நன்றி மலி - எங்கள் சிலிங்கா, எங்கள் பெருமை

இலங்கை அணியை சேர்ந்த தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என பட்டியலிட்டால், அதில் இவருடைய பெயர் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். சில வீரர்கள், 90களில் பிறந்த பிள்ளையர்களின் மத்தியில், பெரும் பிரபலம் பெற்றவராய் இருப்பர். சிலர், 2000ங்களில் பிறந்த குழந்தைகள் மத்தியில், பிரபலம் பெற்றற்றிருப்பர். ஆனால், மிகவும் குறைந்த சில நபர் மட்டுமே, இரண்டு தலைமுறைகளை சேர்ந்த பிள்ளையர்களின் மத்தியில், பெருமை பெற்று, கிரிக்கெட் உலகில் வாழ்ந்திருப்பார். அவ்வாறு, குறைந்த சதவீத வீரர்களை சேர்ந்த ஒருவரே லசித் மலிங்கா. 

அவரைபற்றி, இப்போது நான் பதிவிடுவதன் ஓர் காரணம், சென்ற ஆண்டு, இதே நாள் அன்று, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வினை அறிவித்தார். 20 ஓவர் கிரிக்கெட்டில் தான் விளையாடுவரே, பின்னர் எதற்கு ஒரு நாள் கிரிக்கெட்டின் ஓய்வை பற்றி குறிப்பிடுகின்றாய் என கேள்வி எழலாம். அதற்கு ஓர் முக்கிய காரணம், 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை முடிவடைந்தபின், எந்நேரமும் தான் தனது ஓய்வை அறிவிப்பார். அதற்கான வாய்ப்புகள் பல உள்ளது.

2019ம் ஆண்டின் ஜூலை மாதங்களில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள், ஒரு நாள் தொடர் ஒன்றில் பங்குபெற்றனர். இத்தொடரின் முன்னதே, லசித் மலிங்க தனது ஓய்வை பற்றி குறிப்பிட்டார். அதில், தான் விளையாடவுள்ள இறுதி ஒரு நாள் போட்டி, இத்தொடரின் முதல் போட்டியாகும், என மேலும் அறிவிப்புகள் குறிப்பிட, மைதானத்தில் ரசிகர்கள் திரண்டு வந்தனர்.

தங்கள் அணியின், தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளருக்கு, தாங்கள் அளித்த கரகோஷமும், ஆதரவும் ஏராளம். அதில், தாங்கள் ஓர் அட்டையில் எழுதி வெளிக்காட்டிய மேற்கோள், " நன்றி மலி - எங்கள் சிலிங்கா, எங்கள் பெருமை" எனவாகும்.

அவரின், பந்துவீச்சு நடவடிக்கைகளை, பலர் கேலி செய்துள்ளார்கள். காரணம், தனது நடவடிக்கை, நேராக சுற்றி பந்தினை வீசாமல், சற்று கைகளை ஓரத்தில் தள்ளி பந்துவீசுவர். சிலருக்கு, அது விசித்திரமாய் திகழ்ந்தாலும், வேறு சில நபருக்கு, இது பிடிக்கவில்லை. சர்வதேச பந்துவீச்சு விதிகளை மீறியவாறே அமைந்தது, என எண்ணினார்கள். ஆனால், ஐசிசி'யின் விதிகளுக்கு உட்பட்டு தான், இவரின் பந்துவீச்சு நடவடிக்கையும் அமைந்தது. 

இவ்வாறு உள்ள ஒரு குறுக்கு கோணலில், தான் வேகப்பந்து வீசுவார், வேகமற்ற பந்துகளையும் வீசுவார். அதன், வித்தைகளை அறிந்தவாறு செயல்படுதல் என்பதே ஓர் சவால் ஆகும். ஆனால், அதனை சரியாக செய்துள்ளார். 

தனது இறுதி போட்டியில், தனது கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு மரியாதை செலுத்த, காண்பதற்கு அழகாய் திகழ்ந்தது. அப்போட்டியிலும், தான் தனது சிறப்பை வெளிப்படுத்தினார். 9.4 ஓவர்கள் பந்துவீச, அதில் 38 ரன்கள் மட்டுமே வழங்கி, 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

இலங்கை அணியின் வெற்றிநாயகனுக்கு, இதனை விட ஓர் சிறப்பான முடிவினை வழங்க இயலாது. இன்றும், பல ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகின்றார். 

"மலிங்கா - " நான் போரேன்"
"ரசிகர்கள் - " போறேன் சொல்லாதீங்க , போயிட்டு வரேன் சொல்லப்பு " 

        

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?