கழுகும் - கப்பலோட்டியும்

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களாக கருதப்படும், இரு வீரர்கள், இன்று பிறந்துள்ளார்கள். இரு வீரர்களும், வெவ்வேறு நாட்டினை சேர்ந்தவர்கள். இருவரும் அடுத்தடுத்த காலகட்டத்தில், களமிறங்கியவர்கள். இவ்வொரு, பிறந்த நாளினை தவிர்த்து வேறு எவ்விதத்திலும் ஒற்றுமை இல்லை. ஆனால், அவர்கள் விளையாடிய காலகட்டத்தில், பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர். 

ஆலன் பார்டர் - கப்பலோட்டி

ஆலன் பார்டர் அவர்கள், 27ம் தேதி, ஜூலை மாதம், 1955ம் ஆண்டில், ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த கிரேமோர்ன் எனும் நகரில் பிறந்துள்ளார். ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் பக்கங்களை புரட்டி பார்த்தால், இவரின் பெயர் தலைமை நிலை பெற்றிருக்கும். அதிரடியான குணத்திற்கும், நிலையான ஆட்டத்திற்கு பெயர் வாங்கியவர். 

பல முறை, தனது அணியை ஆபத்திலிருந்து காப்பாற்றி, இன்னல்களிலிருந்து மீட்டு, கரை சேர்த்துள்ளார். ஆதலால், இவரை நான் கப்பலோட்டி என குறிப்பிட்டுள்ளேன். கப்பலோட்டியின் கடமை, நீரில் செலுத்தும் தனது கப்பலையும், கப்பலில் இருக்கும் மக்களையும், எவ்வித சேதமுமில்லாமல், கரையினை சேர்த்தல் ஆகும்

டெஸ்ட் கிரிக்கெட்டில், தனக்கென ஓர் முத்திரையை பதித்துள்ளார். 11,000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், 6,524 ரன்களை குவித்துள்ளார். 80களில், கிரிக்கெட் உலகின் அரசனாய் திகழ்ந்தவர் ஆவார். அணியின் தலைவனாகவும், சில காலம் நிலைத்து நின்றுள்ளார். 

இவரது கிரிக்கெட் வாழ்வு காலம், 16 ஆண்டுகள் ஆகும். இவற்றுள், தான் செய்த சாதனைகள் ஏராளம். அதன் ஓர் எடுத்துக்காட்டு, ஒரே டெஸ்ட் போட்டியில், இரண்டு இன்னிங்சிலும் 150க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த முதல் வீரன் மாற்றும் வீரன், இவர் தான். இச்சாதனையை, இன்றும் முறியடிக்கப்படவில்லை. 

ஜான்ட்டி ரோட்ஸ் - கழுகு 

ஜான்ட்டி ரோட்ஸ், 27ம் ஜூலை அன்று, 1969ம் ஆண்டில், பீட்டர்மாரிட்ஸ்பர்க், எனும் தென் ஆஃப்ரிக்கா நாட்டினை சேர்ந்த நகரில் பிறந்துள்ளார். 1992ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரில், தனது கால்தடங்களை, கிரிக்கெட் உலகில் பதித்தார். 

இவரின் காலம் 11 ஆண்டுகள் தான். அதில், இவர் பேட்ஸ்மேனாக களமிறங்கினாலும், இவரின் சிறப்பு ஆற்றல், கிரிக்கெட்டை சார்ந்த வேறு துறையில் தான் இருந்தது. அத்துறை வேறேதும் இல்லாது, ஃபீல்டிங் ஆகும். கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஃபீல்டர் என பெயர்பெற்ற இவர், ஓர் பறவையைப்போன்று பறந்து சென்று பந்தை கைப்பற்றுவார். இவரை, கழுகு என கூறுவதன் காரணமும் இது தான். 

கழுகின் கடைமை என கூறினால், வானின் உயர்வுக்கு பறந்து சென்று, தனது பிள்ளையர்களுக்கு, உணவினை கைப்பற்றி கொண்டு செல்வதே ஆகும். அவ்வாறு, தனது அணியின் வெற்றிக்கு தேவையாய் இருக்கும், கேட்சுகளையும், ரன் அவுட்டுகளையும், நொடியில் நிகழ்த்துவார். 

ஒரு முறை, இவரை மாற்று வீரராக, களத்தினுள் கொண்டு வந்தனர். மாற்று வீரரின் தலையாய கடமை, ரன்களை கட்டுப்படுவது மட்டுமே. அவ்வாறு, இவரை களமிறக்க, அப்போட்டியில், இவர் 7 விக்கெட்டுகளை தனது கேட்சுக்களாலும், அதிசயமாய் திகழும் ஃபீல்டிங்கினாலும் கைப்பற்றினார். அவ்வாறு, கைப்பற்றியதால், அவருக்கு ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றியுள்ளார். மாற்றாக களமிறக்கப்படும் வீரர் ஒருவர், ஆட்டநாயகன் விருதை பெற்றார் என்கிற சம்பவம், கிரிக்கெட்டில் முதல் முறை ஆகும். இது கூறும் இவரது சிறப்பினை. 

       

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?