IPL 2021ல் புதிய அணியா ?
என்ன நடக்குது இங்க ? 3 நாட்களுக்கு முன்பு தான், இவ்வாண்டின் IPL தொடர் நிறைவு பெற்றது. அதற்குள்ளேயே, அடுத்த ஆண்டின் IPL தொடர் குறித்த செய்திகள் வெளிவருகிறதே என பல கேள்விகள் உங்கள் மனதினுள் ஏற்பட்டிருக்கலாம். அதற்கு பதிலளிக்கும் பொருட்டு, நான் கூறும் விடை, 2021ம் ஆண்டின் IPL தொடர், மார்ச் மாதத்தில் துவக்கம் பெறவிருக்கிறது. தற்போது, நவம்பர் மாதம். ஆதலால், இப்போதிலிருந்தே பல வகையான செய்திகள் வெளியிடப்படும்.
அவற்றுள் முதன்மை, அடுத்த ஆண்டில் நடக்கவிருக்கும் வீரர்களுக்கான ஏலம். அனைத்து ஆண்டுகளும், வீரர்களை விலைகொடுத்து அவரவர் அணியினுள் தேர்வு செய்ய, IPL ஏலம் நடைபெறும். ஆனால், 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு இடையே, Mega எலாம் நடைபெறும். Mega ஏலம் என்றால், பொதுவாக நடைபெறும் IPL ஏலங்களில், ஒவ்வொரு அணியிலும் எத்தனை வீரர்கள் வேண்டுமானாலும் தக்கவைத்துக்கொள்ளலாம். ஆனால், Mega ஏலம் நடைபெறும் தருணத்தில், IPL நிர்வாகம் குறிப்பிடும் எண்ணிக்கையுள்ள வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும். மீதம் உள்ளோர் ஏலத்தில் களமிறங்குவர். இதில், குறுகிய இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், மிகவும் குறுகிய Uncapped ( இந்திய அணியிற்கு விளையாடாத வீரர்கள் ) மற்றும் அதனை விட குறுகிய அளவில் வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும். மீதமுள்ள அனைத்து வீரர்கள், வெளியேற்றி ஏலத்தில் இறங்குவர்.
இவ்வாறு உள்ள Mega ஏலம் நடைபெறும் என்கிற செய்தி வெளிவந்துள்ளது. தற்போது, Mega ஏலத்திற்கு அவசியம் யாது என கேள்வியை எழுப்பினால் அதற்கு முதல் பதில், ஏற்கனவே 3 ஆண்டுகள் ஆயிற்று. இன்னொரு பதில், இவ்வாண்டின் IPL தொடரில் பங்குபெற்ற பல அணிகள், Mega ஏலம் நடைபெற வேண்டி கோரிக்கை அனுப்பியுள்ளார்கள். அதனோடு, IPL நிர்வாகத்திற்கும், இவ்வாண்டின் IPL தொடரிலிருந்து, பண நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கும் இதற்கும் சம்மந்தம் என்ன உள்ளது என வினவினால், ஏலத்தின் போது, பணம் நிறைய புழங்கும். Mega ஏலத்தின்போது, புழங்கும் பணத்தின் அளவு கணக்கிடாது. BCCIகும் IPL நிர்வாகத்திற்கும், ஓர் குறிப்பிட்ட தொகையை வாரியாக செலுத்த வேண்டும். இதனை எல்லா அணிகளும் செய்வர்.
சரி, அதற்கு ஏன் புதிய அணி ?. எல்லாம் அணிகளும், ஏலத்திற்கு முன்பு ஓர் குறிப்பிட்ட தொகையை வெறியாக செலுத்த வேண்டும். கூடுதலாக, ஒவ்வொரு ஆண்டும், அவரவர் அணியின் ஒப்பந்தத்தை புதுப்பிக்க ஓர் தொகையை செலுத்த வேண்டும். தற்போது 8 அணிகளின் தொகையோடு, கூடுதலாக 9வது அணியை இணைத்தால், எவ்வளவு பணம் புழங்கும் என சிந்தித்துப்பாருங்கள். அத்தொகை கிடைத்தால் மட்டுமே, வீரர்களுக்கு சம்பளம் வழங்கவோ அல்லது நாட்டில் உள்ள மூளை முடுக்குகளில் கிரிக்கெட்டை வளர்க்கவும் உதவியாய் அமையும்.
இதனோடு, தற்போது வெறும் 56 போட்டிகள், வெகு விரைவில் தொடர் நிறைவு பெறுகின்றது என பல வித விவாதங்கள் வெளிவர, 9வது அணியை நியமித்தால், போட்டிகளின் எண்ணிக்கையும் அதிகமாகும். கூடவே, களமிறங்கவிருக்கும் 9வது அணியை கட்டமைக்க, போதுமான வீரர்களும், ஏதுவான வீரர்களும் தேவையாய் இருக்கும். அதை, பொதுவாக நடைபெறும் ஏலத்திலிருந்து பெற்றுக்கொள்ள இயலாது. ஆதலால், mega ஏலம் நடைபெற முயற்சிக்கின்றனர்.
ஒன்பதாவது அணியாக எது களமிறங்கும் ? முதலில், அடுத்த ஆண்டின் IPL தொடரை பொறுத்த வரை, அணியின் எண்ணிக்கை 9'அ அல்லது 10'அ என குழப்பங்கள் நிலவுகிறது. ஆனால், தற்போது கிடைத்த செய்தியின் அடிப்படையில், நிச்சயம் mega ஏலம் நடைபெறும். ஓர் அணியை கூட்டவும் இயலும். அது மட்டுமில்லாமல், குஜராத்தை சார்ந்த ஓர் அணி நிச்சயம் களமிறங்கும். காரணம், அகமதாபாத் நகரில் தற்போது, உலகின் மிகவும் பெரிய கிரிக்கெட் மைதானத்தை, கட்டியுள்ளார்கள். அதில், போட்டிகளை நடைபெற முயற்சித்தால், IPLலின் தரமும், crazeம் கூடும். அதற்கு போட்டியிடவுள்ள நிறுவனங்களை, தீபாவளி பண்டிகை முடிவடைந்த அடுத்த வாரம், தேர்வு செய்வர். அவர்களுள் ஓர் எலாம் நடைபெறும், அதில் வெற்றிபெறுவோருக்கு அணியை நியமிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இறுதியாக ஓர் கேள்வி, ஒரு வேலை 10 அணிகளை நியமித்தால், தொடர் எவ்வாறு அமையும் ? 10 அணிகளை நியமித்தால், 90க்கும் மேற்பட்ட போட்டிகளை நடத்த வேண்டும். அவ்வாறு போட்டிகளை நடத்தினால், 3 மாதங்கள் முழுவதும் தேவைப்படும். பல போட்டிகளின் பார்வையாளர் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. இல்லையெனில், 2011ம் ஆண்டின் formatடை ஓர் அசலாக வைத்து உருவாக்கலாம். ஆனால், இக்காலத்தில் அது சாத்தியமா என்பதே கேள்வி. இல்லை, நாங்கள் double header போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, 2 மாத காலத்திற்குள் சாத்தியமாக்குவோம் என்றால், அதற்கு அட்டவணையை தயாரிக்கும் பணியோ, பெரும் தலைவலியை ஏற்படுத்தும். ஆனால், ஓர் நற்காரியம் யாதெனில், பல இளம் வீரர்கள் கண்டெடுக்கப் படுவார்கள்.
Comments
Post a Comment