IPL Schedule குறித்த அறிவிப்பு
சென்ற தொடர்களில், IPL துவக்கம் பெறுவதற்கு ஒன்றல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே, அதன் அட்டவணையை வெளியிடுவர். ஆனால், இவ்வாண்டில், 2 வாரங்கள் மட்டுமே மீதம் உள்ள நிலையில், அதன் அட்டவணையை வெளியிடாமல், காலத்தை கடத்துகின்றனர். இதற்கு, பல வித காரணங்கள் வெளிவந்தது. ஒரு புறம் கிடைத்த செய்தி யாதெனில், சென்னை அணியை சேர்ந்த நபர்களுக்கு கொரோனா நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதால், சென்னை அணியின் போட்டிகளை மட்டும் சற்று தள்ளிவைக்க எண்ணி, அதன் காரணத்தினால் அட்டவணை வெளியிடப்படவில்லை எனவிருந்தாலும், மறுபுறம் கூறப்பட்ட செய்தி ஏதெனில், ஐக்கிய அரபு நாடுகளில், இவ்வாண்டின் IPL தொடரை தொகுத்து வழங்குவதற்கு, மூன்று மைதானங்களை தேர்வு செய்துள்ளார்கள். துபாய், அபு தாபி மற்றும் ஷார்ஜா'வில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இதில், தற்போது, அபு தாபி நகரில், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கைஅதிகரித்ததால் , அங்கு போட்டிகளை குறைத்துக்கொள்ளலாம் என எண்ணி, அதற்கென அட்டவணை தயார் படுத்த காலம் கடந்தது, எனவும் வெளிவந்தது. இவையனைத்திற்கும், முற்றுப்புள்ளி வைக்குமாறு, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான, திரு. சௌரவ் கங்குலி அவர்கள், ABP செய்தி நிறுவனத்திடம் ஓர் பேட்டியளிக்கின்றார். அந்த பேட்டியில் சௌரவ் கங்குலி தெரிவித்தது, "இவ்வாண்டின் IPL தொடர் அட்டவணை ( Schedule ), செப்டம்பர் 4ம் தேதி (நாளை), அன்று வெளியிடப்படும்" எனவாகும். ஆதலால், இத்தனை நாட்கள் நாம் காத்துக்கொண்டோம், மேலும் ஒரு நாள் மட்டும் காத்துக்கொண்டால் போதும். அனைத்தும் கைகூடும்.
மேலும் கிடைத்த ஓர் தகவல் யாதெனில், மும்பை அணியை சேர்ந்த இலங்கை வீரரான, திரு. லசித் மலிங்கா அவர்கள், இவ்வாண்டின் IPL தொடரில் பங்குபெறமாட்டார். முன்னதாக அவர், இவ்வாண்டின் IPL தொடரிலுள்ள முதற்கட்ட போட்டிகளில் பங்குபெறமாட்டார் என்றே செய்திகள் வெளிவர தற்போது, இவ்வாண்டின் IPL தொடரிலிருந்து, முழுவற்றுமாக விலகிக்கொள்கிறார் என செய்திகள் வெளிவந்தது. இதற்கு மும்பை அணி தரப்பிலிருந்து வெளிவந்த காரணம், தனிப்பட்ட பிரச்சனைகளால், இவர் விலகிக்கொள்கிறார் எனவே செய்தி வந்தது. அவருக்கு மாற்றாக, ஆஸ்திரேலியா சர்வதேச கிரிக்கெட் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் பேட்டின்சன் அவர்களை, நியமித்துள்ளார்கள்.

இத்தொடர், துவந்குவதற்கு முன்பாகவே பல வீரர்கள் விலகிக்கொள்கின்றார்கள். இதனை சற்று சிந்தித்தால், கொரோனா நோயின் அபாயத்திலிருந்து தப்பிக்கொள்ள முயற்சி செய்கின்றது போல் எனக்கு எண்ணம் ஏற்படுகின்றது. ஆனால், இவற்றை விட்டுவிட வேண்டும். காரணம், 2 வார காலங்களில், IPL தொடர் துவக்கம் பெரும். நாளை, அட்டவணை வெளியிடப்படும். எனவே, "பொறுத்தார் பூமி ஆழவார்".
"காணா கணுக்கா ஒரு ஆட்டம் இருக்கு,
மேனா மினுக்கா, ஒரு மேளம் இருக்கு"
Comments
Post a Comment