2020 ஐபிஎல் செய்திகள் - ஆலோசனைகளுக்குப் பிறகு

இன்று, இவ்வாண்டின் ஐபிஎல் தொடர் பற்றிய ஆலோசனைகளை வெளியிட, அனைத்து நிர்வாக உறுப்பினர்களும், ஒன்றிணைந்து, கலந்துரையாடினர். அந்த கலந்துரையாடலில், பல செய்திகளும், பல மாற்றங்களும் வந்தனர். அவ்வாறு வெளிவந்த தகவல்கள் அனைத்தும், மிகவும் முக்கியமானவை.

இவ்வாண்டின் ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும், என்கிற செய்தியை, நாம் அனைவரும் அறிந்திருப்போம். இதில், ஓர் சிறிய மாற்றம் உள்ளது. முதன் முதலில், ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, இவ்வாண்டின் ஐபிஎல் தொடரானது, செப்டம்பர் 19ம் தேதி அன்று துவக்கம் பெற்று நவம்பர் 8ம் தேதியன்று நிறைவு பெரும், எனப்து தான். ஆனால், தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், இறுதிபோட்டியின் தேதியை நவம்பர் 8ம் தேதியிலிருந்து 10ம் தேதியிற்கு தள்ளிவைத்துள்ளனர் என்பது ஆகும். 

இவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றத்திற்கு, வெறும் இரண்டு காரணங்கள் மட்டுமே. ஐக்கிய அரபி நாடுகளில் உள்ள கொரோனா விதிமுறைகளுக்கு ஏற்றவாறும், அங்கு உள்ள சூழலுக்கு ஏற்றவாறும் திட்டமிடப்பட்டதாய் ஒரு புறம் பார்க்கப்பட்டாலும், மறுபக்கத்தில், இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட தேதிகளால் உள்ள வணிகத்தை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும். நவம்பர் 14ம் தேதியன்று, இந்திய நாடு தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றது. நவம்பர் 10ம் தேதி, தீபாவளி உள்ள வாரத்தில் இருப்பதால், எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். பார்வையளர்களின் எண்ணிக்கையும் மிகுந்து காணப்படும். பார்வையாளர்கள் அதிகரித்தால், ஸ்பான்சர்கள் மிகவும் பயனடைவர். ஸ்பான்சர்களைத் தொடர்ந்து, தொலைக்காட்சி நிறுவனங்களும், விளம்பர நிறுவனங்களும் மிகுந்த லாபம் அடைவர். இவர்களையொட்டி, இந்திய மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் கிரிக்கெட் நிறுவனங்களும், பெரும் பங்கினை பார்ப்பர். வெறும் 2 தேதிகள் தள்ளிவைப்பதால் உள்ள பின்னல் வணிகமே இது தான்.

அடுத்து வெளியிடப்பட்ட தங்கள் யாதென்றால், இவ்வாண்டின் ஐபிஎல் தொடரில், மொத்தம் 10 " Double Header ", அதாவது 10 "இரட்டை தலைப்பு போட்டிகள்" நடைபெறும். ஒரே நாளில், இரண்டு போட்டிகள் நடைபெற்றால், அவற்றை இரட்டை தலைப்பு போட்டிகள் என்றே வழங்குவர்.

இதனையடுத்து, அனைத்து அணிகளும் மொத்தம், 24 வீரர்களை, அழைத்து செல்ல அனுமதி வழங்கியுள்ளனர். ஆதலால், அணிகளுக்கு பெரிதும் குழப்பம் நேரிடாது. 

இதனுடன் கூடுதலாய் கிடைக்கப்பட்ட செய்தி, இந்திய அரசாங்கத்திடமிருந்து அனுமதி வழங்கியள்ளார்கள். ஆதலால், ஐபிஎல் நடைபெறும், பல நாள் போராட்டம் முடிவுபெற்றது.

இறுதியில் உள்ள செய்தி, இந்திய - சீன இடையிலான தகராறில், ஐபிஎல் தொடருடன் இணைந்து, ஒப்பந்தமிட்டு, செயல்படவிருந்த சீன நிறுவனங்களை ரத்து செய்யவுள்ளதாய், முற்காலத்தில் செய்திகள் வெளிவர, இப்போது அவையனைத்தையும் புறம்தள்ளியது, ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனம். ஏன் இந்த முடிவு, என கேள்வி எழுப்பியதற்கு, உறுப்பினர்கள் அளித்த ஒரே பதில், " தற்போது உள்ள நிலையில், ஸ்பான்சர்களை மாற்றுதல் என்பது, தேவையில்லா பாரம் "எனவும், கொரோனா இன்னல் முடிவடைந்த பின், பேச்சுவார்த்தை நடத்திம் இதற்கு தீர்வு அளிக்கலாம் ", எனவும் கூறினர். ஆதலால், ஸ்பொன்சார்களின் மாற்றம் ஏதும் இல்லை.  

இவ்வாண்டின் ஐபிஎல் தொடர், யாரை பலனளிக்குமோ இல்லையோ, தோனி அவர்களையும், தோனியின் ரசிகர்களையும் நிச்சயம் பலனளிக்கும். காரணம், சென்ற ஆண்டு, ஜூலை 10ம் தேதி அன்று நடைபெற்ற, உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் அவரை பார்வையிட்டோம், அதற்கு பின், இன்று வரை, அவரை களத்தில் பார்வையிட இயலவில்லை. எனவே, அவருடைய வருகையை கண்டுக்கொள்ள, பலர் ஆவலாய் காத்துக்கொண்டு இருக்கின்றனர். அவ்வாறு உள்ள பலரில், நானும் ஒருவனே, என மிகவும் ஆணித்தரமாய் இங்கு பதிவு செய்கிறேன். 

" எப்போ வரோம்'னு முக்கியம் இல்ல, எப்படி சம்பவம் பண்றோம்'னு தான் முக்கியம்"      

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood