நன்றி தோனி - நன்றி ரெய்னா

இந்த பதிவ ஒரு ரசிகனா, நான் எழுதுறேன். 2011 World Cup Tournament நடந்துட்டு இருந்துச்சு. எனக்கு அப்போ ஒரு 10 வயசு இருக்கும். அந்த time'ல cricket மேல அவ்ளோ ஆர்வம் லாம் எனக்கு கெடயாது. வீட்ல அப்பா அம்மா, match பாத்துட்டு இருப்பாங்க. அப்போ, பாக்கிஸ்தான்'கும் இந்தியா'கும்  semi final match நடந்துட்டு இருந்துச்சு. நா முதன்முதல்'ல பார்த்த cricket match அது தான். அன்னிக்கி, இந்தியாவோட middle order சொதப்பும், அப்போ இந்தியா'க்கு match காலி'னு நெனச்சுட்டு இருக்கும்போது, ரெய்னா'னு 24 வயசு பையன் உள்ள வரான். கடைசி ஓவர், கடைசி ball வரைக்கும் நின்னு விளையாடி, கரை சேர்க்குறான். அதே match'ல keeping position'ல நின்னுட்டு தோனி field position மாத்துறாரு. அது ரொம்ப புதுசாவும், கம்பீரமாவும் இருந்துச்சு. அந்த match'la இந்தியா ஜெய்க்குறாங்க.

2011ம் ஆண்டு, world cup final match நடக்குது. அன்னிக்கி, தொடக்கத்துலயே, டெண்டுல்கரும் சேவாகும் out ஆகுறாங்க. எங்க வீட்ல எல்லாரும் dull'லா இருந்தாங்க. எனக்கு, ஏதோ அன்னிக்கி தோனி காப்பாத்துவாருனு, ஒரு சின்ன நம்பிக்கை மனசுல இருந்துச்சு. ஒரு குருட்டு நம்பிக்கை. ஆனா, அந்த குருட்டு நம்பிக்கை கடைசில உண்மையாகிடுச்சு. அப்போ நான் நம்ப ஆரம்பிச்சேன், நம்ம teamகு ஒரு ஆபத்துனா, மோதல் ஆளா வந்து நிப்பாருனு. அதுக்கு அப்பறோம், அவரோட பழைய matchesலாம் எடுத்து பாத்தேன். உடம்பெல்லாம் புல்லரிச்சிது. அந்த ஒரு நொடி, எனக்கு cricket மேல ஒரு அளவுகடந்த காதல் வந்துடுச்சு. அப்போ இருந்து இப்போ வரைக்கும், என்னோட நம்பிக்கைய நிறைய வாடி காப்பாத்திருக்காரு. 

பல பேரு சொல்லிருக்காங்க, நாங்க டெண்டுல்கர் ஓட battingஅ பாத்து cricketஅ நேசிக்க ஆரம்பிச்சோம்னு. ஆனா, நான் என்னோட collarஅ தூக்கிவிட்டு சொல்லுவேன், cricket'ல எனக்கு அ, ஆ, இ, ஈ சொல்லிகுடுத்தது தோனி தான். இன்னிக்கி, நான் இவ்ளோ cricket பத்தி பேசுறேனா, அதுக்கும் காரணம் தோனி தான். 

இங்க Friends பல பேரு, தோனியை மட்டம் தட்டி பேசும்போது, நான் மோத ஆளா போயி சண்டை போடுவேன். இன்னிக்கும், தோனியை நான்  விட்டுக்கொடுத்ததில்ல. அந்த 2011 world cupகு அப்புறம் IPL நடந்துச்சு. அதுல, தோனி - ரெய்னா, ரெண்டு பெரும் சேர்ந்து விளையாடுற போட்டியெல்லாம் பார்க்கும்போது, அவ்ளோ சிறப்பா இருந்துச்சு. அந்த வருஷம், IPL கப் அடிச்சதும், சென்னை அணி தான். 

அதே நேரத்துல, friends எல்லாரும் right handed batsman'னா இருப்பாங்க. நான் batting புடிப்பேன், மச்சா நீ leftஅ னு கேப்பாங்க. அதுக்கு அப்பறோம் ரெய்னாவும் left hander'னு  தெரிஞ்சிகிட்டேன். இவரையும் ரசிக்க ஆரம்பிச்சேன். 

நட்புக்கு யாரை reference சொல்லுறோமோ, இல்லையோ, இவங்கள நிச்சயமா சொல்லலாம். இன்னி வரைக்கும், தோனிக்கு ஒண்ணுன்னா தோள் குடுக்குற ஒரு நண்பன்'னா அது ரெய்னா தான். தலைவனா தோனி, பல records உடைச்சாரு. பல youngsterஸ கொண்டு வந்தாரு. பல வாட்டி, தனியாளா, இந்திய அணியை கடைசி வரைக்கும் கொண்டு போயிருக்காரு. 

அப்பாவும் finisher தான். இப்போவும் finisher தான். ஒரு run outல ஆரம்பிச்ச career இன்னொரு run outல முடிஞ்சிருச்சு. ஆனால், என்னிக்கும் முடியாதது, அவருக்காக நாங்க எங்களோட நெஞ்சுல கட்டி வெச்சிருக்க ஒரு நீங்காத இடம் தான்.

அவர் எதுக்கும் பெருசா அலட்டிக்க மாட்டாரு. match'அ ஜெயிச்சாலும் சரி, தோத்தாலும் சரி, அவரோட மனநிலை ஒரே மாதிரி தான் இருக்கும். தலைவனுக்கு சிறந்த example'ம் இவரே தான். வெற்றிபெற்றாளோ, இல்லனா cup அடிச்சாலோ, தன்னோட team players கிட்ட கொடுத்துட்டு இவர் ஒதுங்கிப்பாரு. அதே அந்த match'அ தோத்துட்ட, இவர் முன்னாடி நின்னு, பழி ஏத்துக்குவாரு. 

இவரை விட யாரும் அவ்வளவு haterகள சம்பாதிச்சிருக்க மாட்டாரு. தன்னோட, கடைசி time வரைக்கும், குறை சொல்லுறதுக்கு எவனாவது ஒருத்தனாவது கிளப்பிடுவான். கேட்டா, உண்மையான cricket ரசிகர்களாம். உண்மையான cricket ரசிகனுக்கு, ஒரு cricket player'அ மதிப்பான். நம்ம நாடு, இனிக்கும் உலக தரத்துல, top'ல இருக்காங்கன்னா அதுக்கு ஒரே காரணம் தோனி தான். ஆனா, இதுக்கும் அவர் பெருசா காது கொடுத்ததில்லை. தன்னால முடிஞ்சதை, தான் செஞ்சுட்டு தான் இருப்பாரு. 

இவரோடை சாதனைகளை முறியடிக்க இன்னொருத்தன் வருவான். ஆனா, cricketல இவர் ஏற்படுத்தின தாக்கத்தை வேற யாராலயும், நிறைவேத்த முடியாது. இப்போ, நான் பல players விளையாடின game'அ பாத்தாலும், இவரோட gameகு தான் என்னிக்குமே ரசிகனா இருப்பேன். 

நன்றி தல  !! நன்றி சின்ன தல !!        

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood