ஆஸ்திரேலியா - ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி
இவ்வாண்டின் இறுதியில், பெர்த் மைதானத்தில், ஆஸ்திரேலியாவுக்கும் ஆஃப்கானிஸ்தானுக்கும் இடையே நடைபெறவிருந்த, ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி, கொரோனா நோயின் காரணத்தினால் தள்ளிவைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வாரியம், பின் வருங்காலங்களில், இப்போட்டியை நிச்சயம் நடத்துவோம் என்று வாக்களித்தது. அந்த வாக்கின் அடிப்படையில் தற்போது ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாண்டு, நவம்பர் மாதம் 21ம் தேதியன்று நடைபெறவிருந்த, ஒன்றே பகலிரவு டெஸ்ட் போட்டியை, அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, ஆஃப்கானிஸ்தானின் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், இப்போட்டியை 2021ம் ஆண்டின் இறுதி காலத்தில் நடத்துவோம் என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்கள்.
2017ம் ஆண்டில் தான், ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு, சர்வதேச டெஸ்ட் அங்கீகாரம் கிடைத்தது. அங்கிருந்து 4 டெஸ்ட் போட்டிகள் விளையாடி, அதில், பங்களாதேஷ் உடன் ஒன்றும் ஐயர்லாந்து உடன் ஒன்றும் வென்றுள்ளது. 2018ம் ஆண்டில், இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி விளையாடியுள்ளார்கள்.
Comments
Post a Comment