பங்களாதேஷ் அணியிற்கு வாழ்வா ? சாவா ?

சென்ற ஆண்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள், எட்ஜபாஸ்டன் மைதானத்தில் மோதியது. ஒரு புறம், நன்றாக இத்தொடரில் விளையாடியிருந்தாலும், அரையிறுதி சுற்றை அடைவதற்கு மேலும் ஒரு வெற்றி மீதம் உள்ளது என்கிற நிலையில் விளையாடும் இந்திய அணி. மறுபுறம், இப்போட்டியில் தோல்வியடைந்தால், அரையிறுதி சுற்றினை பற்றி மறத்தல் வேண்டும், என்று களமிறங்கும் பங்களாதேஷ் அணி.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பங்களாதேஷ் அணியின் ஃபீல்டிங் அன்று நினைத்தவாறு அமையவில்லை. சிறிது தவறுகள் நிகழ, இந்திய அணியின் ஒப்பார்கள் அதனை நன்கு பயன்படுத்திக்கொண்டனர். ஒருபுறம் ராகுல், சிறிது நேரம் கடைபிடித்து விளையாட மறுபுறத்தில் ரோஹித் ஷர்மா, தனது அதிரடி ஆட்டத்தை வழங்கினார். முதல் 25 ஓவர்களுக்கு, அவர்கள் ஆடிய ஆட்டத்தின் வேகம் சிறிதும் குறையவில்லை. ரோஹித் ஷர்மா, தனது சதத்தை வழங்கினார். இவ்வுலககோப்பையின் நான்காம் சதம். அத்தருணத்தில், ராகுல் நிதானத்துடன் கூடிய அரை சதத்தை அணியிற்கு வழங்கினார். 25ம் ஓவருக்கு பின், பிட்சில் பந்து நினைத்ததை விட குறைந்த வேகத்தில், பேட்ஸ்மேனை நெருங்க, ரன்களை குவிப்பதில் தடுமாற்றம் ஏற்பட்டது. இதனை நன்கு பயன்படுத்தியது பங்களாதேஷ் அணி. பிட்சிற்கு ஏற்ப சற்று வேகத்தை குறைத்து பந்து வீசினார்கள். அதற்கு கிடைத்த பலன், நான்கு விக்கெட்டுகள். ரோஹித், ராகுல், கோலி, மற்றும் ஹர்டிக். ஹார்டிக்'கின் விக்கெட் வீழ்ச்சியெல்லாம் மிகவும் தந்திரமானது. 39ம் ஓவரில், ஸ்லிப்பில் ஓர் வீரரை நிற்கவைத்து, முஸ்தபிஸுர் ரஹ்மான், சற்று வேகத்தை குறைத்து, ஆஃப் கட்டர் பந்தினை வீச, பௌண்டரி அடிக்க முயன்று, நினைத்தவாறு, ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து சென்றார். ஆனால், இங்கு நான் எனது பாராட்டுகளை இரு வீரர்களுக்கு மட்டுமே தெரிவித்துக்கொள்கிறேன். ஒருவர் ரிஷப் பண்ட் மற்றோருவர் தோனி. விக்கெட்டுகள் விழும் தருணத்தில், சற்று பிட்சின் நிலையை புரிந்துக்கொண்டு, பௌண்டரிகளை அடித்து 48 ரன்களை குவித்தார் ரிஷப் பண்ட். அவரின் வீழ்ச்சி, வழக்கம் போன்று அமைந்திருந்தாலும், அவரின் ஆட்டம், இடையில் விளையாடிய மற்ற வீரர்களை விடவும் நன்றாக இருந்தது. தோனி நன்றாக விளையாடவில்லை என்றால், இந்திய அணியால் 314/9 என்கிற ஸ்கோரை அடைந்திருக்க முடியாது. பண்ட் விளையாடும் போது, மறுபுறத்தில் ஓவர் ரன்கள் வழங்கி பின்னர் கடைசி இரண்டு ஓவர்களில் தேவையான ரன்களை குவித்தார். அவரின் அனுபவம் அங்கு நன்கு வெளிப்பட்டது. இறுதியில் 314/9 என்கிற ஸ்கோருடன் முடித்தது இந்திய அணி. முஸ்தபிஸுர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பங்களாதேஷ் அணி, தங்களுக்கு வழங்கப்பட்ட இலக்கினை துரத்தி பிடிக்க களமிறங்கியது.பங்களாதேஷ் அணியின் இன்னிங்ஸிலும், முதல் கட்ட ஓவர்களில் நன்றாக தென்பட, பின்னர் வேகம் குறைய காணப்பட்டது. ஆனால், அவர்கள் செய்த தவறு, இந்திய அணியை போன்று அல்லாது, ஒப்பனர்கள் மிக விரைவில், தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். வழக்கம் போன்று ஷகிப் அல் ஹாசன், அன்றும் ஓர் அரை சதத்தை குவித்தார். அவருடைய ஆட்டம் சிறப்பாக காணப்பட்டது. அதனை தவிர்த்து, ஷபீர் ரஹ்மான் மற்றும் சைஃபுதீன் இடையே அமைக்கப்பட்ட ஓர் கூற்று, முக்கியமாய் சைஃபுதீனின் அரை சதம் இவையனைத்தும் சிறப்பாக அமைந்தது. ஆனால், தொடக்கத்தில் அவர்கள் பறிகொடுத்த விக்கெட்டுகள் அன்று நன்கு வேலைசெய்தது. இறுதியில் 286 ரன்களுக்கு அணைத்து விக்கட்டுகளையும் இழந்தது பங்களாதேஷ் அணி. இவ்வாறு, போட்டியை கைவிட்டதால், அரையிறுதி ஒட்டப்பந்தயத்தை விட்டு வெளியேறியது.

ஆட்ட நாயகன் விருதை பெற்றது, மீண்டும் ஒரு முறை - ரோஹித் ஷர்மா                  

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood