குசல் பெரேரா எனும் " குட்டி ஜெயசூரியா"
எந்த துறையை எடுத்துக்கொண்டாலும், அதில் ஒரு மனிதன் இருப்பான். அவனுடைய எண்ணங்களும், செயல்பாடுகளும், அத்துறையில் உள்ள வேறு சிறப்பானவருடன் இணைத்து, பொருத்தி பேசப்படுவர். கிரிக்கெட்டில் நாம் பார்த்தால், விராட் கோலியை, அடுத்த டெண்டுல்கர் என்றும், புஜாரா'வை, அடுத்த டிராவிட் எனவும் கூறுவார். அவ்வாறு, குசல் பெரேரா, என்கிற கிரிக்கெட் வீரரை, இலங்கை அணியின், தலைசிறந்த கிரிக்கெட் வீரரான, சனத் ஜெயசூரியா'வுடன் இணைய பேசுவர். இவருடைய, ஆட்டத்தைக்கண்டு, குசல் பெரேரா தான், அடுத்த சனத் ஜயசூரிய என்றும் அழைப்பர்.
இதுவரை 7 ஆண்டு காலமாக தான், சர்வதேச கிரிக்கெட் அணியில், களமிறங்கியுள்ளார். ஆனால், இத்தருணத்திற்குள், குசல் பெரேரா அவர்கள், வாழ்வின், உயர்வு தாழ்வுகளை பார்த்துள்ளார். இடது கை துவக்க வீரராக களமிறக்கப்படும் இவர், அதிரடி என்கிற ஒரு சொல்லினை மட்டுமே தனது வேதவாக்காக ஏற்றுக்கொண்டு விளையாடியுள்ளார். கவர்ஸ் திசைகளில் தான் அடிக்கும், ஆக்ரோஷமான ஷாட்டுகளை கண்டு அனைவரும் சனத் ஜெயசூர்யாவுடன், ஒப்பிட்டு பேசுவர்.
2019ம் ஆண்டில், தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக தான் அடித்த 153 ரன்களின் ஆட்டத்தை பற்றி இன்றும் பேசுவர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சேஸிங்கில் ஆடிய சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று.
பல சம்பவங்களில், காயங்களுடன் வெளியேற்றம் செய்துள்ளனர். அதில், குறிப்பிடத்தக்க ஓர் சம்பவம் யாதெனில், 2018ம் ஆண்டில், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரே நடைபெற்ற, 3ம் டெஸ்ட் போட்டியில், பௌண்டரியை தடுக்க முயன்று, கோரமாக காயமடைந்தார். ஆனாலும், தனது அதிரடியான குணம், சிறிதும் குறையவில்லை.
இலங்கை அணியின், தலைசிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரரும் இவரே. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில், 13 அரை சதங்களை, தனது பெயரில் பதித்துள்ளார். ஒரு போர் நடைபெற்றால், அதில் முதலில் தாக்குதலை நடத்துவது, சிப்பாய் தான். அவர்களை வழிநடத்துவது, சேனாதிபதி ஆகும். அவ்வாறு, இலங்கை அணியின் சப்பையாக களமிறங்கும் இவர், பல இன்னல்களுக்குப்பின், தற்போது படை தளபதியாக செயற்படுகின்றார்.
1990ம் ஆண்டில், கலுபோவிலா நகரில், 17ம் ஆகஸ்ட் அன்று பிறக்கும் இவருக்கு, மேலும் கிரிக்கெட்டில் கடந்து செல்லவேண்டிய பாதை என்றே பல உள்ளது. வளர்ந்து வரும் வீரன் ! எதிரணியின் பந்துகளை, சேதறடிக்கவுள்ளார்.
Comments
Post a Comment