MI vs DC | SRH vs RCB | IPL 2020 | திருப்புமுனை Segment

நேத்து, ரெண்டு matches நடந்துச்சு. ரெண்டுலயுமே, chase பண்ண teams தான் ஜெய்க்குறாங்க. கூடவே, first batting பண்ண teamsலாம், ரொம்பவே மோசமான score தான் அடிக்கிறாங்க. Bowlers ஜெயிக்குற மாதிரி தான் அமைஞ்சிருந்தது. இதுல, ஒரே வித்தியாசம் ஒரு பக்கம், table topல இருக்குற team, முதல் ரெண்டு இடத்தை புடிக்குறாங்க. அதே இன்னொரு எடத்துல, ரெண்டு வாரமா topல இருந்தும் தோத்துகிட்டே தான் இருக்காங்க. இந்த ரெண்டு gamesல நடந்த, turning points தான், இந்த திருப்புமுனை segmentல நாம பார்க்க போறோம்.

முதல்ல, மும்பைக்கும் டெல்லிக்கும் இடையில match நடக்குது. இந்த matchல toss ஜெயிக்கிற மும்பை அணி முதல்ல bowling choose பன்றாங்க. Planning மட்டும் பண்ணா பத்தாது, executionனும் வேணும்'னு சொல்லி சொல்லி அடிச்சாங்க, MI. எங்கேயுமே டெல்லியால comeback கொடுக்க முடில. அது காரணமா வெறும் 110 தான் அடிக்குறாங்க. அதை திரும்ப மும்பை ஈஸியா chase பண்ணிட்டு போறாங்க. 

இந்த match'ஓட Post Match Analysis videoவ நான் என்னோட Cric Muhan YouTube channelல post பண்ணியிருக்கேன். மறக்காம click செய்யவும் !

இந்த match'ஓட turning point, Boult'ஓட bowling மற்றும் DC'கிட்ட இருந்த அவசரம். அதிரடி cricketகும், அவசர cricketகும் இருக்குற வித்தியாசம் என்னனு புரிஞ்சிக்கனும்னா இந்த match'அ நாம பாக்கணும். கூடவே, Boult'ஓட Opening spell, சொல்ல வார்த்தையே இல்ல. மீண்டும், மீண்டும் என்கிட்டே வெச்சுக்காதீங்கன்னு சொல்லிகிட்டே இருக்காரு. Opening Spellல என்னை தாண்டி அடி டான்னு, சவால் விட்டு செய்யுறாரு !

இதுக்கு அடுத்து பெங்களூருக்கும் ஹைதராபாத்துக்கும் இடைல match நடக்குது. Toss ஜெய்க்குற ஹைதராபாத் அணி, முதல்ல bowling choose பன்றாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு plan. அதுல இருந்து ஒருதராலும் தப்பிக்க முடில. கூடவே, Sharjah wicketடோட assist, செமயா வேலை செஞ்சுது. RCB வெறும் 120 தான் அடிக்கிறாங்க. அத defend பண்ணுறதுக்கு போராடினாலும், scoreboardல score இல்லாத காரணத்துனால தோக்குறாங்க.

இந்த match'ஓட Post Match Analysis videoவையும் என்னோட Cric Muhan YouTube channelல post பண்ணியிருக்கேன். பார்க்க மறந்துடாதீங்க !

இந்த match'அ பொறுத்த வரைக்கும், SRH'ஓட bowlersகு தான் நாம credits குடுக்கணும். Sandeep Sharmaவோட swing bowling, கூடவே Devdutt Padikkalகு set பண்ண trap, outside off stumpல ரெண்டு outswingers, மூணாவது ballல swing இல்லாம வீசப்பட்ட straight delivery, பக்கா planning. அது இல்லாம, Virat Kohliயோட dismissal. ரொம்பவே crucialலா அமைஞ்சுது. !!


 

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood