உள்ளூர் கிரிக்கெட் செய்திகள்
பொதுவாக, இந்தியாவில், இந்நேரம், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள், துவக்கம் பெற்றிருக்கும். ஆனால், கொரோனா நோயின் காரணத்தினால், கிரிக்கெட்டை துவக்க இயலாமல், திண்டாடுகின்றார்கள். ஐபிஎல் தொடருக்கு திட்டமிட்ட நேரத்தில் பலர் கூறிய கண்டனம் யாதெனில், உள்ளூர் கிரிக்கெட்டை பற்றி சற்றும் அக்கறையில்லாமல், இந்திய கிரிக்கெட் வாரியம் நடந்துகொள்ளுகின்றது. இவையனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்குமாறு, இரண்டு செய்திகளை வெளியிட்டது, இந்திய கிரிக்கெட் வாரியம்.
முதல் செய்தி, என்னவென்றால், மூவற்றில் ஏதேனும் ஒரு தொடர் மற்றும் நடைபெறும் என கூறினர். அல்லது, இவ்வாண்டின் தொடர்களில், ஏதேனும் ஒன்று, போட்டிகளை குறைத்து நடத்துமாறு சூழல் ஏற்படும், என கூறினர். அதுமட்டுமின்றி, சில ஆதாரங்களின் அடிப்படையில், இவ்வாண்டின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களை, அடுத்த ஆண்டிற்கு தள்ளிவைக்கவுள்ளதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது என செய்திகள் வெளிவருகின்றது.
இப்போது உங்கள் மனதில் ஓர் கேள்வி எழும். இப்போதாவது கிரிக்கெட் பயிற்சிகளை தொடங்கி விட்டார்களா ? இவ்வாண்டின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை குறித்த மற்றோர் அறிவிப்பு என்ன ? என்பதே ஆகும். வீரர்கள், தனிப்பட்ட முறையில், பயின்ருக்கொள்ள, ஒரு குழுவாக இனைந்து பயிற்சி சிறிதும் பெறவில்லை.
நிலையான இயக்க நடைமுறையை, இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. ஆத்தாளில், குறிப்பிட்ட ஓர் செய்தி யாதென்றால், " 60 வயதும் அதற்கு மேற்பட்டும் உள்ள பயிற்சியாளர்கள், தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் அணியினை சேர்ந்தோர், சற்று இதில் பங்குபெறாமால் இருத்தல் வேண்டும்".
இச்செய்தியைக்கண்டு பலர் தங்களின் குரல்களை எழுப்பினர். " சென்ற ஆண்டு, பெங்கால் அணியை, ரஞ்சி தொடரின் இறுதிப்போட்டி வரை, பயிற்சி அளித்து, அழைத் சென்றது, 65 வயதுடைய அருண் லால் அவர்கள் ஆகும்". அதே ஆண்டின், வெற்றியாளர்களை வழிநடத்தியது, 69 வயதான கர்சன் காவிரி ஆகும். இவ்வாண்டில், பரோடா கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவராக, பதவியளித்தது, டேவ் வாட்மோர், எனும் 65 வயதான இளைஞன்.
ஆதலால், வயதிற்கும் தொழிலிற்கும் சிறிதும் சம்மந்தம் இல்லை என கூறினாலும், இந்திய கிரிக்கெட் வாரியம் அளித்த ஓர் பதில், " உலக சுகாதார அமைப்பின் கட்டளையை மனதில் வைத்து எடுக்கப்பட்ட முடிவுகளே ஆகும். 60 வயதிற்கும் மேற்பட்டோர், கொரோனா நோயினால், நிச்சயம் பாதிப்பிற்கு உள்ளானோர் ஆவர்", என்றும் அதனோடு கூடுதலாக அளித்த செய்தி, " 60 வயதிற்கு மேற்பட்டோர் மட்டும் அல்லாமல், உடலினை பாதிக்கும் சற்று முக்கிய நோய்களான புற்றுநோய், சக்கரைவியாதி போன்ற நோயிகளை உள்ளோர், பங்குபெறாமல் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனக்கூறினர்".
இவற்றிற்கு இணங்க, மும்பையில் உள்ள நடிகர்களுக்கு, 65வயது மேற்பட்டோர், சினிமா ஷூட்டிங்கில் பங்குபெறாமல் தவிர்த்துக்கொள்ள கேட்டுக்கொண்டது. அதனையடுத்து, இப்போது கிரிக்கெட்டிலும் இவ்வாறு ஓர் செய்தி. 

Comments
Post a Comment