நூல் இடையில் போட்டியை வென்ற இலங்கை அணி
இலங்கை மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள், சென்ற ஆண்டு, இதே நாளன்று, உலகக்கோப்பை தொடரில் சந்தித்துக்கொண்டது. இரு அணிகளும், அரை இறுதி சுற்றை அடையும் ஓட்டத்திலிருந்து வெளியேறிய நிலையில் இருந்தது. ஆனாலும், தன்மானம் முக்கியம்மல்லவா ? அக்காரணத்திற்காக இரு அணிகளும் வெற்றியினை குறிக்கோளாக அமைத்து விளையாடினர். பலர், இப்போட்டியில் ஆர்வம் பெரிதும் இருக்காது என நினைத்து பார்வையிடாமல் விட்டுவிட, பார்வையிட்டோருக்கு தான் தெரியும், அன்று போட்டி எவ்வளவு சுவாரஸ்யத்துடன் இருந்தது என்று.
செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் இரு அணிகளும் மோதிக்கொள்ள, டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி மிகவும் அருமையாக தொடங்கினர். இரு ஒப்பனர்களுமான திமுத் கருணராடனே மற்றும் குஷல் பெரேரா, இத்தொடரில் இது வரை விளையாடியதற்கு மாறாக மிகவும் சிறப்பாக விளையாடினர். முக்கியமாய், குஷல் பெரேரா, மேற்கு இந்திய தீவுகளின் சிறப்பான பந்துவீச்சிற்கு எதிராக அசத்தினார். மிகவும் அதிரடியாக விளையாட, மறுபுறம் திமுத் கருணராட்டனே மிகவும் நிதானமாக ரன்களை குவித்தார். குஷல் பெரேரா, அரை சதத்தை குவித்தார். 16வது ஓவரில் 93 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இலங்கை அணியின் முதல் விக்கெட்டை கைப்பற்றியது மேற்கு இந்திய தீவுகள் அணி. களமிறங்கினார், இலங்கையின் எதிர்காலமான, அவிஷ்கா ஃபெர்னாண்டோ. மிக துல்லியமாக விளையாடினார் அவிஷ்கா ஃபெர்னாண்டோ. மேற்கு இந்திய தீவுகள் அணியின், மிகவும் கூரான ஆயுதம், திடீர் அரை குழிப்பந்துகள். அதனை, இவர் சமாளித்து, லாங் ஆண், டீப் மிட் விக்கெட் திசைகளில் சிக்ஸர் அடிப்பவை அனைத்தும், அருமையாய் அமைந்தது. அன்று அவர் சதம் அடித்தார். 2019ம் ஆண்டின் உலகக்கோப்பையில், ஓர் இலங்கை வீரர் அடித்த முதல் சதம் இது தான். மிக மிக அழகான ஆட்டம். அவருக்கு அடுத்து களமிறங்கியவர்கள், சில முக்கிய ரன்களை குவிக்க, 338/6 என இமாலய ஸ்கோரை குவித்தது இலங்கை அணி. அவிஷ்கா ஃபெர்னாண்டோ, அதிக ஸ்கோராக 104 ரன்கள் குவித்தார்.
இப்போதும், மேற்கு இந்திய தீவுகள் அணியின் கைகள் தான் சிறிது ஓங்கி காணப்பட்டது. காரணம், இலங்கை அணியை காட்டிலும் மேற்கு இந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சிறப்புடையதாய் அமைந்திருக்கும். இலங்கை அணியின் பந்துவீச்சு, மலிங்கா எனும் ஒருவரை மட்டுமே சார்ந்து இருந்தது. ஆதலால், வெற்றிக்காற்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் பக்கம் இருப்பதாக காணப்பட்டது. ஆனால், மலிங்கா வீசிய முதல் கட்ட ஓவர்களில், இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை அணி நன்றாக பேட்டிங்கை மேற்கொண்டதன் ஓர் முக்கிய பங்கு, இலங்கை அணியின் ஒப்பனர்களையே சாரும். இங்கு, ஒருபுறம் கிறிஸ் கெயில் தடுமாற, மறுபுறம் இரண்டு விக்கெட்டுகள், வெகு விரைவாக வீழ்த்தப்பட்டது. கிறிஸ் கெயிலும், பொறுமையின்றி தனது விக்கெட்டை எதிரணியிற்கு பரிசளித்தார். இவ்வாறு பொறுமையின்றி விளையாட, மேற்கு இந்திய தீவுகள் பரிதாப நிலையில் இருந்தது. ஆனால், அன்றைய தினத்தில், நிக்கோலஸ் பூரான் மற்றும் ஃபெபியன் ஆலன், அனைவரின் மனதையும் வென்று விட்டார்கள். இருவரும் இணையாது ஆடிய ஓர் ஆட்டம், இலங்கை அணியிற்கு வயிற்றில் புளியை கரைத்தது போன்று இருந்தது. இருவரின் இடையே இருந்த புரிதல், மிக மிக எளிதாக இருந்தது. ஒருபுறம் ஃபெபியன் ஆலன் அரை சதம் குவிக்க, மறுபுறம் சதம் அடித்தார் நிக்கோலஸ் பூரான். இருவரின் இடையே இருந்த கூற்றினை உடைத்தார்கள் இலங்கை அணி. ஆனால், பூரான் நின்றுக்கொள்ளவில்லை. போராடினார். தன்னால் முடிந்தவரை போராடினார். ஆனால் எதிர்பாராதது, நடக்கவில்லை. காரணம், 48வது ஓவரில், அன்றைய தினத்தில் அவர் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்கள், பந்துவீசவில்லை. மாறாக மெத்தியூஸ் பந்துவீச, தனது விக்கெட்டை கைப்பற்றியது இலங்கை அணி. போட்டியின் திருப்புமுனை என்றே கூறலாம். இறுதியில், 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இலங்கை அணி. நூல் இடையில் கிடைத்த வெற்றி. நிக்கோலஸ் பூரான் 118 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார், அதிக ரன்களாக.
ஆட்ட நாயகன் விருதை வென்றது - அவிஷ்கா ஃபெர்னாண்டோ

Comments
Post a Comment