வெற்றி பெற்றும் அரையிறுதி சுற்றை அடையவில்லை பாகிஸ்தான்
இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றை அடைந்ததற்கு பின், 4ம் இடத்திற்கு நியூஸிலாந்து அணியிற்கும் பாக்கிஸ்தான் அணியிற்கும் ஓர் அடிதடி யுத்தமே நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், இப்போது பாக்கிஸ்தான் அணியின் நெட் ரன் ரேட் என கூறப்படும் கணக்கில், பெரிய பள்ளத்தாக்கு உள்ளதை கண்டறிந்தனர். அப்பள்ளத்தாக்கை போக்கி, அரையிறுதி சுற்றை அடையவேண்டும் என்றால், பங்களாதேஷ் அணியிற்கு எதிராக விளையாடவுள்ள இப்போட்டியில் முதலில் பேட்டிங்கை மேற்கொண்டால், 400க்கும் ரன்களை அடித்து, பங்களாதேஷ் அணியை 100 ரன்களுக்கு தடுத்து நிறுத்தவேண்டும். கிரிக்கெட்டில் பலமுறை இவ்வாறு நடைபெற்றிருந்தாலும், பாகிஸ்தான் அணியின் அணிவகுப்பை காணும்பொழுது, இச்சம்பவம் சாத்தியமின்றி என தோன்றுகிறது.
ஆட்ட நாயகன் விருதை பெற்றது - ஷாஹீன் அஃப்ரிடி. நியூஸிலாந்து அணி தகுதி பெற்றிருந்தாலும், பாகிஸ்தான் அணியை பொறுத்தமட்டில், தாங்கள் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்கிற நிறைவு கண்டிப்பாய் இருக்கும். ஆனால், அவர்களின் சில கொடூர தோல்விகள் மற்றும் விறுவிறுப்புடன் கைப்பற்றிய சில வெற்றிகள், அணியின் நெட் ரன் ரேட் எனும் வகீதத்தை பாதித்தது. மேற்கு இந்திய தீவுகளுடன் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து, எதிரணி அதனை 30 ஓவர்கள் மீதம் வைத்து வெற்றிபெற்றது ஓர் பள்ளத்தாக்கை உருவாக்கியது. பின்னர், இந்திய அணியிடம் 89 ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த தோல்வி, மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணியிற்கு எதிரே கைப்பற்றிய கடைசி ஓவர் வெற்றி, என உள்ள சில தவறுகள், வெளியேற்றத்தை பரிசாக வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் அணி எதிர்கொண்டு வெற்றி பெற்ற அணிகள் மிகவும் பலமுள்ளவர்கள். தொடரின் தொகுப்பாளரான இங்கிலாந்து அணியை அடித்து சாய்த்தது. பின்னர், தங்களுக்கு சரிக்கு சமம் எனக்கருதப்படும் நியூஸிலாந்து அணியை தோற்கடித்தது. ஆனால், ஆஸ்திரேலியா அணியிற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மட்டும் ஸ்டார்க்கின் ஓவரை கடந்து வெற்றிபெற்றிருந்தால், தற்போது உள்ள நிலை மாறியிருக்கும். ஆனால், நெட் ரன் ரேட், பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட்டில் விளையாடியது. 2015ம் ஆண்டில், மேற்கு இந்திய தீவுகள் அணியிற்கும் ஐயர்லாந்து அணியிற்கும், கால் இறுதி சுற்றை அடையும் போட்டி இருந்தது. ஆனால், ஐயர்லாந்து அணியின், இறுதி ஓவரில் கிடைத்த வேட்டிகள் மற்றும் படுதோல்விகள், அவ்வணியின் ஆசைகளில் மண்ணை தூவியது. ஆதலால், மேற்கு இந்திய தீவுகள் அணி, தகுதி பெற்றது.
