RCB vs KKR | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து, பெங்களூக்கும் கொல்கத்தாவுக்கு இடையே match நடந்துச்சு. இந்த match'உம் one sided result'ஓட முடிஞ்சிது. Toss ஜெயிக்கிற பெங்களூரு அணி, முதல்ல batting choose பன்றாங்க. Sharjahல என்னதான் highest IPL run chase'அ நிகழ்த்தினாலும், போன matchல 180 அடிச்சு, டெல்லி ஜெயிச்சாங்க. So, wicket slow ஆகுதுங்கிற விஷயத்தை, Virat Kohli சரியா புரிஞ்சிக்கிட்டாரு. முதல்ல batting பண்ணும்போது, openersஉம் நல்லா start பன்றாங்க. ஆனா, உண்மையான hero, AB De Villiers தான். Ground மொத்தத்தையும் சுத்தி காமிச்சாரு. அது காரணமா, 193னு ஒரு பெரிய score reach பன்றாங்க. திரும்ப, KKR chasingல நல்ல start கொடுத்தாலும், போகப்போக wickets நெறைய விட்டுட்டு இருந்தாங்க. இதுக்கு நடுல spinners வேற கொடச்சல் கொடுத்தது காரணமா, 112/9னு முடிச்சிட்டாங்க.
இந்த match'ஓட Post Match Analysis videoவ, என்னோட YouTube channelல post பண்ணியிருக்கேன். அதோட link - https://www.youtube.com/watch?v=431Kg-VAwZY
இருந்தாலும், solidஆன KKR teamம பொட்டலம் பண்ணிருக்காங்கன்னா, நிச்சயமா ஏதாவது தவறு KKR sideல நடந்திருக்கும். அந்த தவறு, இந்த match'ஓட turning point'அ இருக்கும். அது என்னன்னு, இந்த திருப்புமுனை Segmentல நாம பார்க்கலாம்.
இந்த matchச பொறுத்த வரைக்கும், RCBயோட spinners தான் உண்மையான காரணம். KKRர பொறுத்த வரைக்கும், ஒரு spinner மற்றும் 7 pacersஓட உள்ள எறங்குறாங்க. அவங்க பண்ண முதல் தப்பு, முக்கிய தப்பும் இது தான். அதே நேரத்துல, Kohli extra bowler வெச்சு எறங்குனாரு. ஆனா spinners'ஓட powerplay oversஸ cut பண்ணாம, முழுசா use பண்ணாரு. இந்த ஒரு idea, மொத்தமா மாத்திருச்சு. ஒரு வேல, KKR இன்னோரு spinnerரோட இறங்கியிருந்தா ? கூடவே extra bowling option கொண்டு வந்திருந்தா, problem வந்திருக்காது.
Comments
Post a Comment