்து வைக்கும் என பல வதந்திகள் வெளிவந்தது. ஆனால், அவ்வாறு உள்ள நிலையில், பலரின் மனதில் இருந்த ஓர் கேள்வி, டிசம்பர் மாத காலகட்டத்தி நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா தொடரில், இந்திய வீரர்களால் எவ்வாறு பயிற்சியை மேற்கொள்ள இயலும் ??. அது மட்டுமின்றி,  பயண தடைகளை மீறி எவ்வாறு செயல்பட இயலும் ?? எனவும் கேள்விகள் எழும்பியது.

ஆனால், இவையனைத்திற்கும், ஐபிஎல் கிரிக்கெட் நிர்வாகமும், இந்திய கிரிக்கெட் வாரியமும், இந்திய நாட்டின் அரசாங்கத்துடன் இனைந்து பல ஆலோசனைகள் மேற்கொண்டு, ஓர் தீர்ப்பை வழங்கியது. அத்தீர்ப்பில், செப்டம்பர் 26ம் தேதி அன்று தொடக்கம் பெரும் ஐபிஎல் தொடரை, நாங்கள் ஓர் வாரம் முன்னுக்கு தள்ளிவுள்ளோம்.

அதாகப்பட்டது, செப்டம்பர் 19ம் தேதி அன்று, ஐபிஎல் தொடங்கும். செப்டம்பர் 19ம் அன்று தொடக்கம் பெற்று, நவம்பர் 8ம் தேதி அன்று நிறைவு பெரும் என தகல்வல்கள் வெளிவந்தது. இதனுடன், கூடுதலாய் கிடைத்த ஓர் செய்தி யாதெனில், ஆகஸ்ட் 20ம் தேதி அன்று, அனைத்து கிரிக்கெட் வீரர்களும், அரபிக் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வர். அங்கிருந்து, சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர், தங்களின் பயிற்சியை மேற்கொள்வர். இதனை ஒரு வாரம் முன்னுக்கு தள்ளிவைத்ததன் மற்ற ஓர் காரணம், ஆஸ்திரேலியா நாட்டின் விதிமுறைகளின் படி, 1அங்கு 4 நாட்களுக்கு தனிமைப்படுத்தவேண்டும். பயிற்சியி மேற்கொள்வதற்கும், உரியதாய் இருக்கும்.

ஆதலால், இந்திய ரசிகர்கள், மேலும் 57 நாட்கள் மட்டுமே காத்திருந்தால் போதும். ஐபிஎல் தொடர் நடைபெறுமா ? என்கிற கேள்வியில் தொடங்கி, செப்டம்பர் 19ம் தேதி ஐபிஎல் தொடர் நடைபெறும், என்கிற செய்தி வரை பல நிகழ்வுகள் நடைபெற்றது. ஆதலால், கொரோனா நோயின் தாக்கத்தில் பாதிப்பு அடையாமல், நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

"செப்டம்பர் மாதம், செப்டம்பர் மாதம், வாழ்வின்
துன்பத்தை தொலைத்து விட்டோம்"
    

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?