பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஓர் சாதனை

இரண்டு ஆண்டுகளுக்கு முன், இன்று, பாகிஸ்தான் கிரிக்கெட்டில், வரலாற்று சிறப்புமிக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டது. ஒன்றல்ல, இரண்டு சாதனைகள். இவ்விரண்டு சாதனைகளையும் நினைத்துப்பார்த்து, இன்றும் பல பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவ்வாறு, சிறப்புமிக்க சாதனைகளை பற்றியே இப்பதிவில் பார்க்கவுள்ளோம்.

பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே நாட்டிற்கு, 5 போட்டிகளை கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்குபெற, பயணம் மேற்கொள்கின்றனர்.  இதற்கு முன், 3 போட்டிகளில் விளையாடி, அதில் அனைவற்றையுமே வெற்றிபெற்றது பாகிஸ்தான் அணி. ஆதலால், இது நாங்காவது போட்டியாகும். புலவாயோ நகரில் இப்போட்டி நடைபெறுகின்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, எவ்வித மறுயோசனையும் இன்றி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தனர்.

களமிறங்கினர், ஃபாக்கர் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக். முதல் 5 ஓவர்களில், ஃபாக்கர் ஜமான் அவர்களுக்கு, நினைத்த அளவிற்கு, தனது மட்டையில் பந்து மாட்டிக்கொள்ளவில்லை. அதனால், இமாம் உல் ஹக், ரன்களை வெகு விரைவாக குவிக்க தொடங்கினார். ஆனால், ஃபாக்கர் ஜமான், சற்றும் தளராது முயன்றார். டீப் லெக் திசையில் பௌண்டரி கிடைத்தது. அங்கு ஆரம்பித்தது சரவெடி. பவர்பிளே ஓவர்களில் உள்ள விதிகளுக்கு ஏற்ப, உள்வட்டத்தில் உள்ள வீரர்களை கடந்து பந்தை காற்றில் அடிக்க, ரன்கள் கிடைத்தது. பவர்பிளே ஓவர்களை மிகவும் நன்றாக பயன்படுத்தினர். ஆனால், இவர்கள் இருவருமே அத்துடன் நின்றுக்கொள்ளவில்லை. தொடக்கத்தில் இருந்த வேகம், சற்றும் குறையாமல், காத்துக்கொண்டனர். ஃபாக்கர் ஜமான், ஒரு பௌண்டரியின் வாயிலாக தனது அரை சதத்தை, 51 பந்துகளில் ஈட்டினார். அங்கிருந்தும் நிற்கவில்லை. பவர்பிளே ஓவர்களில் முடிவிற்கு பின், சற்று தரையோரமாய் ரன்களை குவித்தார். ஆனால், வேகமோ குறையவே இல்லை. தன்னுடைய சதத்தையும் பௌண்டரி ஒன்றை அடித்து, 92 பந்துகளில் அடைந்தார். தனது அரை சதத்திற்கும், சதத்திற்கும் உள்ள இடைவெளி வெறும் 41 பந்துகள் மட்டுமே. மிகவும் நேர்த்தியான ஆட்டம். நான் கூறினேன் அல்லவா, இமாம் உல் ஹக், வெகு விரைவாக ரன்களை குவிக்க தொடங்கினார் என்று, இப்போது அனைத்தையும் மாற்றியமைத்தார் ஃபாக்கர் ஜமான். இருவருக்கும் இடையே ஓர் போட்டி அமைந்தது. அதில், ஃபாக்கர் ஜமான், முதலில் தனது சதத்தை ஈட்டினார். இங்கிருந்து, தனது ஆட்டம் வேறு ரகத்திற்கு மாறியது. தனது முன் கால்களை அகற்றியே, ஷாட்டுகளை அடித்தார். அதாகப்பட்டது, காற்றில் சிக்சரும் பௌண்டரியுமாய் குவிக்க தொடங்கினார். ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சாளர்களுக்கு, ஒன்றும் விளங்கவில்லை. " டேய் அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான் டா" என்பதே அவர்களின் மனதில் இருந்தது. தனது 150ஐ வெறும் 115 பந்துகளில் அடைந்தார். அடுத்த அரை சதத்திற்கு, அவர் எடுத்துக்கொண்ட நேரம், 23 பந்துகள். இங்கிருந்தாவது இவர் நின்றுக்கொள்வார் என எண்ணினால், அது தான் தவறு. லெக் திசையில், தனக்கென ஓர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். அவ்வாறு, லெக் திசையை குறிவைத்தே பல பௌண்டரிகளை குவித்தார். இமாம் உல் ஹக்கும், சதம் அடிக்க, விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் தத்தளித்தனர். 41 ஓவர்களிலேயே, பாகிஸ்தான் அணி 300 ரன்களை கடந்தது. பின்குறிப்பு - விக்கெட் ஏதும் இழக்காமல். இருவரும், சரமாரியாக தாக்கினர். துரதிர்ஷ்ட வசமாய், இமாம் உல் ஹக், 115 ரன்களுக்கு வெளியேறினார். இருவருக்கும் இடையே இருந்த கூற்று, 304 ரன்கள். ஆனால், ஃபாக்கர் ஜமான் 200 ரன்களை அடித்தார். முதல் பாகிஸ்தான் வீரர் குவிக்கின்ற, இரட்டை சதம் ஆகும். மற்றும் பாகிஸ்தான் வீரர், தனித்த முறையில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரும் இதுவே. இறுதியில் 210 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் நின்றார். பாக்கிஸ்தான் அணி 399/1 என்கிற உச்சகட்ட இலக்கையும் அடைந்தது. பாகிஸ்தான் அணியின், அதிக பட்ச ஸ்கோர் ஆகும் ( அணியாக அடிக்கப்பட்ட ).

அவ்வடியிலிருந்து ஜிம்பாப்வே அணி மீண்டெழவே இல்லை. 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து ஆட்டத்தை இழந்தது ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றது, பாக்கர் ஜமான்.           

"வத்திக்குச்சி வத்திக்குச்சி ஒள்ளியினு பாத்தா, பத்திக்குவான் பத்திக்குவான் தள்ளி நின்னு பேட்ட"
  

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?