SRH vs CSK | IPL 2020 | திருப்புமுனை Segment

நேத்து, ஹைதராபாத்துக்கும் சென்னைக்கும் இடையில match நடந்துச்சு. ஒரு பக்கம், ரொம்பவே அடிபட்டு வர்றாங்க CSK. இன்னொரு பக்கம், எங்க ஜெயிப்பாங்க எங்க தோப்பாங்கன்னு predict'டே பண்ண முடியாத மாதிரி ஒரு performance கொடுத்திருக்காங்க SRH. Toss ஜெய்க்குற CSK அணி முதல்ல batting choose பன்றாங்க. எல்லாருமே ஓரளவுக்கு நல்ல contribute பன்றாங்க, but still ஜடேஜா'வோட death over finish, 167/6னு ஒரு decent scoreகு அழைச்சிட்டு போகுது. சந்தீப் ஷர்மா அசத்தலா bowl பண்ணாரு. திரும்ப, SRH battingகு வர்றாங்க. Openingலேயே சரிவு. அதுக்கு ஏத்த மாதிரி top orderரும் fail ஆகுது. ஆனா, Kane Williamson தனியா நின்னு பயம் காமிச்சிட்டு இருந்தாரு.  வரைக்கும் என்னவேனும்னாலும் நடக்கலாம்'ன்னு ஒரு நெலமை. But, கடைசில அவரையும், Rashid Khanனையும் dismiss பண்ணி ஜெய்க்குறாங்க CSK. 

இந்த match'ஓட Post Match Analysis videoவ, என்னோட Youtube channelல post பண்ணியிருக்கேன். அதோட link - https://www.youtube.com/watch?v=iVWp2buEm1k  

இருந்தாலும், SRH மாதிரி ஒரு unpredictable sideட, 20 runsல formout'ல இருக்குற CSK defeat பண்றங்கன்னா, நிச்சயமா ஏதாவது turning point நடந்திருக்கும். அந்த turning point என்னன்னு, இந்த திருப்புமுனை segmentல நாம பார்க்க போறோம்.

எல்லாரும், Jadejaவோட all round performance தான் turning pointன்னு சொல்லுவாங்க. சில பேர், Kane Williamsonனோட dismissal தான் turning pointன்னு சொல்லுவாங்க. இது எல்லாம் சொன்னாலும், உண்மையான turning point இது கெடயாது. காரணம், Kane Williamson போனதுக்கு அப்புறமும், SRH பயம் காமிச்சிட்டு இருந்தாங்க. என்னை பொறுத்த வரைக்கும் உண்மையான turning point, Shardul Thakurரோட penultimate over, அதாவது 19th over தான். 27 off 12 ballsன்னு நெலமை இருக்கும்போது, continuousஅ wide yorkers போட்டு, Rashid Khanன அடிக்கவே விடல. இதுல தான் frustrate ஆகி, ரொம்ப deepபா நின்னு clear பண்ண போயி hit wicket ஆனாரு. அந்த ஒரு crucial spell, இந்த matchஓட turning pointஅ அமைஞ்சிருக்கு. 

  

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt