சோதனைகளை சாதனைகளாக மாற்றிய இரு பந்துவீச்சாளர்கள்
இரு பந்துவீச்சாளர்கள். இருவரும் கீழ் தளத்தில் பேட்டிங்கை மேற்கொள்வர். ஒருவர், நமது பாட்டன் காலங்களிலும், மற்றும் நமது பெற்றோர்களின் காலங்களிலும் சிறந்து விளங்கியவர். மற்றோருவர், இப்போது உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் சிறந்து விளங்கியவர். இருவருமே முரட்டுத்தனமுள்ள குணக்காரர்கள். ஒருவர் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர். மற்றோர், ஆஃப் சுழற்சி பந்துவீச்சாளர். இருவரும், ஒரே காலகட்டத்தில் விளையாடாமல் இருந்திருந்தாலும், இருவரின் குணாதிசயங்கள், சமம் தான்.
ஆனால், இவருடைய கிரிக்கெட் வாழ்வில், முதுகில் ஏற்பட்ட காயங்கள் ஏராளம். 22 வயதில், ஆஸ்திரேலியாவின் சர்வதேச கிரிக்கெட் அணியில் இடம் பெரும் இவருக்கு, 2 வருடங்களிலேயே, முது தண்டுகளில் மிக பெரிய காயம் ஏற்படுகின்றது. அச்சமயம், உலகில் உள்ள பலர், இவரின் கிரிக்கெட் வாழ்வு முடிவடைந்தது, என்றே முடிவெடுக்க, அவ்வாறு கூறிய கூற்றுமொழிகள் அனைத்தையும் இவர் முறியடித்து, தனது பந்துவீச்சில் சில மாற்றங்கள் மேற்கொண்டு, களம் இறங்குகின்றார். அதற்கு பின்னரும், இப்பிரச்சனை தொடர்ந்துகொண்டு தான் இருந்தது. இதன் காரணமாக, தனது வேகத்தை சற்று குறைத்து, திடீர் பொறுமை பந்துகள் மற்றும் சில கட்டர் பந்துகளை வீச தொடங்கினார். ஆனால், இறுதியில் 35 வயதில், இவர் கிரிக்கெட் உலகிலிருந்து வெளியேறினார்.
அது மட்டுமின்றி, 2008ம் ஆண்டில், ஐபிஎல் தொடரில், ஸ்ரீசாந்த் எனும் பஞ்சாப் அணியை சேர்ந்த வீரரை, இவர் அறைந்தார். இது பல குரல்கள் எழுப்ப, இவரை அவ்வாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து முழுவதுமாக தடை செய்து, அடுத்த 5 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து நீக்கியது, இந்திய கிரிக்கெட் வாரியம். இதனை கடந்து, ஏதேனும் செய்தால் முழுவதுமாக தடை செய்யப்படுவார் என குறிப்பிடத்தக்கது.
போட்டிகளில், இவர் வெகு விரைவாக களமிறங்கி அடிக்கும் சிக்ஸர்களால், இந்திய அணி பல போட்டிகளை வென்றுள்ளது.
டென்னிஸ் லில்லீ ( ஜூலை 3, 1949)
இன்றைய தேதியில், 71 ஆண்டுகளுக்கு முன், மேற்கு ஆஸ்திரேலியா நாட்டில், இவர் பிறக்கின்றார். உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுள் இவரும் ஒருவர். குறிப்பிடத்தக்க செய்தி, இவர் விளையாடிய காலகட்டத்தில், பந்துவீச்சாளர்கள் உக்கிரமாய் இருந்தார்கள். பந்துவீச்சாளர்களின் பொன்னான காலகட்டத்தில், இவர் தனக்கென ஓர் முத்திரையை பதித்துள்ளார். அப்போது உள்ள காலகட்டத்தில், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியதும் இவர் தான். இவரின் வேகம் சுமார் அளவிற்கு 150க்கும் மேல் இருக்கும். எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு, இவர் பந்துவீசும் பொழுது, வயிற்றை கலக்கும் பொருட்டு அமைந்திருக்கும். தட்டையான பிட்சில் மட்டுமே இவருக்கு தடுமாற்றம் ஏற்படும். ஆனால், அவ்வாறு உள்ள தட்டையான பிட்சுகளிலும், இவர் சில முறை சிறந்து விளக்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து, அலுமினியம் மட்டையை ஓர் போட்டியில் பயன்படுத்த, தனது எதிராணியான இங்கிலாந்து, அதனை வன்மையாக கண்டிக்க, இவர் அதனை தூரம் வீசினர். பல நாட்களுக்கு, அவ்வாறு தயாரிக்கப்பட்ட அலுமினியம் மட்டைகள் சிறப்பாக விற்பனைக்கு உள்ளாகியது, அதற்கு பின், ஐசிசி, மரத்தால் உருவாக்கப்பட்ட மட்டைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற விதியை கொண்டு வருகின்றார்கள். இச்சமபவம் 1979ம் ஆண்டு காலகட்டத்தில் நடைபெற்றது.
பந்துவீசியது லில்லீ, பந்தை கைப்பற்றியது மார்ஷ். பந்துவீச்சாளரும், விக்கெட் கீப்பரும் இனைந்து வழங்கப்பட்ட விக்கெட்டுகள் காற்றில் இவ்வணி முதல் இடத்தை பிடிக்கும். 95 முறை, இவர்கள் அணைந்து விக்கெட்டுகளை கைப்பற்றினர். இது வரை, இச்சாதனையை முறியடிக்கப்படவில்லை.
ஒரு சமயத்தில் இவர் 154.8 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசினார். அதாகப்பட்டது, அப்போது உள்ள காலகட்டத்தில், பேட்ஸ்மேனை நெருங்கும்போது உள்ள வேகத்தை கணித்து கூறுவர். நடைமுறை காலகட்டத்தில், பந்துவீச்சாளர்கள், பந்தை வீசும் தருணத்தில் கணிக்கப்படும் வேகத்தை குறிப்பிடுகின்றனர். ஆதலால், இவர் நிச்சயம் 170 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசியிருப்பார. இவ்வொரு சம்பவம், இவரின் சிறப்பை நன்கு விளக்குகின்றது
ஹர்பஜன் சிங் (ஜூலை 3, 1980)
இந்நாள், 1980ம் ஆண்டில், ஜலந்தர் எனும் பஞ்சாபை சேர்ந்த நகரில் பிறக்கின்றார். 5 தங்கைகளை உடைய மூத்த அண்ணன் ஆவார். குடும்பத்தில் உள்ள, ஒரே மகன் ஆவார். தனது தந்தை வால்வு (அடைப்பான்) தொழிற்சாலை மற்றும் பந்துதாங்கியை வைத்து நடத்தியிருந்தாலும், ஹர்பஜன் சிங்'கை கிரிக்கெட்டில் முழுதாக ஈடுபடுத்தினார். சிறிய வயதிலிருந்து கிரிக்கெட் விளையாடும் இவர், உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களிலும், ரஞ்சி கோப்பை தொடர்களிலும் நன்கு விளையாடினார். ஆனால், அவரிடம் உள்ள ஓர் குணம், மிக முரட்டுத்தனமாகவும், கோபமாகவும் நடந்துக்கொள்வது. தான் அளித்திருந்த ஓர் பேட்டியில், தனது தொடக்கத்தில் நடந்துகொண்டதை பற்றி தான் மிகவும் வருந்துவதாக கூறினார். இந்திய அணியினுள் 18 வயதில், 1998ம் ஆண்டில் இடம் பெறுகின்றார். 19க்கும் கீழ் பங்கேற்கப்படும் சர்வதேச கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்குப்பின், களமிறங்கும் இவர், தொடக்கத்தில் பலவகையான சரிவுகளை எதிர்கொள்கின்றார்.
பல காலங்களாக விளையாடும் கும்ப்ளே மற்றும் தற்போது, இந்திய அணியினுள் களமிறங்கும் ஹர்பஜன், என இரு சுழற்பந்துவீச்சாளர்களுக்கும், அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஓர் யுத்தமே நடைபெற்றுக் கொண்டிருந்தது. கும்ப்ளே, மிகவும் அனுபவம் உள்ள வீரர் என்பதால், ஹர்பஜனை புறம் தள்ளி கும்ப்ளே'விற்கு இடம் வழங்கப்பட்டது. ஆனால், இவர் மனம் தளராது போராடினார்.
2000ம் ஆண்டில், தனது தந்தை இயற்கை எய்த, குடும்பத்தின் பாரம் இவரின் தலையில் இறங்கியது. 5 தங்கைகளை மணமுடிக்க வேண்டும் என்கிற கட்டாயம், குடும்பத்தை நல்வழியில் சீராக வேண்டும் என்பதற்காக, கிரிக்கெட்டை விட்டு விடலாம் என்கிற எண்ணத்திற்கு தள்ளப்பட்டார். அப்போது ஒரு ஆண்டுகாலமாக அணியினுள் இடம்பெறவில்லை. ஆனால், தனது தந்தை, தன்னை ஓர் கிரிக்கெட் வீரராக பார்க்கவேண்டும் என்கிற எண்ணத்தில் உயிர் மாண்டதால், அவருக்கு ஓர் மகனாக கடமையை செலுத்துமாறு, மீண்டும் போராடினார்.
இம்முறை மிகவும் சிறப்பாய். கங்குலி, இவரை மிகவும் நம்பிக்கொண்டிருந்தார். பல சம்பவங்களை நிகழ்த்தினார். ஆனால், இவரிடமிருந்து வெளிவந்த மற்ற ஓர் இன்னல், ஒரு நாள் கிரிக்கெட்டிலும், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் உள்ள குழப்பம் வெளிவந்தது. ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் சரிவு ஏற்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்கு விளையாடினால், ஒரு நாள் கிரிக்கெட்டில் சரிவு ஏற்பட்டது. ஆனால், இவையனைத்தையும் கடந்து வந்தார்.
இரண்டாவது அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆஃப் சுழற்சி பந்துவீச்சாளராக திகழ்ந்தார்( டெஸ்ட் கிரிக்கெட்டில் ). ஆனால், நான் கூறியவாறு, அவருடைய முரட்டுத்தனமான குணம் மற்றும் சினம், பல இடங்களில் இன்னல்களை உருவாகியுள்ளது.
2008ம் ஆண்டில், அவருக்கும் ஆஸ்திரேலியா அணியின் வீரரான சிமெண்ட்ஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் ஹர்பஜன் சிங், சிமெண்ட்ஸை கண்டு குரங்கு என கூறியதாக பழிகூறினர். இச்சம்பவம், இனவெறியை காட்டுவதாக குறிப்பிட்டு, ஐசிசி அவரை தடை செய்தனர். இதனை எதிர்த்து, சச்சின் டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் வாரியதுடன் இனைந்து, குரல் எழுப்பினர். ஹர்பஜன் சிங், அவரை திட்டியது என்பது உண்மை தான். ஆனால், குரங்கு என குறிப்பிட வில்லை, என குரல் எழுப்ப, தன மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்கியது ஐசிசி. ஆனால், தான் திட்டியதாக, குறிப்பிட்ட பணம், நிதியாக கட்ட வேண்டும் என ஐசிசி தீர்ப்பு வழங்கியது. இப்போது உள்ள கறுப்பின பிரச்சனை, 12 ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட்டில் நிகழ்ந்தது.

ஆனால், காலங்கள் கடந்து செல்ல, பொறுமை அதிகரித்தது. பேட்டிங்கில், இவர் 8ம் தளத்தில் களமிறங்கி, அதில் தன்னால் முடிந்த ரன்களை அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில், ஓர் சதம் அடித்துள்ளார். சில
போட்டிகளில், இவர் வெகு விரைவாக களமிறங்கி அடிக்கும் சிக்ஸர்களால், இந்திய அணி பல போட்டிகளை வென்றுள்ளது.
Comments
Post a Comment