CPL செய்திகள்

இவ்வாண்டின் கரீபியன் பிரீமியர் லீக் தொடர், இன்னும் 10 நாட்களுள் துவங்கவுள்ள நிலையில், அதனைக்குறித்து பல அறிவிப்புகள் தற்போது வெளிவந்துள்ளது. இவை, ஓர் 20 ஓவர் கிரிக்கெட் தொடரை நடத்துவதில் உள்ள சிரமங்களையும், நெருக்கடிகளையும் வெளிக்காட்டும். முக்கியமாய், வெளிநாட்டை சேர்ந்த வீரர்களுக்கு உள்ள இன்னல்களையும் நன்கு விளக்கும்.

முதலாம் அறிவிப்பு - டிரினிடாட் மற்றும் டொபாகோ தீவு நாட்டிற்கு, பயணம் மேற்கொண்ட 162 வீரர்களுக்கு, கொரோனா பாதிப்பு ஏதுமின்றி, வெற்றிகரமாக சென்றடைந்தனர். இவ்வாண்டின், கரீபியன் பிரீமியர் லீக் தொடர், டிரினிடாட் மற்றும் டொபாகோ தீவு நாட்டில் மட்டுமே, அனைத்து போட்டிகளும் நடைபெறும், என்கிற தகவல் நம்மை வந்தடைந்தது. கொரோனா எனும் நோயின் காரணத்தினால், வேறு இடங்களை பற்றி கருத்தில் கொள்ளவில்லை. இருப்பினும், கொரோனா பரிசோதனை முறைகளில், மிக தீவிரமாய் செயல்பட்டனர். விமானத்தில் ஏற்றம் பெறுதலுக்கு முன், 3 பரிசோதனைகளை மேற்கொண்டு, அவையனைத்திலும் எதிர்மறையான தீர்வுகள் மட்டுமே வரவேண்டும். இதில், 162 வீரர்கள் வெற்றிகரமாய், இவ்வாறு உள்ள பரிசோதனைகளை கடந்து வந்துள்ளனர். ஆனால், 3 வீரர்கள் மற்றும் 3 பயிற்சியாளர்களுக்கு மட்டும் நேர்மறையான தீர்வுகள் வெளிவந்ததால், அவர்களை ஹோல்டில் வைத்துள்ளார்கள். ஆனால், 162/6 என்பது சற்று, இன்பம் அளிக்கும் செய்தியாகவே இருக்கும்.

இரண்டாம் அறிவிப்பு - இத்தொடரில் பங்குபெற பல நாடுகளிலிருந்து வீரர்கள் களமிறங்குவர். அவ்வாறு, உள்ள நிலையில், ஆஃப்கானிஸ்தான் நாட்டினை சேர்ந்த மூன்று இளம் வீரர்களால் இத்தொடரில் பங்குபெற இயலவில்லை. ஆஃப்கானிஸ்தான் நாட்டினை சார்ந்த குவாயிஸ் அஹ்மத், ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் 15 வயது கொண்ட சைனாமேன் பந்துவீச்சாளரான நூர் அஹ்மத், இத்தொடரில் பங்குபெற போவது இல்லை. வெளிவந்த அறிக்கைகளின் அடிப்படையில், இம்மூவருக்கு, CPL நிர்வாகம், செலவு செய்யும், பட்டய விமானங்களில் பயணம் மேற்கொள்ளும், இங்கிலாந்து போக்குவரத்து விமான விசா'வை, தன்குந்த நேரத்திற்குள் கைப்பற்ற இயலாததால், இம்மூவரினால் பங்குபெற முடியவில்லை. இவர்களுடன், ஃபாபியன் ஆலன், எனும் மேற்கு இந்திய தீவுகள் நாட்டை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர், இத்தொடரில், விமானத்தில் ஏற தவறியதால், பங்குபெற மாட்டார்.  

தற்போது, டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் எல்லைகளை முடக்கி வைத்துள்ளார்கள். ஆகையால், ஒரு வார, தலைமைக்கு பின் விளையாட வேண்டும் என்கிற விதிகளில் இவர்களால் இடம் பெற இயலாது. 

இவ்வாண்டின், கரீபியன் பிரீமியர் லீக் ஆகஸ்ட் 18ம் தேதியன்று துவக்கம் பெரும். மொத்தம் 33 போட்டிகள் உள்ளது. இதில், முதல் முறையாக, இந்திய வீரர் ஒருவர் பங்குபெறவுள்ளார். பிரவீன் டாம்பே, எனும் மும்பை நகரை சேர்ந்த, 48 வயது முதிர்ந்த வீரரான இவர், சமீபத்தில், இந்திய நாட்டின் உள்நாட்டு தொடர்களிலிருந்து வெளியேறி, தற்போது த்ரிபாகோ நைட் ரைடர்ஸ் அணியை சார்ந்து பந்துவீசவுள்ளார்.
    

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood