மகளிர் ஐபிஎல் தொடர் 2020 - செய்திகள்
2018ம் ஆண்டில், முதன் முதலில், மகளிருக்கென ஓர் ஐபிஎல் தொடர், இன்னும் விலாவரித்தால், சேலஞ்சர் தொடர், நடைபெற்றது. அதனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், இவ்வாண்டில் நான்கு அணிகளை அமைத்து நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இதனைப்பற்றி இப்போது, மிகவும் தெளிவான ஓர் செய்தி கிடைத்துள்ளது.
சௌரவ் கங்குலி அவர்கள், வெளியிட்ட முதல் அறிவிப்பு - "இவ்வாண்டின் மகளிர் ஐபிஎல் தொடர் நிச்சயம் நடைபெறும். அது மட்டுமல்லாது, சர்வதேச மகளிர் கிரிக்கெட் தொடர்களைப்பற்றியும் நாங்கள் கலந்துரையாடுகின்றோம். விரைவில், மகிழ்வான செய்திகளுடன் உங்களை நான் சந்திக்கிறேன்" என குறிப்பிட்டார்.
கடந்த சிறு நாட்களாக, ஐபிஎல் பற்றிய செய்திகளே வெளிவருகின்றது. இவ்வாறு உள்ள நிலையில், ஆண்கள் விளையாடும் ஐபிஎல் தொடர், செப்டம்பர் 19ம் தேதி அன்று துவக்கம் பெற்று நவம்பர் 8ம் தேதி அன்று நிறைவுபெறும் என்கிற செய்தி வெளிவந்துள்ளது. ஆனால், இச்செய்திகளை காணும் தருணத்தில், மகளிர் கிரிக்கெட் போட்டிகளைப்பற்றி எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
பலர், குழப்பங்களில் திகழ, தற்போது, ஐபிஎல் நிர்வாக உறுப்பினர்களுக்கு இடையே, கலந்துரையாடல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இக்கலந்துரையாடலில், முதலில் வெளிவந்த செய்தி, மகளிர் ஐபிஎல் தொடரினை குறித்ததே.

இதனையொட்டி, வெவ்வேறு பத்திரிக்கைகளின் வாயிலாக கிடைத்த செய்தி, "இவ்வாண்டின் மகளிர் ஐபிஎல் தொடர் நவம்பர் 1ம் தேதியிலிருந்து நவம்பர் 10ம் தேதி வரை, ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது" எனவும், " தென் ஆஃப்ரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கும் எதிரே, வெள்ளைப்பந்து தொடர் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டுள்ளோம்" எனவும் வெளிவந்தது.ஆதலால், மகளிர் கிரிக்கெட் நடைபெறுவதன் ஒளி, மிகவும் பளீரென தெரிகிறது. எனவே, "காரிகா, என் காரிகா, உன் நூலிலேறி போகிறாய், நீ போகிறாயோ ?".
இன்று, மாலை நேரத்திற்குள், ஆண்கள் விளையாடும் ஐபிஎல் தொடர், குறித்த செய்திகள், விதிமுறைகள் மற்றும் நிலையான இயக்க நடைமுறை குறித்த தாள் வெளியிடப்படும்.
தற்போது, வீரர்களின் எண்ணம் " போடா போடா, என்னைக் காட்டும் விலங்கில்லை, ஓஹோஓஹோ......." எனவே இருக்கும்.
Comments
Post a Comment