SRH vs RR | MI vs DC | Turning Point of the Match | திருப்புமுனை Segment
நேத்து, ரெண்டு match நடந்துச்சு. இந்த, ரெண்டு matchசுமே நேர் எதிரான results'ஓட வெளிவந்திருக்கு. ஒரு பக்கம், இவன் தான் ஜெயிப்பான்னு, நாம முடிவு பண்ணோம்னா திடீர்னு, அவன் ஜெயிக்க மாட்டான், நாங்க தான் ஜெயிக்க போரோம்ன்னு ஆட்டத்தோட கதையவே மாத்தி எழுதுறாங்க. இப்படி ஒரு match முடியுதுன்னா, இன்னொரு பக்கம் thrillerல முடியும்ன்னு எதிர்பார்க்கும்போது, அந்த match, அந்த game, one sidedடா முடியுது. இந்த ரெண்டு matchesலயும் நிச்சயமா ஒரு turning point இருந்திருக்கும். அந்த turning point என்னன்னு, இந்த திருப்புமுனை segmentல நாம பார்க்கலாம்.
முதல்ல, ஹைதராபாதும் ராஜஸ்தானும், துபாய்'ல விளையாடுறாங்க. ஹைதராபாத் toss ஜெயிச்சு batting எடுக்குறாங்க. ஏற்கனவே, Sharjah விட்டு வெளில வந்தா ராஜஸ்தானுக்கு நடுங்க ஆரம்பிச்சிடும்ன்னு எல்லாரும் நெனச்சிட்டு இருக்காங்க. ஆனா நடந்தது வேற. ஹைதராபாத் side'ல இருந்து David Warner மற்றும் Manish Pandey, ரொம்பவே பொறுப்போட விளையாடுறாங்க. அவங்களுக்கு அடுத்து, Kane Williamson, ஒரு decent finish கொடுக்குறாரு. அது காரணமா, 158/4னு ஒரு scoreர reach பன்றாங்க. திரும்ப, chase பண்ண வரும்போது, right from the start, quick'அ 3 wickets விடுறாங்க. அங்க இருந்து, சொல்லிக்குற அளவுக்கு பெரிய batsmenனும் கெடயாது. எப்படியிருந்தாலும், Rajasthan தோக்கப்போறாங்க, Hyderabadகு தான் gameனு எல்லாரும் நெனச்சிட்டு இருக்காங்க. ஆனா, திடீர்னு Tewatia and Riyan Parag, திருப்பி அடிக்கிறாங்க. இந்த counter attacking instinct, SRH bowlersஅ தடுமாற வெக்குது. அங்க தடுமாற்றம் அடைஞ்சதுனால, Rajasthanனோட planning work ஆச்சு. இது காரணமா, easyயா ஜெயிச்சிட்டாங்க.
இந்த match'ஓட Post Match Analysis videoவ, என்னோட YouTube channelல post பண்ணியிருக்கேன். அதோட link - https://www.youtube.com/watch?v=BQZLFdZpGAw
இந்த match'ஓட turning point, வேற எங்கயும் இல்ல, David Warner தான். இங்க Rashid Khan, நல்ல bowl பண்ணிட்டு இருந்தாரு. அவரை, நீங்க middle oversலேயே முடிச்சிருக்கலாம். ஆனா, அதை செய்யாம deathல ஒரு ஓவர் கொடுத்தது, Tewatiaங்கிற ஒரு left handerகு சாதகமா முடிஞ்சிடுச்சு. Deathல slog பண்ண பார்த்துட்டு இருக்கும்போது, ஒரு spinnerர இறக்குறது, கொஞ்சம் தப்பான move. அது தான், இங்க நடந்துச்சு !.
இதுக்கு அடுத்து, மும்பைக்கும் டெல்லிக்கு match நடக்குது. Table Toppers'அ இருக்குற இவங்க ரெண்டு பெரும் மோதுன நிச்சயமா thrillerரா அமையுன்னு எதிர்பார்க்கும்போது, எல்லாரையும் முட்டாளாக்கி one sidedடா முடிஞ்சிருக்கு. இங்க, டெல்லி முதல்ல batting பண்ணி, just 162/4 தான் அடிக்கிறாங்க. Abu Dhabiல winning scoreரா இருந்தாலும், நெனச்சத விட 10-15 runs short. தவான் ஒரு அரை சதம் அடிக்குறாரு. திரும்ப மும்பை battingகு வரும்போது, அங்க De Cock மற்றும் Suryakumar Yadav சேர்ந்து சிறப்பா ஆடுனாங்க. இவங்களோட game, Dhawan'ன விட சிறப்பா இருக்குது. Easyயா matchஅ ஜெயிச்சுட்டு போயிட்டு இருக்காங்க.
இந்த match'ஓட Post Match Analysis video, என்னோட YouTube channelல post பண்ணியிருக்கேன். அதோட link - https://www.youtube.com/watch?v=wq6HyBI3wog
இந்த match'ஓட turning point, நெறய பேர் Dhawanனோட innings'அ தான் சொல்லுவாங்க. அவங்க point of viewவும் தப்பு கெடயாது. ஆனா, என்னை பொறுத்த வரைக்கும், இங்க உண்மையான turning point, MI battingல பண்ண strategy தான். Usualலா Delhiயோட spinners தான் oppositionனுக்கு middle oversல tight lineல bowl பண்ணி, pressure ஏத்துவாங்க. அதுக்கு அப்புறம் தான், pacers உள்ள இறங்கி wicket எடுப்பாங்க. இங்க மும்பை இந்தியன்ஸ் பண்ண காரியம் என்னன்னா, spinners'அ நாம அடிக்க ஆரம்பிப்போம். இப்படி இவங்கள target பண்ணி அடிச்சிட்டோம்ன்னா, almost pacersகிட்ட இருந்து loose deliveries வரும். அத target பண்ணி விளையாடிட்டா, நம்ம வேலை பாதி success. இதை, சரியா செஞ்சாங்க Suryakumar Yadav and De Cock.
Comments
Post a Comment