தாதா'வின் லார்ட்ஸ் கொண்டாட்டம் - கிரிக்கெட் வரலாற்றில் இன்று

கிரிக்கெட்டில், இந்திய அணி பல சம்பவங்களை நிகழ்த்தியுள்ளது. பல சாதனைகளை படைத்து உள்ளது. அவ்வாறு உள்ள சம்பவங்களை, காலங்கள் கழிந்து கொண்டாடுகின்றனர். அவ்வாறு சிறப்பாக கொண்டாடப்படுகின்ற ஓர் சம்பவத்தை பற்றியே இப்பதிவில் நான் கூரவுள்ளேன்.

28 ஆண்டுகளுக்கு முன், 2002ம் ஆண்டில், நாட்வேஸ்ட் தொடர் எனும் மூவணிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்டது. இப்போட்டி, இதே தேதியில், நடைபெற, வரலாறு சிறப்பு மிக்க போட்டிகளில் ஒன்றாக அமைந்தது. 

லார்ட்ஸ் மைதானத்தில், இறுதி போட்டி நடைபெற, மிகவும் பரபரப்புடனும் எதிர்பார்ப்புடனும் இருந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மார்கஸ் ட்ரெஸ்கோதிக் மற்றும் நிக் நைட் ஓப்பனிங்  பேட்டிங்கை மேற்கொள்ள களமிறங்கினர். சில தடுமாற்றங்களுடன், நிக் நைட் தனது விக்கெட்டை இழந்தார். ஆனால், மார்கஸ் ட்ரெஸ்கோதிக் மற்றும் நாசர் ஹுசைன், இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்த்து பௌண்டரிகளை விளாசினார். மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மார்கஸ் ட்ரெஸ்கோதிக், தொடக்கத்தில் ஓடத்தொடங்கியவர், எங்கும் நிற்கவில்லை, ஓடிக்கொண்டே இருந்தார். மிகவும் வேகமாக விளையாட, இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதுவும் விளங்கவில்லை. மார்கஸ் ட்ரெஸ்கோதிக், தனது சதத்தை பூர்த்தி செய்தார். அவரைத்தொடர்ந்து நாசர் ஹுசைனும், ஒரு நாள் கிரிக்கெட்டில், முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இவர்கள் இடையே இருந்த பார்ட்னெர்ஷிப் மட்டுமே 185 ரன்கள். இவர்களை தொடர்ந்து, ஆண்ட்ரே ஃபிளிண்டாஃப், மிகவும் விரைவாக 40 ரன்களை அடித்து சேர்க்க, இங்கிலாந்து அணி இறுதியில் 325/5 என்கிற ஸ்கோரினை அடித்தார்கள். 

மாபெரும் இலக்கை அடைய வேண்டும் என்கிற தன்னம்பிக்கையுடன் களமிறங்கினர், இந்திய அணியின் ஒப்பனர்கள். கங்குலி மற்றும் சேவாக், வெறிகொண்டு விளையாடினர். பொதுவாக, சேவாக் மிகவும் விரைவாக பௌண்டரிகளை குவிக்க மறுபுறத்தில் உள்ளோர் சற்று நிதானத்துடன் ரன்களை சேர்ப்பர். இதுவே, அப்போது உள்ள இயல்பான நிலை. ஆனால், அன்றைய போட்டியில், நடைபெற்றதோ வேறு. சேவாக், சற்று நேரம் கடைபிடிக்க, கங்குலி உக்கிரதாண்டவம் ஆடினார். பந்துவீச்சாளர் யாவராய் இருப்பினும், எனக்கு கவலை கிடையாது. " ஊருக்குள்ள ஆயிரம் பட்டாசு வெடிக்கும், அதுல சிக்குறவன்லாம் சின்னா பின்னமாயிடுவான்" என்கிற வசனத்தை இங்கு பொருத்திப்பார்த்தால், நன்கு பொருந்தும். அவ்வாறு இருந்தது, கங்குலியின் ஆட்டம். ஆஃப் திசையின் கடவுள் என்று ஏன் அனைவரும் கூறுகின்றனர், என்கிற கேள்வியிற்கு விளக்கம் அளிக்குமாறு, ஆஃப் திசையில் மட்டுமே அணைத்து பௌண்டரிகளையும் அடித்தார். 35 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இவரின் அரை சத்தத்திற்கு, சேவாக் அவர்கள், தனது ரன்களின் வேகத்தை அதிகரித்தார். இருவரும் இனைந்து 106 ரன்களை அடிக்க, கங்குலி அவர்களை முதல் ஆளாக களத்தை விட்டு வெளியேற்றினர். அதுவரை, இந்திய அணியின் ஆட்டம் நன்றாக திகழ, கங்குலியின் வீழ்ச்சிக்குப் பின்,  அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகள் சரிந்தது. ஆனால், டெண்டுல்கர் களத்தில் இருக்கின்றார். அவர், பல சம்பவங்களை நிகழ்த்துவதற்கு வல்லவர், என அனைவரும் எண்ணி, போட்டியை கண்டுக்கொள்ள, அவரும் 14 ரங்களுக்கு வெளியேறினார். அணியின் நிலை - 24 ஓவர்களில், 146/5 என இருந்தது. இதற்குமேல், இந்திய அணி நிச்சயம் தோல்வி அடையும், போட்டியை கண்டுக்கொள்வது, தேவையின்றி நேரத்தை வீணடிப்பதற்கு சமம், என எண்ணி பலர் போட்டியை கண்டுக்கொள்ளாமல் சென்றனர். ஆனால், அன்று முழு போட்டியையும், பார்வையிட்ட பார்வையாளர்களுக்கு மட்டுமே அவ்வதிசத்தை பற்றி தெரிந்திருக்கும். களத்தில் இருந்தது, யுவராஜ் சிங் மற்றும் முஹம்மத் கைஃப். தேவை, 180 ரன்கள். கைகளில் உள்ளதோ, 5 விக்கெட்டுகள் மட்டுமே. என்ன செய்யவுள்ளார்கள் என கேள்விகள் எழும்ப, யுவராஜ் சிங் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருபுறம் யுவராஜ் சிங்,பௌண்டரிகளை விலாச மறுபுறம் கைஃப், ஒன்று இரண்டுகளை சேகரித்துக்கொண்டிருந்தார். மிகவும், போராடினர். அருமையான ஆட்டங்களை வெளிப்படுத்தினர். யுவராஜ் சிங் அவர்கள், 53 பந்துகளில் 52 ரன்களை குவிக்க, மறுபுறத்தில் கைஃப் , தனது ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றார். கைஃப் அவர்கள், தனது பேட்டிங் திறனுக்கென பெரிதும் பெயர் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால், தனது கிரிக்கெட் வாழ்வினை திருப்பி பார்த்தால், தான் பெருமிதம் கொள்ளும் படியாக உள்ள ஓர் ஆட்டம் என்றால் அது இது தான். இருவரும் இனைந்து 121 ரன்களை சேர்க்க, யுவராஜ் சிங் அவர்கள், 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர், ஹர்பஜன் 15 ரன்கள் குவித்தார். ஆனால், இறுதி ஓவர் வரை போட்டியை அழைத்து சென்றது கைஃப் அவர்கள் மட்டுமே. தனியொருவரானாய், முழு ஆட்டத்தையும் இழுத்து சென்றார். இறுதி ஓவரில் 2 ரன்கள் தேவை. ஆனால், கைகளில் இருப்பதோ, 2 விக்கெட்டுகள். ஆண்ட்ரே ஃபிளிண்டாஃப் பந்தை வீச, முதல் இரண்டு பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை. மூன்றாம் பந்தில், கவர் திசைகளில் அடித்த சாஹீர் கான், வெகு விரைவாக ஓடினர், அருகில் உள்ள ஓர் வீரர், அதனை ஸ்டம்ப்பில் அடிக்க முயன்று, அம்முயற்சியில் தோல்வியடைய, மற்ற ஒரு ரன்னும் எடுக்க போதுமானதாய் இருந்தது. இந்திய அணி, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில். 2 பந்துகள் மீதம் வைத்து வெற்றிபெற்றது.

அனைவரும், சந்தோஷத்தின் உச்சத்தில் துள்ளி குதிக்க, கங்குலி அவர்கள் மனதில் இருந்த கோபமும், அதன் வெளிப்பாடாக அவர் நிகழ்த்திய சம்பவத்தை, இன்றும் பலர் மறவாதிருப்பர். தன் சட்டையை கழற்றி,  தனது கைகளால் அச்சட்டையை காற்றில் சுற்றி மகிழ்ச்சியடைந்தார். பல கிரிக்கெட் வீரர்கள், இதற்கு கண்டனம் தெரிவித்தாலும், கங்குலி அவர்களின் இச்செயல், இன்றும் பலரால் கொண்டாடப்படுகின்றது. இச்சம்பவம் ஓர் பழிக்கு பழி என்றே கூறலாம். 

இதற்கு முன்பு, அவ்வாண்டில், இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள், ஓர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதிக்கொண்டது. 6 போட்டிகளை அத்தொடர், இந்திய மண்ணில் விளையாடப்பட்டது. அதில், இந்திய அணி 3-2 என்று முன்னிலை பெற்றிருக்க, இறுதி போட்டியை வென்றால், தொடரை வென்றுவிடலாம், என்கிற திட்டத்துடன், மும்பை மைதானத்தில் களமிறங்கினர். இறுதி ஓவரில், 11 ரன்கள் தேவை என்கிற நிலையில், இந்திய அணியை சேர்ந்த பதானி மற்றும் கும்ப்ளே அவர்கள், இப்போட்டியை வென்றுவிடுவார்கள் என அனைவரும் எண்ணினர். இங்கிலாந்து அணியிற்கு சார்பாக, ஃபிளிண்டாஃப் இறுதி ஓவரை வீச களமிறங்கினார். அன்று, இந்திய அணி வெற்றிபெறவில்லை. அன்று வெற்றியை பெற்றுத்தந்த ஃபிளிண்டாஃப், மும்பையை சேர்ந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் முன், தனது சட்டையை கழற்றி, கொண்டாடினார். இதற்கு பதிலளிக்குமாற, அவர்கள் மண்ணில், கிரிக்கெட்டின் இல்லம் என கருதப்படும் லார்ட்ஸ் மைதானத்தில், இந்திய அணி, இறுதி போட்டியை வெற்றிபெற்றதற்கு, கங்குலி அவர்கள், அவ்வலியிற்கு பழி தீர்த்தாார். " நீ அடிச்சா நான் வாங்கிட்டு இருக்க மாட்டேன். திரும்ப விழும்" என்று சத்தமின்றி சொல்லியவாறு இருந்தது.

ஆட்ட நாயகன் விருதை பெற்றது - ஆட்டமிழக்காமல் வெற்றியை பெற்றுத்தந்த முஹம்மத் கைஃப்                 

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood