ICC Decade விருதுகள் - வெற்றியாளர்களின் அறிவிப்பு !!

ஒரு மாதத்திற்கு முன்பாக, கடந்த பத்தாண்டுகளில் சிறப்பாக விளையாடிய கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளை வழங்கவுள்ளார்கள், அதன் பரிந்துரையார்களின் பட்டியலும் நான் பதிவிட்டிருந்தேன். பரிந்துரைக்கப்பட்டவர்களுள், வெற்றி பெற்றோர் யாவர் என்பதன் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டது. அதன் முழு விவரத்தை இப்பதிவில் நாம் பார்ப்போம்.

இதில் வழங்கப்பட்டுள்ள விருதுகளின் பெயர்களை நான் ஆங்கிலத்தில் பதிவிடுகிறேன், தற்போது அதுவே முறையாகும். 

1. ICC's Men Cricketer of the Decade

இந்த பத்தாண்டுகளுள், ஆண்களுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர். இந்த விருதை பெற்றது, தற்போது இந்திய அணியின் தலைவரான, அனைத்து வகை கிரிக்கெட் rankingல் தலைமையேற்ற விராட் கோலி அவர்களுக்கு தான் வழங்கப்பட்டது. 

2. ICC's Women Cricketer of the Decade

இந்த பத்தாண்டுகளுள், மகளிருக்குள் சிறந்த கிரிக்கெட் வீரர். இதை வென்றது, ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த Ellyse Perry ஆவார்.

3. ICC Men's Test Cricketer of the Decade

டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை தட்டிசென்றது , ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரரான, Steve Smith ஆவார்/

4. ICC Men's ODI Player of the Decade

ஆண்களுக்கான சிறந்த வீரர் விருதை தொடர்ந்து, இந்த பத்தாண்டுகளுள் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், சிறந்த வீரர் இவர் தான் என தேர்ச்சிபெற்று, விருது பெற்றது, விராட் கோலி ஆவார்.

5. ICC Women's ODI Player of the Decade

மகளிருக்கென சிறந்த வீரர் விருதை தொடர்ந்து, ஒரு நாள் கிரிக்கெட்டிலும், தனது ராஜ்ஜியத்தை நடத்தியுள்ளார், Ellyse Perry.

6. ICC Men's T20I Player of the Decade

ஆண்களுக்கான, சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் என்கிற பட்டியலில், இந்த விருதை தட்டி சென்றது, Afghanistan நாட்டை சேர்ந்த ரஷீத் கான். 5 ஆண்டுகளில், உலக கிரிக்கெட்டை ஆளும் வீரராகவும், இதற்கு மேல் இரு தலைமுறை காலத்திற்கு கிரிக்கெட் உலகை ஆள காத்திருக்கும், all rounderராகவும் திகழ்கிறார், ரஷீத் கான்.

7. ICC Women's T20I Player of the Decade

இங்கும், Ellyse Perry தான். அவர்களை கடந்து, முடிந்தால் ஜெயித்து காட்டுங்கள் என்பது போன்று சவால் விடும்வாறு சம்பவங்களை நிகழ்த்தியுள்ளார்.

8. ICC Men's Associate Player of the Decade

Scotland நாட்டை சார்ந்த Kyle Coetzer அவர்கள் தான் இந்த விருதை வென்றுள்ளார்.

9. ICC Women's T20I Player of the Decade

நல்ல வேளை, இந்த பட்டியலில் Ellyse Perryயின் பெயர் இடம் பெறவில்லை. இந்த விருதை வென்றது, Scotland நாட்டை சேர்ந்த Kathryn Bryce

10. ICC Spirit of the Cricket Award

விளையாட்டுத்திறனை மேன்படுத்தியதற்கான விருதை வென்றது, இந்திய அணியின் முன்னாள் தலைவரான, Captain Cool என்கிற பட்டம் பெற்ற, மகேந்திர சிங் தோனி. 

இதனை தொடர்ந்து, மகனர் மற்றும் மகளிர் கனவு அணிகளை வெளியிட்டுள்ளது ICC.

ICC's Men ODI Team of the Decade

Rohit Sharma, David Warner, Virat Kohli, Ab De Villiers, Shakib Al Hasan, MS Dhoni ( C ) ( WK ), Ben Stokes, Mitchell Starc, Trent Boult, Imran Tahir, Lasith Malinga

ICC Men's T20I Team of the Decade

Rohit Sharma, Chris Gayle, Aaron Finch, Virat Kohli, Ab De Villiers, Glenn Maxwell, MS Dhoni (C)(WK), Pollard, Rashid Khan, Jasprit Bumrah, Lasith Malinga

ICC Men's Test Team of the Decade

Alastair Cook, David Warner, Kane Williamson, Virat Kohli (c), Steve Smith, Kumar Sangakkara (WK), Ben Stokes, Ravichandran Ashwin. Dale Steyn, Stuart Broad, James Anderson

ICC Women's ODI Team of the Decade

Alyssa Healy, Suzie Bates, Mithali Raj, Meg Lanning(c), Stephanie Taylor, Sarah Taylor(wk), Elysse Perry, Dane Van Niekerk, Marizanne Kapp, Jhulan Goswami, Anisa Mohammed

ICC Women's T20I Team of the Decade

Alyssa Healy, Sophie Devine, Suzie Bates, Meg Lanning, Harmanpreet Kaur, Stephanie Taylor, Deandra Dottin, Ellyse Perry, Anya Shrubsole, Megan Scutt, Poonam Yadav



    


Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?