இங்கிலாந்தின் பயிற்சி குழு
வரும் ஜனவரி மாதத்தில், இங்கிலாந்து அணி இலங்கை நாட்டுக்கு, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இத்தொடருக்கான இரு நாட்டவரின் அணிகளை சென்ற வாரம், அறிவித்த நிலையில், தற்போது இங்கிலாந்து நாட்டின் சார்பாக பயணிக்கவுள்ள பயிற்சி குழு'வினை நியமித்துள்ளனர்.
Jacques Kallis அவர்களை, இங்கிலாந்து நாட்டின் Batting Consultantடாக அறிவித்துள்ளார்கள். தென் ஆப்ரிக்கா நாட்டின் சார்பாக, 12,000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். 2014ம் ஆண்டில், அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து இவர் ஓய்வு அறிவித்தார். அங்கிருந்து பல அணிகளை பயின்றார்.
இவருடன் இணைந்து, இத்தொடரில் பணியாற்ற இருக்கும் மற்ற பயிற்சியாளர்களின் பட்டியல் :-
Head Coach - Chris Silverwood
Assistant Coach - Paul Collingwood
WK Consultant - James Foster
Fielding Coach - Carl Hopkinson
Batting Consultant - Jacques Kallis
Bowling Coach - Jon Lewis
Spin Bowling Consultant - Jeetan Patel
இத்தொடரில் உள்ள இரண்டு போட்டிகளும், இலங்கையில் உள்ள Hambantota மைதானத்தில் நடைபெறும். சென்ற முறை, இலங்கை நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட போது, டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி அபார வெற்றியை கண்டது.
இம்முறை, தலைசிறந்த பயிற்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளார்கள். இங்கிலாந்து அணி, மீண்டும் வெற்றி வாகை சூடுமா ? அல்லது இலங்கை அணி, சிறிதளவும் சளைத்தவர்கள் அல்ல என்று உலகிற்கு உணர்த்துமா ? காலம் மற்றும் ஆட்டம் தான் தீர்வளிக்க வேண்டும்.
Comments
Post a Comment