மேலும் விரிவான ஐபிஎல் செய்திகள்
மார்ச் மாதத்திலிருந்து மே மாத காலம் வரை நடக்கவிருந்த ஐபிஎல் தொடர், கொரோனா நோயின் காரணத்தினால், அதனை செப்டம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்கள். ஆதலால், இத்தொடர் செப்டம்பர் 19ம் தேதி அன்று தொடங்கி நவம்பர் 8ம் தேதி அன்று நிறைவு பெரும்..
இந்திய அரசாங்கத்திடமிருந்து பயணம் மேற்கொள்ள, அனுமதிகள் பெற்றனர். ஆதலால், அணிகளுக்கு விமான பயணம் குறித்து சில செய்திகளும் தெரிவிக்கப்பட வேண்டும். சில அணிகள், விமானங்களை வாடகைக்கு பெற்றுக்கொண்டு, அதில் பயம் மேற்கொள்ள திட்டமிட, வேறு சில அணிகளுக்கு நடைமுறை வாழ்வில் இயங்கும் விமானங்களை மட்டுமே முற்றிலும் நம்பிக்கொண்டு உளர். சென்னை சூப்பர் கிங்ஸ், எனும் ஐபிஎல் கிரிக்கெட்டின் தலைசிறந்த அணி, ஆகஸ்ட் 10ம் தேதி அன்று, தங்களின் கால்தடங்களை, அரபிக் நாடுகளில் பதிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
இவ்வாறு உள்ள நிலையில், இத்தொடரின் அட்டவணை, விதிமுறைகள், மற்றும் பயண அனுமதிகளை குறித்து மேலும் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தியா கிரிக்கெட் வாரியம், அனைத்து அணிகளுக்கும், "SOP" என்று அழைக்கப்படும் "Standard Operational Procedure", அதாவது "நிலையான இயக்க நடைமுறை", எனும் விதிமுறைகளை கொண்ட தாளினை வழங்க வேண்டும்.
அந்த தாளில், "வீரர்கள் எங்கு தங்க வேண்டும், எவ்வாறு பயணம் மேற்கொள்ள வேண்டும், அணிகளுக்கு தேவையான வளங்கள், செல்வங்கள், மற்றும் கொரோனா பரிசோதனைகள், கொரோனா'வின் காரணத்தினால் கொண்டுவரப்பட்ட விதிமுறைகள், செயல்பாடுகள், துபாய் நாடுகளில் எதனை நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும், எதனை வீரர்களை அழைத்து செல்ல வேண்டும்" என பல செய்திகள் உள்ளது. ஆதலால், அந்த தாள், வெகு விரைவில் கிடைக்க வேண்டிய நிபந்தனையை அனைத்து அணிகளும் உள்ளனர்.

ஆனால், இவையனைத்திற்கும், " நிலையான இயக்க நடைமுறை" ஓர் பெரும் தடையாக உள்ளது. தற்போது, வெளியிடப்பட்ட அறிவிப்பில், "SOPs", மற்றும் இத்தொடரின் அட்டவணை, இந்த வார இறுதியில் நடக்கவிருக்க கலந்துரையாடலின் பிறகு, ஆகஸ்ட் 2ம் தேதி அன்று, வெளியிடப்படும் என குறித்தனர்.
மேலும் ஓர் செய்தி யாதெனில், தென் ஆஃப்ரிக்கா நாட்டின் அரசாங்கம், செப்டம்பர் மாத இறுதி வரை, ஊரடங்கு உத்தரவை நீடித்துள்ளார்கள். ஆதலால், வெளிநாட்டு பயணங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணத்தினால், தென் ஆஃப்ரிக்கா நாட்டு வீரர்களான, ஏபி டீ வில்லியர்ஸ், ஃபாஃப் டூ ப்ளஸிஸ், குயின்டன் டீ காக், ககிஸோ ரபாடா, போன்ற நட்சத்திர வீரர்களால் பங்குபெற இயலாது. இச்செய்திகளை குறித்து, இந்திய கிரிக்கெட் வாரியம், தென் ஆஃப்ரிக்கா நாட்டின் அரசாங்கத்திடம், மேலும் ஒரு முறை கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளார்கள்.
ஆதலால், நாளை வரை காத்திருக்க வேண்டும். ஐபிஎல் தொடர் நிச்சயம் நடைபெறும். நமது நாட்டை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு, பல நாட்கள் கழித்து ஓர் விருந்து.
"வேட்டு போட்டு கொண்டாடு டா, இவன் நம்மாளு டா, whistle பத்தாது டா.....!"
Comments
Post a Comment