ஒரு கதை சொல்லட்டா சார்........
தேதி - ஜூலை 19, 1961 ; இடம் - ஹைதராபாத்
டெலெங்கான மாநிலத்தை சேர்ந்த, ஹைதராபாத் எனும் தலைநகரில் வசித்துக்கொண்டிருக்கும் மராட்டிய குடும்பத்தாருக்கு, ஒரு மகன் பிறக்கின்றான். அப்பிள்ளை, தனது வாழ்வில், ஓர் பொறியாளனாகவோ அல்லது ஓர் மருத்துவராகவோ, வாழ்வில் வலம் வருவான் என பலர் எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால், அன்று பலர் அறியாத ஓர் உண்மை, பிற்காலத்தில், இப்பிள்ளை, தனது வார்த்தைகளால், கிரிக்கெட்டையே கட்டியணைக்கவுள்ளான் என்பது தான்.
தனது தந்தை, ஓர் பிரெஞ்சு பேராசிரியராக பணிபுரிய, தனது தாயார் அவர்கள், உளவியல் துறையில் பேராசியராய் பணிபுரிந்தார். ஆதலால், இவர் கல்வி ஒன்றை மட்டுமே நம்பும் ஓர் குடும்பத்தில் பிறக்கின்றார். இளம் வயதிலிருந்தே, பல கிரிக்கெட் போட்டிகளை கண்டு வளரும் இச்சிறுவனுக்கு, கிரிக்கெட்டின் மீது ஓர் தீரா காதல் ஏற்படுகின்றது. ஆனால், தனது குடும்பமோ, கல்வியை சார்ந்தது. கனவுக்கும் கடமைக்கும் நடுவில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். எதை மேற்கொள்ளவுள்ளார் என, அனைவரும் எதிர்பார்க்க, இவரோ கல்வியின் பக்கம் திரும்புகின்றார்.
இரசாயன தொழிற்நுட்ப துறையில், தனது கல்லூரி வாழ்வை தேர்ந்தெடுக்கின்றார். கடமை எனும் காரணத்திற்கு, இவர் கல்வியின் பாதையை தேர்ந்தெடுத்தாலோ, தனது கனவு தன்னை தூங்கவிடாமல் செய்ய, இளம் வயதில் ஓர் முடிவு எடுக்கின்றார். பயிலும் காலகட்டத்திலேயே, ஒலிபெருக்கியில் வேலைக்குச் செல்கிறார். படிப்பு முடிவடைகின்றது, பின்னர், முதுகலை பட்டத்திற்கு, அவர் விளையாட்டு மேலாண்மை துறையை தேர்ந்தெடுக்கின்றார்.
இளங்கலை படிப்பிற்கும் முதுகலை படிப்பிற்கும் இடையில், இரண்டு ஆண்டுகள் அவர், விளம்பர நிறுவனங்களில் பணிபுரிகின்றார். விளையாட்டு மேலாண்மை துறையில், தனது முதுகலை பட்டம் பெற்ற பின், தான் கிரிக்கெட் எனும் கோதாவில் குதிக்கின்றார்.
தொடக்கத்தில் கடமையை தேர்ந்தெடுத்தாலும், பின்னர் தான் தனது பாதையை மாற்றிக்கொண்டார். பலரால், தனது துறையை மாற்றியமைக்க இயலாது. ஆனால், மாற்றியமைத்தார்.
தான், கிரிக்கெட் வர்ணனையாளராக களமிறங்க, அனைவரும் முதலில், இச்சிறுவனால் பெரிதாக என்ன செய்ய இயலும் என்ன கேலி செய்ய, இச்சிறுவனோ, இவ்வாறு வெளிவரும் விமர்சனங்களை கண்டு சிரித்துவிட்டு செல்கின்றார்.
தன்னிடம் உள்ள ஓர் தலைசிறந்த குணம், கதைசொல்லும் ஆற்றல் ஆகும். இந்த ஓர் குணாதிசயத்தை, தனது துறையிற்கேற்ப மாற்றியமைக்க முயன்றார். வெற்றியும் பெற்றார். கிரிக்கெட் வர்ணனையில், கதை சொல்லும் ஆற்றலாய் அமைத்தால், கவனிக்கும் மக்களின் மனதில், தற்போது உள்ள நிலையின் முக்கியத்துவம், மிக எளிதில் அடைந்துவிடும்.
இதை, சரியாக பயன்படுத்தினார்.
தனது நளின வாக்கியங்களால், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மயங்கினர். அன்றும், இன்றும், என்றும் அவருடைய வார்த்தைகளுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் நிச்சயம் இருப்பர். இன்று, கிரிக்கெட்டின் சிறந்த வர்ணனையாளராக, வலம்வருகின்றார். அச்சிறுவன், வேறு யாரும் அல்லது, ஹர்ஷா போக்லே ஆகும்.
"ராகுல் ட்ராவிட்டை தண்ணீரில் நடந்து செல்ல கூறினால், அவர் எவ்வளவு கிலோமீட்டர் என்று கேட்பார்". ராகுல் ட்ராவிடின் பேட்டிங் ஆற்றலை இதை விட வேறு எவ்வகையிலும் சிறப்பித்து கூற இயலாது. இதனையொட்டி, ஒரு முறை, டெண்டுல்கரும் தோனியும், இனைந்து பேட்டிங்கை மேற்கொள்ளவதனை கண்டு அவர் கூறிய வாக்கியம், "பேட்டிங்கில் இருப்பது, ஒரு புறம் அறுவை சிகிச்சை நிபுணர், மறுபுறம் கசாப்புக்காரன்". இவருடைய விளையாட்டு ஆற்றலை, இதனை விட சிறப்புரைத்து கூற இயலாது.
இவ்வாறு மேற்கொண்டு பல வாக்கியங்களை கூறலாம். மிகவும் சிறப்புப்பெற்ற வர்ணனையாளர் ஆவார். இப்போது, ஐவரும் இவரின் மனைவியும் இனைந்து, இணையதளத்தில் ஓர் ப்ரோ ரிசெர்ச் எனும் நிறுவனத்தை நடத்திக்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment