SRH vs MI | KXIP vs CSK | IPL 2020 | திருப்புமுனை Segment

நேத்து, ரெண்டு different'ஆன matches நடந்துச்சு. இந்த, ரெண்டு matches கிட்ட இருந்து இருக்குற ஒரே ஒத்துமை, ஒரு pointல யாரு ஜெயிக்க போறாங்கன்னு நம்மளால predict பண்ண முடிஞ்சுது. மத்தபடி வேற எதுவும் கெடயாது. ஆனா, இப்படி ஒரு situationல நம்மளால predict பண்ண முடியுதுன்னா, நிச்சயமா எங்கயாவது ஒரு எடத்துல, அந்தந்த matchஓட winner'அ decide பண்ணுற மாதிரி, ஏதாவது ஒரு சம்பவம் ஆவது நடந்திருக்கும். அந்த சம்பவம் என்னனு இந்த திருப்புமுனை segmentல நாம பார்க்கப்போறோம்.

முதல்ல, SRH vs MI match நடந்துச்சு. இந்த match'அ பொறுத்த வரைக்கும், இந்திய நேரப்படி மத்தியானம் 3.30 மணிக்கு, இந்த match ஆரம்பிக்குது. Sharjahஉள்ள நடக்குற இந்த matchல, MI toss ஜெயிச்சு surprisingகா batting choose பன்றாங்க. இந்த சின்ன stadiumல, De Cock குடுத்த start காரணத்துனாலயும், கடைசில Krunal, Pollard குடுத்த finishனாலயும், 208/5னு ஒரு scoreஅ reach பண்ணுது. என்னதான் பெரிய scoreஅ இருந்தாலும், Sharjahவ பொறுத்த வரைக்கும், ரொம்பவே கம்மியான score. SRH உள்ள வராங்க. Warner ரொம்ப அருமையா batting பன்றாரு. ஆனா, அவரைத்தாண்டி வேற யாரும் அடிக்காததுனாலயும், bowlers bowl பண்ண நல்ல spells காரணத்துனாலயும், 36 runsல மும்பை ஜெய்க்குது. 

இந்த matchஓட Post Match Analysis video என்னோட YouTube channelல release பண்ணிருக்கேன். அதோட link - https://www.youtube.com/watch?v=W20bqDcYl7U. மறக்காம click பண்ணி பாருங்க மக்களே !!

இருந்தாலும், எங்க SRH matchஅ விட்டாங்க ?. அந்த turning point எங்க நடந்துச்சு ?. இப்டி பல கேள்வி நம்ம மனசுக்குள்ள இருக்கு. அதுக்கு உண்மையான answer, David Warnerஓட wicket தான். ஹைதராபாத் பொறுத்த வரைக்கும், பின்னாடி அடிச்சு ஆடுறதுக்கு hitters பெருசா கெடயாது. ஆனா, David Warner, ஒரு பக்கம் தனியாளா இழுத்துட்டு போறாரு. அவரோட wicketல match ஊசலாடிட்டு இருந்தச்சு. அவரோட wicketஅ, அழகா plan பண்ணி dismiss பண்ணினதுக்கு அப்ரோம் தான் comfortable positionகு வந்தாங்க. 

இதுக்கு அடுத்து, சென்னையும் பஞ்சாபும் மோதுச்சு. Toss ஜெயிக்கிற Punjab, முதல்ல batting choose பன்றாங்க. KL Rahulஓட neat ஆன game காரணமா, 178 அடிக்கிறாங்க. ஆனா, திரும்ப ஒரு விக்கெட் கூட விடாம, 2 overs மிச்சம் வெச்சு ஜெய்க்குறாங்க சென்னை.  Watson மற்றும் Faf ஆடுன ஆட்டம், வெறித்தனமா இருந்துச்சு. தரமான சம்பவமா அமைஞ்சுது. 

இந்த matchஓட Post Match Analysis video link - https://www.youtube.com/watch?v=SUCcdzFFpEE. Click பண்ணி பாருங்க. அப்டியே, subscribe பண்ணுங்க. முடிஞ்சா நாலு பேருக்கு share பண்ணுங்க. 

இந்த matchஓட turning point பல பேர், Watto and Fafஓட ஆட்டத்தை தான் சொல்லுவாங்க. ஆனா, உண்மையான turning point, தாகூர் தான். ஒரு பக்கம், Rahul and Pooran சேர்ந்து, பயம் காமிச்சிட்டு இருக்கும்போது, இவர் over போடுறாரு. 17வது ஓவர். அப்போ nuckle ball காரணமா, Pooranனோட wicket எடுக்குறாரு. அதுக்கு அடுத்த ballல, ஒரு பக்காவான yorker வீசி, தோனியோட அருமையான catchல KL Rahulஓட wicketடையும் dismiss பண்ணுறாரு. இவங்கள அப்டியே விட்டுருந்தா, 200+ score அடிச்சிருப்பாங்க. ஆனா, back to back deliveriesல dismiss பன்னதுனால, 178கு restrict பண்ண முடிஞ்சுது. அது காரணமா, இவர் தான் என்னோட turning point !!. 


  

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood