கிரிக்கெட் வர்ணனை செய்திகள்

சஞ்சய் மஞ்சரேக்கர், எனும் ஓர் கிரிக்கெட் வர்ணனையாளரைப் பற்றி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் அறிந்திருப்பர். சென்ற ஆண்டு, தான் கூறிய தகாத சொற்களால், அவரை வர்ணனை பணியிலிருந்து, இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்கியது. இப்போது, 2020ம் ஆண்டின், ஐபிஎல்தொடருக்கு , தன்னை மீண்டும், வர்ணனை பணியில் அமைக்குமாறு, இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஓர் கடிதம் எழுதியுள்ளார்.

புரியவில்லையா ?... இனி வரும் பக்கங்களில் உங்களுக்கு புரியும்..!. சென்ற ஆண்டு, உலகக்கோப்பை  நடைபெற்றது. இத்தொடரில், இந்திய அணியும் நியூஸிலாந்து அணியும், அரையிறுதி போட்டியில் முடிந்தது. அப்போட்டியிற்கு முன், தனது ட்விட்டர் பக்கங்களில், இந்திய சர்வதேச அணியின் ஆல் ரௌண்டராக களமிறங்கும் ரவீந்திர ஜடேஜா, எனும் வீரரை, தான் " Bits and Pieces Player", அதாவது " பிட்கள் மற்றும் துண்டுகள் வீரர்" என பதிவிட, கலவரம் உண்டாகியது. இதே தவற்றினை, அப்பொடி நடைபெறும் தருணத்தில், தனது வார்த்தைகளால் கூற, நேரடி ஒளிபரப்பாகியது. அப்போட்டியில், ஜடேஜாவின் சூறாவளி ஆட்டத்தினால், தனது அவகூறுகளை தானே மீண்டும் பெற்றுக்கொண்டார். இது முதல் சம்பவம் !.

இதனையடுத்து, 2019ம் ஆண்டில் நவம்பர் மாதத்தில், இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள், முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை விளையாடியது. நாம் அனைவரும் அறிந்தது, ஹர்ஷ போக்லே, எனும் இந்திய வர்ணனையாளர், கிரிக்கெட் எனும் களத்தில் எவ்வித அனுபவுமின்றி, வர்ணனையாளாரை பணிபுரிகின்றார், என்பது. இப்பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறும் தருணத்தில், சஞ்சய் மஞ்சரேக்கரும் ஹர்ஷ போக்லேவும் இணைந்து வர்ணனை பணியை மேற்கொள்ளும் தருணத்தில், இருவருக்கிடையே ஓர் வாக்குவாதம். பிங்க் நிரப்பி பந்தின் தெரிவு நிலையினை குறித்து. அவ்வாறு ஏற்பட்ட ஆரோக்கியமான வாக்குவாதத்தில், சஞ்சய் மஞ்சரேக்கர், தீயிட்டர். ஹர்ஷா போக்லே, " வீரர்களிடம் ஒரு முறை, பந்தின் தெரிவுநிலையினை பற்றி கருத்துகள் கேட்டுக்கொள்ள வேண்டும்" எனக் கூற, சஞ்சய் மஞ்சரேக்கரோ பதிலுக்கு " பந்தின் தெரிவுநிலை மிகவும் அற்புதமாக உள்ளது , எனக்கும் இது தெரியும், காரணம் நான் பல காலங்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளேன்" எனக் கூறினார். அதாவது, ஹர்ஷ போக்லே, கிரிக்கெட் விளையாடாமல், தனது கருத்துக்களை பதிவிடுகின்றார் என மறைமுறைகமாய் கூறுகின்றார். இச்சொற்கள், எதிரொலி எழுப்பியது.

இவ்விரு சம்பவங்களை மனதில் வைத்து, இவ்வாண்டின், இந்திய - தென் ஆஃப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான நடைபெறவிருந்த தொடருக்கு முன், இவரை பணிநீக்கம் செய்தது இந்திய கிரிக்கெட் வாரியம். அத்தொடர், கொரோனா'வின் அச்சுறுத்தலால் நடைபெறாமல், தடைபட்டது. இப்போது, செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கு, தான் வர்ணனை செய்யும்படி கேட்டுக்கொண்டு, இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஓர் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், " நான் செய்ததை நினைத்து வருதிகின்றேன். இனி இவ்வாறு எவ்வித சம்பவமும் நடைபெறவாது. விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் எனது கருத்துக்கள் இனி இருக்கும். என்னை ஐபிஎல் வர்ணனை குழுவில் மீண்டும் சேர்க்குமாறு, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என எழுதியுள்ளார். 

ஐபிஎல் தொடர், செப்டம்பர் 19ம் தேதி அன்று தொடங்கி, நவம்பர் 8ம் தேதி நிறைவு பெரும். இதற்கு, உண்டான வர்ணனை குழுவினை இனி வரும் நாட்களில், நியமிக்கவுள்ளார்கள்.    

"நீ பற்ற வைத்த நெருப்பொன்று 
பற்றி எறிய உனை கேட்கும்
நீ விதைத்த வினையெல்லாம்
உனை அறுக்கக் காத்திருக்கும்”      

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?