சீரும் நைட் ரைடர்ஸ் ; சூக்ஸின் ஆதிக்கம்

நேற்று, இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இரு போட்டிகளிலும், வெற்றி இலக்கு, 120 ரன்களுக்கும் கீழே இருந்தது. இதில், மேல் தளத்தில் இடம் பெற்றுள்ள அணிகள் வெற்றிபெற்றது. கீழ் தளத்தில், இருந்த அணிகள் மண்ணை கவ்வியது. இதில், வேறொரு சிறப்பான சம்பவம், இவ்விரு போட்டிகளிலும், இரண்டாம் இன்னிங்சில் பேட்டிங்கை மேற்கொண்ட அணிகள் தான் வெற்றிபெற்றது.

சூக்ஸ் VS பேட்ரியட்ஸ் 

சென்ற போட்டியில், மண்ணை கவ்விய சூக்ஸ் அணி, இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்கிற வெறியுடன் ஒரு பக்கம் களத்தில் இருந்தால், மறுபுறம், சென்ற போட்டியில் தான் தங்களின் முதல் வெற்றியை கண்ட பேட்ரியட்ஸ் அணி, மேலும் பல வெற்றிகளை அடுக்கிக்கொள்ள வேண்டும் என்கிற கடமையுடன் வலம் வந்தனர். டாஸ் வென்ற சூக்ஸ் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

முஹம்மத் நபியிடம் பந்தை வழங்கினார், அணியின் தலைவர், டேரன் சாமி. லின் அவர்களின், சொதப்பல் ஆட்டம், இன்றும் முடிவடையவில்லை. பேட்ரியட்ஸ் அணியின் ஒப்பனர்கள் வீழ்ந்தால், இடையில் உள்ளோரும் அவர்களுடன் இனைந்து சறுக்கினர். வலுவில்லாத அணியாகவே, இதுவரை இத்தொடரில் கடந்து வந்துள்ளது. ஆனால், நபியின் பந்துவீச்சோ, முழுவற்றையும் தனது கட்டுப்பாடில் கொண்டுவந்தது. காற்றில் மிகவும் பொறுமையாக, சற்று தூக்கி பந்துவீச, பேட்ரியட்ஸ் அணியின் வீரர்களோ பொறுமையின்றி, மிகவும் அவசரத்துடன் விக்கெட்டுகளை எதிரணிக்கு பரிசளித்தனர். இலவச பரிசும் கிடைத்தது. ஆதலால், நபி அவர்கள் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி, அச்சுறுத்த, பயத்தில் முழுதாக சுருண்டது, பேட்ரியட்ஸ் அணி. 110/9 என்கிற ஸ்கோரை மட்டுமே இறுதியில் அடிக்க இயன்றது.

தற்போது பேட்டிங்கை மேற்கொள்ள களமிறங்கியது, சூக்ஸ் அணி. ரகீம் கார்ன்வால், மிகவும் அதிரடியாக ஆட்டத்தை துவக்க, மடமட'வென ஸ்கோர் ஏகுரியது. அங்கு நபியென்றால், இங்கு இம்ரான் கான், சுழற்பந்து வீச்சினால், விக்கெட்டுகளை கழற்றினார். ஆனால், இப்போட்டியில் இரு அணிகளுக்குமிடையே உள்ள வேறுபாடு, சூக்ஸ் அணி, இம்ரான் கான் அச்சுறுத்தவுள்ளார் என்கிற செய்தியை புரிந்துக்கொண்டு, அவரின் ஓவர்களை மட்டுமே கடத்தினர். மீதம் உள்ள பந்துவீச்சாளர்களை, தாக்க, ரன்கள் வலம் வந்தது. வெற்றியையும் கைப்பற்ற இயன்றது.

ஆட்ட நாயகன் விருதை பெற்றது - முஹம்மத் நபி  

நைட் ரைடர்ஸ் VS வாரியர்ஸ் 

வழக்கம் போன்று, இப்போட்டியிலும், டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆம், டாஸ் வென்றது நைட் ரைடர்ஸ் அணி. அவர்கள் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்கள். களமிறங்கினர், வாரியர்ஸ் அணியின் ஒப்பனர்கள். அன்று, சுழற்பந்து வீச்சாளர்களுக்கும், மெதுவாக பந்து வீசுவோருக்கும், பிட்ச் நன்கு பொருந்தியது. அதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு, கேரி பெரி, சிக்கந்தர் ராசா மற்றும் ஃபவாத் அலாம் அவர்கள் வீசிய ஓவர்களில் கைப்பற்றப்பட்ட, தொடக்கக்கட்ட விக்கெட்டுகள் ஆகும். பொல்லார்ட்டின், தலைமை செயல்பாடுகளும், சிறப்பாக இருந்தது. நிக்கோலஸ் பூரான் அவர்கள் பேட்டிங்கை மேற்கொள்ளும் போது, கேரி பெர்ரியிடம் பந்தினை வழங்கி, அவருக்கு ஏற்றவாறு, ஷார்ட் லெக் திசையில் ஓர் வீரரும், ஸ்லிப் திசையில் ஓர் வீரரையும் அமர்த்தி, பந்துவீச, ஓர் அங்குலம் உருவாக்கி, பேட்ஸ்மேனுக்கு உள்ளே சுழன்று வந்தது. விக்கெட்டை கைப்பற்றினார். வாரியர்ஸ் அணியோ, கடந்த மூன்று போட்டிகளாக, 120க்கும் கீழ்ப்பட்ட இலக்கை மட்டுமே எதிரணிக்கு வழங்கி வருகின்றார்கள். இது, அவ்வணியின் சரிவை குறிக்கின்றது. ஆனால், அவர்களை பொறுத்தவரை, கீமோ பாலின் ஆட்டம், சில முன்னேற்றத்தை வழங்கியது. இருப்பினும், 112/7 என்கிற, சிறிய இலக்கை மட்டுமே வழங்கினர். பகலிரவு போட்டிகளில், டிரினிடாட் மற்றும் டொபாகோ மைதானத்தில், நினைத்தவாறு பந்து நம்மை வந்து அடையாது என்பது உண்மை தான். இருப்பினும், சற்று பொறுமைக்காத்து, களத்தில் நின்று, ஆட்டத்தை நகர்த்த எவரேனும் ஒருவர் இருந்திருந்தால், 140 ரன்களை,மிகவும் எளிதாக அடைந்திருப்பர். 

நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. அவர்கள் பேட்டிங்கைப் பற்றி கூற ஏதுமில்லை. சற்று பொறுமைக்காத்து, நின்று அணியை வெற்றிக்கோட்டிற்கு அழைத்து சென்றனர். இதுவே, பலம் வாய்ந்த அணிக்கும், பலம் இல்லாத அணிக்கும் உள்ள சிலபல விதியாசங்களில் ஒன்றாகும். வாரியர்ஸ் அணியை பொறுத்தவரை, இம்ரான் தாஹிர், தனது கூகுலி பந்துகளின் வாயிலாக, சற்று எதிர்ப்பு தெரிவித்தார் என்றாலும், வாரியர்ஸ் அணியில் உள்ள சுழற்பந்துவீச்சாளர்கள், நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 11பந்துகளை மீதம் வைத்து, தொடர்ச்சியாக 5ம் போட்டியை வென்றது, நைட் ரைடர்ஸ் அணி. தற்போது, அரையிறுதி சுற்றை அடையும், கவலை அவர்களுக்கு இல்லை.    

ஆட்ட நாயகன் விருதை பெற்றது - கேரி பெர்ரி      

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?