ராவல்பிண்டி Express - ஷோயப் அக்தர்

உங்கள் கண்களை மூடி நீங்கள் கற்பனை செய்துக்கொள்ளுங்கள். நீங்கள் நின்றுக் கொண்டிருக்கின்ரீர்கள். உங்களை நோக்கி, வெகு விரைவாக ஒரு தொடர்வண்டி மோத வருகின்றது. அத்தொடர்வண்டியிலோ, பிரேக் கிடையாது. என்ன செய்வீர் ? ....

அவ்வாறு, ஓர் பந்துவீச்சாளர், சீறிக்கொண்டு பேட்ஸ்மேனை நோக்கி பந்துவீச வருவார். எதிர்கொண்டு விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கோ, உச்சம் தலையிலிருந்து உள்ளங்கால் வரை, அடக்கிக்கொள்ள இயலாத ஒரு நடுக்கம். மிகவும், சினங்கொண்டு வரும் ஒரு பந்துவீச்சாளர். அவர், வேறு யாருமின்றி, ஷோயப் அக்தர், என்றழைக்கப்படும் " ராவல்பிண்டி express ". அவரின் 44வது பிறந்தநாளினை இன்று கொண்டாடுகின்றார். 

 இவருடைய கிரிக்கெட் வாழ்வினை புரட்டிப்பார்த்தால், காயங்களும் சர்ச்சைகளுமாகவே தான் இருந்துள்ளது. இளம் வயதிலிருந்து கிரிக்கெட் விளையாடும் இவர், எதிரணியின் பயத்தையும் கோபத்தையும் பற்றவைத்துள்ளார்.

22 வயது காலத்தில், சர்வதேச பாகிஸ்தான் அணியை அடையும் இவர் மீது பல சர்ச்சைகள் வீசப்பட்டுள்ளது. செயல் திறன் அதிகரிக்கும் மருந்து உபயோகம், தவறுதலாக கூறப்பட்டுள்ள கற்பழிப்பு சர்ச்சை, தனது சொந்த நாட்டு வீரர்களுக்கிடையில் ஏற்படுகின்ற வாக்குவாத சண்டைகள், களத்தில் தான் நடந்துக்கொள்ளும் முறை என பல சர்ச்சைகளும், சகதிகளுமாகவே தான் இருந்துள்ளது.

இருப்பினும், ஒரு பந்துவீச்சாளராய், தான் செய்தது, பின் வரும் காலங்களில் உள்ள அனைத்து வகை, வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் முன்னோடியாக திகழும். கிரிக்கெட் வரலாற்றில், 100 மைல்களுக்கு மேற்பட்ட வேகத்தில் பந்துவீசிய முதல் வீரர் ஆவார். இதை, இவர் இரு முறை செய்துள்ளார். பல முறை, எதிரணியின் வேரினை அறுத்துள்ளார்.

"அதில் டான் டா அவர் specialist' ஏ "

163 ஒரு நாள் போட்டிகளில், 247 விக்கெட்டுகளை குவித்துள்ளார். அந்நேரத்தில், 46 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆனால், தனது உடற்பயிற்சியில், சிறிது கவனம் செலுத்தியிருந்தால், இன்னும் பல காலம் விளையாடியிருப்பார். வாக்குவாதங்கள் ஏதும் இல்லாமல் இருந்திருந்தால், இடையில் தடைபட்ட காலத்தில் மேலும் பல சாதனைகளை படித்திருக்கலாம்.

2011ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின், தான் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது, பயிற்சியாளராக சில அணிகளுக்கு களமிறங்கினாலும், தனது முதற்பணியாக வர்ணனையில் ஈடுபட்டுள்ளார்.

" கொஞ்சம் ஒடுங்கிருச்சு, ஆனா தங்கம் தான் சார் "    

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood