இந்திய அணியின் வருகை - செய்திகள்
2020ம் ஆண்டின் இறுதியில், இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா நாட்டிற்கு ஓர் தொடர் பயணம் செல்ல ஒப்பந்தமிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடவுள்ள தொடரின் முழு விவரத்தையும், தங்களின் அட்டவணையில் குறிப்பிட்டு, வெளியிட்டனர். ஆனால், அப்போது உள்ள சூழலில், இந்திய கிரிக்கெட் வாரியம், அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அவ்வறிக்கையில், "கிரிக்கெட் வீரர்களின் உடல் நலம், எங்களுக்கு மிகவும் அவசியம். இங்கு எப்போது இயல்பான நிலை திரும்புகிறதோ, அப்போது தான், எங்கள் அணியின் வீரர்களுக்கு, பயிற்சி தொடங்குவதைப்பற்றி சிந்திக்க முடியும்" என குறிப்பிட்டிருந்தது.
இருப்பினும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், தாங்கள் வெளியிட்ட அட்டவணையில், இத்தொடருக்கென ஓர் இடத்தை ஒதுக்கியுள்ளது. ஒருபுறம், இந்திய நாட்டையே சூறையாடிக்கொண்டிருக்கும், கொரோனா எனும் கொடிய நோய். ஆனால், மறுபுறம், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில், கொரோனா'வின் பாதிப்பு குறைந்துள்ளது. இவ்வாறு, உள்ள சூழலில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான, சௌரவ் கங்குலி, நேற்று ஓர் அறிக்கை வெளியிடுகின்றார்.
கங்குலியின் அறிக்கையில் " இவ்வாண்டின் இறுதியில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடவுள்ள தொடர் , இப்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது" என்றும், " இந்திய கிரிக்கெட் அணிக்கு, இத்தொடர் மிகவும் சவாலாக அமையும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனையொட்டி தனது அறிக்கையில், " விராட் கோலியின் மீது மிகுந்த நம்பிக்கையும் , எதிர்பார்ப்புகளும் உள்ளது. இத்தொடரில், இந்திய அணி வெற்றி பெற வேண்டும், என்கிற பொறுப்பும் இப்போது அவரிடம் உள்ளது. எக்காரணத்திலும், இத்தொடரில் தோல்வி பெற கூடாது" என தான் விராட் கோலியிடம், தனிப்பட்ட முறையில் கூறியதாய், வெளியிட்டார்.
இத்தொடர், அக்டோபர் மாதத்தில் தொடங்கி, ஜனவரி மாதங்களில் முடிவடையும். இதில், அக்டோபர் 11, 14 மற்றும் 17 தேதிகளில், இந்திய அணி பிரிஸ்பேன், கான்பெர்ரா மற்றும் அடிலேட் மைதானங்களில் 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளார்கள்.
பின்னர், டெஸ்ட் கிரிக்கெட் தொடர். முதல் போட்டி, டிசம்பர் 3ம் தேதி அன்று, பிரிஸ்பேன் மைதானத்தில் விளையாட, அதற்கு ஒயின் ஓர் பகல் இரவு டெஸ்ட் போட்டி விளையாடவுள்ளார்கள். இப்பகலிரவு போட்டி, டிசம்பர் 11ம் தேதியில், அடிலேட் மைதானத்தில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர், டிசம்பர் 26ம் தேதியில், "பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி", எனும் மெல்போர்ன் மைதானத்தில், நடைபெறும் சிறப்பான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பங்குபெற, இறுதியில் டிசம்பர் 3ம் தேதி அன்று, சிட்னி மைதானத்தில், நான்காம் டெஸ்ட் போட்டி ஒன்றை விளையாடவுள்ளனர்.
இதற்கு பின், ஒரு நாள் கிரிக்கெட் தொடர். ஜனவரி 12ம் தேதி அன்று, பெர்த் மைதானத்தில், முதல் ஒரு போட்டியும், பின்னர் 15ம் தேதி அன்று, மெல்போர்ன் மைதானத்தில் இரண்டாம் போட்டியும், இறுதியில் 17ம் தேதியன்று, சிட்னி மைதானத்தில் ஓர் போட்டி விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் செய்தியை தொடர்ந்து, இத்தொடரின் அமைப்பும், இதன் காரணத்தினால் கிடைக்கப்பட்ட செய்திகளும், இந்திய அணியின் ரசிகர்களுக்கு ஓர் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளது. கிரிக்கெட்டின் தொடக்கம், மிகவும் வெற்றியுடன் நடைபெற்றது. அடுத்து, இந்திய அணியின் கிரிக்கெட் வருகையும் நன்றாகவே நடைபெறும் !.
Comments
Post a Comment