IPL 2020 - அணிகளை பற்றிய தகவல்கள்
இவ்வாண்டின் IPL தொடரின், டைட்டில் ஸ்பான்சராக, Dream 11 நிறுவனத்தை தேர்வு செய்துள்ளார்கள், என்கிற செய்தி நாம் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக, தற்போது டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது. அவற்றுள், சில தகவல் பரவலாக பேசப்படுவனவாய் இருப்பினும், மீதம் உள்ள தகவல்கள், ஆதாரப்பூர்வமாக வெளிவந்ததே ஆகும்.
பரவலாக பேசப்படும் தகவல் யாதெனில், ஜெயதேவ் உனட்கட் அவர்கள், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, இடைக்கால தலைவனாக வழிநடத்தவுள்ளார், என்பது ஆகும். இவற்றைப்பற்றி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தரப்பிலிருந்து, எவ்வித அறிவிப்பும் வரவில்லை என்றாலும், 90% சதவீதம், இத்தகவல் சாத்தியமாக வாய்ப்புகள் உள்ளது. காரணம், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த வீரர்கள் யாவரும், முதல் கட்ட IPL போட்டிகளில், பங்கேற்க மாட்டார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலோ, அவ்விரு நாட்டவர் மட்டுமே நிரம்பியுள்ளார்கள். அவர்கள் வெளியேற்றினால், மீதம் உள்ளது, இந்திய அணியை சேர்ந்த உள்நாட்டு இளம் வீரர்கள் மட்டுமே. அவற்றுள் தலையாய இந்திய வீரர் என்று பார்த்தால், அதில் உனட்கட் ஒருவர் மட்டுமே. இதனோடு இனைந்து, உனட்கட்டின் தலைமையில், இவ்வாண்டின் ரஞ்சி கோப்பையை கைப்பற்றியது, சவுராஷ்டிரா அணி. ஆதலால், பரவலாய் பேசப்படுவதாக இருப்பினும், இச்செய்தி சாத்தியமே.
ஆதாரப்பூர்வமாக வெளிவந்த தகவல் யாதெனில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி, கிறிஸ் வோக்ஸ்'கு மாற்றாக அன்றிச் நோர்ட்ஜெ'வை களமிறக்கியுள்ளார்கள். இவ்வாண்டின் ஐபிஎல் ஏலத்தில், கிறிஸ் வோக்'ஸை 1.5 கோடி ருபாய் கொடுத்து வாங்கியது, டெல்லி அணி. ஆனால், கொரோனா நோயின் காரணத்தினாலும், மற்றும் இதற்குமுன் நடக்கவிருந்த இவ்வாண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை'காக, தானாகவே வெளியேறினார். ஆதலால், இவருக்கு மாறாக யாரை நியமித்துள்ளார்கள் என டெல்லி அணியின் ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில், கேள்விகளை வெளியிட, டெல்லி அணியின் ட்விட்டர் பக்கத்தில், அன்றிச் நோர்ட்ஜெ அவர்களை, மாறாக நியமித்துள்ளோம் என்று, அறிவிப்பை வெளியிட்டனர்.
வரும் நாட்களில், ஐபிஎல் பற்றிய தகவல்களும் மற்றும் ஐபிஎல் அட்டவணை குறித்த அறிவிப்புகளும் வெளிவரும் என பார்க்கப்படுகின்றது.
Comments
Post a Comment