மோசடிகளை சமாளிக்க BCCIன் திட்டங்கள் - 2020/21
கிரிக்கெட் என்பது, நமது நாட்டில், ஓர் விளையாட்டு என்பதைக் கடந்து உயிரினும் மேலாக கருதப்படுகின்றது. கிரிக்கெட் வீரர்களை, தங்களின் பாசமுள்ள தலைவனாக கொண்டாடுகின்றார்கள். இந்தியா அணி, சர்வதேச அளவில், ஒரு போட்டியில் பங்குபெற்றால் மட்டும் போதும், அப்போட்டியை கண்டுகழிக்க, எவ்வித பணியாக இருப்பினும் அதனை விட்டுவிட்டு வருவார்கள். ICC நடத்தும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில், ஏதேனும் ஓர் போட்டியில் வெற்றிபெற்றாளோ அல்லது கோப்பையை கைப்பற்றினாலோ, அடுத்த நாள் தலைப்புச்செய்திகள், இச்சம்பவமாக தான் இருக்கும். பல இளைஞர்கள், சர்வதேச இந்திய கிரிக்கெட் அணியில், வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்றே அயராது உழைப்பர். அந்த உழைப்பிற்கு இடையில், ஏதேனும் வகையில், மோசடி நடைபெற்றால் ?....
பணம் அதிகம் புழங்கும் இடத்தில், குற்றங்கள் அதிகரிக்கும். உலக அளவில், மிகவும் செல்வாக்குடைய கிரிக்கெட் வாரியம் எது ?, என்கிற கேள்வியைக்கேட்டால், அதற்கு உடனடியான பதில், இந்திய கிரிக்கெட் வாரியம் என்பது தான். அவ்வாறு, செழிப்பாக காணப்படும், இந்திய கிரிக்கெட் வாரியத்தில், பல மோசடிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில், ஓர் மோசடி தான், வயது மற்றும் குடியேற்ற மோசடி ஆகும்.
இதற்கு நான் இந்திய கிரிக்கெட் வாரியத்தை மட்டுமே குறைகூற மாட்டேன். காரணம், குற்றங்களின் தொடக்கம் வெளியில் உள்ள சில மனிதர்களின் ஆசை ஆகும். இம்மோசடியைப்பற்றி கூறினால், கிரிக்கெட் விளையாடும் இளைஞர் ஒருவர், போலியான பிறப்பு சான்றிதழை பதிவு செய்து, அல்லது தனது சான்றிதழில் உள்ள பிறப்பு வருடத்தை மாற்றியமைத்து பதிவு செய்தலே ஆகும். இவ்வாறு பதிவிட்டு, வயதான வீரர்கள், தங்களுக்கு வயது குறைவு என்று பதிவிட்டு, அந்த குறைந்த வயதிலிலுள்ள போட்டிகளில் பங்குபெற்று, மிகவும் அயராது உழைத்த ஓர் வீரனின் வாய்ப்பை தட்டிச்செல்கின்றான்.
இக்குற்றத்தை சமாளிக்க, இந்திய சர்வதேச கிரிக்கெட் வாரியம், சில சட்டத்தில்த்தான்களை அமலுக்கு கொண்டுவர உள்ளார்கள். அவற்றுள்,
1. எவரேனும் ஓர் வீரர், தாமாக முன்வந்து, " நான், அசலான பிறப்பு சான்றிதழுக்கு மாறாக, போலி சான்றிதழை பதிவு செய்தேன்" என ஒப்புக்கொண்டு, தன்னுடைய அசல் பிறப்பு சான்றிதழை பதிவு செய்து, இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு, ஓர் கடிதம் எழுதினால் என்றால், தன்னை இடைநீக்கம் செய்யாது, தன்னுடைய வயது வரப்பில் உள்ள போட்டிகளில் விளையாட அனுமதி வழங்குவர். (இவை உள்நாட்டு வீரர்களுக்கு மட்டுமே)
2. அதுவே, தான் செய்த தவற்றை ஒப்போட்டுக்கொள்ளாது, இந்திய கிரிக்கெட் வாரியம், தாமாக கண்டறிந்தால் என்றால், 2 ஆண்டுகளுக்கு, அந்த வீரரை, எவ்வித போட்டிகளிலும், பங்குபெற அனுமதிக்காமல், தடை செய்வர் என கூறினார்.
3. இரு ஆண்டு தடையின் பின் என்ன செய்யலாம் ? என்று கேட்டால், அதற்கு அவர்கள் கூறிய பதில், " தங்களுடைய வயது வரப்பில் உள்ள போட்டிகளிலும், உள்நாட்டு போட்டிகளிலும் பங்குபெற அனுமதிக்க மாட்டோம்".
4. சர்வதேச கிரிக்கெட் அணியில் பங்குபெற்ற வீரர்கள் மற்றும் மூத்த கிரிக்கெட் வீரர்கள், இவ்வாறு மோசடி செய்தி, தாமாக முன்வந்து, கடிதம் அனுப்பினாலும், அவர்களுக்கு, மறுவாய்ப்புகள் வழங்கப்படாது, என்றும், இவர்களுக்கு 2 ஆண்டுகள் தடை உறுதி என்றும் கூறினர்.
இதனையொட்டி, இந்திய சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின், தலைவரான, திரு. சௌரவ் கங்குலி அவர்கள், " அனைத்து வயதுவரப்பில் உள்ள வீரர்களுக்கு, நாங்கள் தரமான கிரிக்கெட் போட்டிகளை வழங்க காத்திருக்கின்றோம். வயது மற்றும் குடியேற்ற மோசடிகள் நடைபெற்று, அதனை தாமாக முன்வந்து கூறவில்லை என்றால், அவர்களை நிச்சயம் 2 ஆண்டுகளுக்கு தடை செய்வோம். BCCI இதற்கு சிறிதும் இடமளிக்காது" எனக்கூறினார்.
அவருடனிணைந்து, சர்வதேச முன்னால் கிரிக்கெட் வீரர் மற்றும், சர்வதேச கிரிக்கெட் கலைக்கூடத்தின் தலைவரான, ராகுல் டிராவிட் அவர்கள் " வயது மோசடி என்பது மிகவும் தீவிரமான குற்றமாகும். பல வீரர்கள், இதனால் பாதிப்படைகின்றார்கள். BCCI வெளிகொண்டுவந்துள்ள, சட்டதிட்டங்களை காணும்பொழுது, வீரர்களுக்கு தேவையான ஓர் அறிவிப்பு, அவர்கள் மோசடியை மேற்கொள்ள கூடாது என்பது தான்"
சமீபத்தில், மஞ்சோட் கால்ரா, எனும் 19 வயதிற்கும் கீழ் உள்ள கிரிக்கெட் வீரர், மற்றும் 2018ம் ஆண்டின் 19 வயதிற்கும் கீழ் உள்ளவர்களுக்கென நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில், இந்திய வெற்றி அணியை சேர்ந்த இவரை, வயது மோசடி காரணத்திற்கு, தடை செய்துள்ளார்கள்.
ஆதலால், கிரிக்கெட் எனும் விளையாட்டை மிளிர்க்க, மேலும் ஓர் முயற்சி. இம்முயற்சி, எந்த வகையில் வெற்றிபெறும் என்று பொறுத்து இருந்து தான் கண்டுக்கொள்ள வேண்டும்.

Comments
Post a Comment