லார்ட்ஸ் மைதானத்தில், சென்ற ஆண்டு, இந்நாளில், பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டது. டாஸ் வென்ற பாக்கிஸ்தான் அணி முதலில் எவ்வித தயக்கமுமின்றி பேட்டிங்கை மேற்கொள்ள முடிவெடுத்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் தடுமாறிக்கொண்டிருந்த ஃபகர் சமான், ஸ்டம்ப்பை விட்டு வெளியே வீசப்பட்ட பந்தினை, கவர் திசையில் அடிக்கமுயன்று, பாயிண்ட் திசையில் நின்றுக்கொண்டிருந்த மெஹிடி ஹாசனிடம் கேட்ச் கொடுத்து விட்டு சென்றார். ஓப்பனிங் இணைப்பு துண்டிக்கப்பட்டது. களமிறங்கிய பாபர் அசாம், இமாம் உல் ஹக்'குடன் இனைந்து அருமையான பார்ட்னெர்ஷிப் ஒன்றை அமைத்தார்கள். பாகிஸ்தான் அணியின் பேட்டிங்'கிற்கு ஓர் அடித்தளமாய் அமைந்தது. இருவரும் அரை சதங்கள் கடந்தனர். அதில், இமாம் உல் ஹக் சதம் அடிக்க, பாபர் அசாம் 4 ரன்களில், தனது சதத்தை கைநழுவினார். இருவரின் ஆட்டம், மிகவும் பக்கபலமாய் அமைய, இடையில் களமிறங்கியவர்கள், இவ்வாறு அமைக்கப்பட்ட அடித்தளத்தை வைத்து இன்னும் அதிக ரன்களை குவிப்பார்கள் என நினைக்கும் தருணத்தில், இடைதளத்தில் சொதப்பல் நிகழ்ந்தது. நல்ல வேலைக்கு இமாத் வாசிம் சிறு முக்கிய ரன்களை வெகு விரைவாக அடித்த காரணத்தினால், 315/9 என்கிற இலக்கை அடைந்தது பாகிஸ்தான் அணி. நியூஸிலாந்து அணி, பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள். குறிப்பிடத்தக்க நன்றி முஸ்தஃபிஸுர் ரஹ்மானையே சாரும்.
பாகிஸ்தான் அணியினால் தகுதி பெறமுடியாது. ஆனால், கடைசி போட்டியை வெற்றிபெறுவதன் மூலம், உலகிற்கு தங்களின் சிறப்பை உணர்த்த ஓர் வாய்ப்பு என்பதை புரிந்துகொண்டார்கள். மிகவும் அருமையாக விளையாடிய பாகிஸ்தான் அணியிற்கு கிடைத்த சில இமாலய தோல்விகள், இறுதியில் கழுத்தை நெரித்தது. களமிறங்கினர் பங்களாதேஷ் அணியின் வீரர்கள். முதல் பத்து ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை கைவிட்டது பங்களாதேஷ் அணி. ஆனால், தொடரில் பங்களாதேஷ் அணியின் சிறப்பு ஆட்டக்காரராக திகழ்ந்த ஷகிப், அன்றும் ஜொலித்தார். 64 ரன்கள் அடித்தார். இவ்வரைசதத்தின் மூலம், இத்தொடரில் 600 ரன்கள் குவித்த 5 வீரர்களுள் ஒருவராக திகழ்கின்றார். ஆனால், இதை தவிர்த்து பங்களாதேஷ் அணியின் பேட்டிங்'கில் கூறும் அளவிற்கு சிறப்பான ஆட்டம் வேறேதும் இல்லை. விக்கெட்டுகள், குழாயிலிருந்து வெளிவரும் தண்ணீரை போன்று, வெகுவிரைவாக விழுந்தது. 20 வயது கொண்ட ஷாஹீன் அஃப்ரிடி, அன்று 6 விக்கெட்டுகளை கைப்பற்றுகின்றார். மிக சிறு வயதில் கைப்பற்றிய 5 விக்கெட் வீழ்ச்சி இதுவே. இதன் காரணத்தினால், பங்களாதேஷ் அணி 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இவ்வரலாற்று சம்பவங்கள் வெற்றிகளும், நெட் றன் ரேட்டின் முக்கியத்துவத்தையும் நன்கு உணர்த்துகின்றது. ஆதலால், எவ்வித அணியின் எதிராக போட்டியிட்டாலும் வெற்றியை ஈட்ட வேண்டும் என்கிற நோக்குடன், முழுவீச்சில் போட்டியிடவேண்டும்.
Comments
Post a Comment