கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் முஹம்மத் அமீர் !!

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த, 28 வயது, இடது கை வேகப்பந்து வீச்சாளரான முஹம்மத் அமீர் அவர்கள், அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். இவரின் அறிவிப்பானது, பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதற்கு காரணம், வளர்ந்து வரும் வீரரான இவரோ, பல இன்னல்களை சந்தித்து களமிறங்கி வலம் வந்துள்ளார். சர்ச்சைகளில் இவரின் பெயரானது அடிபட்டுள்ளது. 

முஹம்மத் அமீர், 17 வயதில், 2009ம் ஆண்டில், முதல் முறையாக பாகிஸ்தான் அணிக்காக பந்துவீச, சர்வதேச கிரிக்கெட்டில் கால் தடம் பதிக்கிறார். 2009ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பையை வெற்றிபெற்ற பாகிஸ்தானின் அணியில், இவரும் ஒருவராக இருந்தார். ஆனால், 2010ம் ஆண்டில், இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் ஒன்றில் பாகிஸ்தான் அணி பங்குபெறுகிறது. அதில், ஒரு குறிப்பிட்ட போட்டியில் இவரோ No-ball பந்தை வீச, அந்த No - ball delivery எதேர்ச்சியாக வெளிவந்ததல்ல. 

பல சந்தேகங்கள் எழும்ப, விசாரணைகள் நடத்தப்பட்டது. விசாரணைகளின் முடிவில் வெளியானது, இவரும் இவருக்கு துணையாக நின்ற, அப்போது இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டனான Salman Butt மற்றும் முஹம்மத் ஆசிஃப் ஆகிய மூவர், Spot Fixingல் ஈடுபட்டுள்ளனர் என செய்திகள் வெளிவந்தது. அதன் காரணத்தினால், இவர்கள் மூவருக்கு தடை விதிக்கப்பட்டது.

தடை காலத்திற்கு பின் மீண்டும் பாகிஸ்தானின் சர்வதேச அணியில் களமிறங்கினார் முஹம்மத் அமீர். 2017ம் ஆண்டில் Champions Trophy கோப்பையை வென்ற பாகிஸ்தானின் அணியிலும் இவர் ஓர் அங்கமாக பணியாற்றினார். அங்கிருந்து தற்போது வரை பாக்கிஸ்தான் அணிக்காக அயராது உழைத்துள்ளார். சமீப காலத்தில் தான், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். 

தற்போது, பாகிஸ்தானின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எனக்கும் மன அழுத்தத்தை கொடுத்தார்கள். அது, எனக்கு சித்திரவதையாக இருந்தது. இவ்வாறு உள்ள ஓர் கிரிக்கெட் வாரியத்தின் கீழ் என்னால் விளையாட இயலாது. வீரர்களின் இன்பமும் முக்கியம். 

ஆயினும், ஓர்  மகிழ்வூட்டும் செய்தி எதுவெனில், உலகில் உள்ள அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் தன்னால் பங்கேற்க முடியும். அதனால் கிடைக்கும் வருவாய் மிகவும் அதிகம். தன்னுடைய வாழ்வினை பார்த்துக்கொள்வதற்கு ஏதுவாக இருக்கும். 

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?