ரத்தாகும் இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள்
கொரோனா எனும் கொடிய நோயின் காரணத்தினால், பல கிரிக்கெட் போட்டிகளை தடைசெய்து வருகின்றனர். குறிப்பாக, இவ்வாண்டின் இறுதியில் நடக்கவிருந்த 20 ஓவர் உலககோப்பையையும், அடுத்த ஆண்டுக்கு பின் தள்ளினர். அந்த வரிசையில், தற்போது மேலும் இரண்டு, இரு தரப்பு கிரிக்கெட் தொடர்களை தள்ளிவைத்துள்ளார்கள்.
முதலில், இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே, இவ்வாண்டு செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடரை, அடுத்த ஆண்டுக்கு பின் தள்ளினர். இந்திய நாட்டில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோயினால் பாதித்துள்ளார்கள். அவ்வாறு உள்ள நிலையில், இந்திய மன்னில் நடக்கவிருந்த மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை, தள்ளிவைப்பதே சற்று புத்திசாலித்தனம். இருப்பினும், இவ்விரு அணிகளுக்கிடையே அறிவிக்கப்பட்ட கிரிக்கெட் தொடரை, வெகு விரைவாக நடத்த முயற்சிப்போம் என இரு அணிகளின் கிரிக்கெட் வாரியங்களும் இனைந்து அறிவித்துள்ளது.

அடுத்து, ஆகஸ்ட் மாதகாலத்தில், ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கவிருந்த 5 போட்டிகளை கொண்டு 20 ஓவர் கிரிக்கெட் தொடரை, ரத்து செய்துள்ளார்கள். அதன்காரணம் , முதலில் ஜிம்பாப்வே நாட்டில் பரவி வரும் கொரோனா நோயின் எண்ணிக்கை. பிறகு, அந்நாட்டிற்கு ICC கிரிக்கெட் வாரியத்துக்கு உள்ள தகராறு. மற்றும் சம்பளமின்றி தவிக்கும் மனநிலை. இவையனைத்தும், இத்தொடருக்கு எமனாக அமைந்தது.
எனவே, கொரோனா எனும் நோயின் பிடியிலிருந்து எவ்வாறு ஆரோக்கியத்துடனும், வேகத்துடனும் மீண்டு வருகின்றோமோ, அப்போது தான் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பும். அதுவரை, சுத்தமும் சுகாதாரமும் மிகவும் அவசியம். உடலினை பார்த்துக்கொள்வது மிகவும் தேவையான நிலை. உயிரை காப்பாற்றுவோம், வீட்டிலிருந்து !!!
Comments
Post a Comment