West Indies - Bangladesh தொடர் !
பல நாட்களாக, மேற்கு இந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளும் இணைந்து, ஒரு கிரிக்கெட் தொடர் விளையாட வுள்ளதாக பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்தது. ஆயினும், பங்களாதேஷ் நாட்டில், கொரோணா நோயின் தொற்றானது எந்த நிலையில் உள்ளது என பலர் அறியாத புதிராகவே இருந்தது. இதனை ஆய்வு செய்ய, மேற்கு இந்திய தீவுகள் நாட்டினை சேர்ந்த மூன்று மருத்துவர்கள், பங்களாதேஷில் களமிறங்கி, சோதனை செய்தனர்.
நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், பங்களாதேஷ் நாட்டில் கிரிக்கெட் தொடரை நிகழ்த்த நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் எனவும், நிச்சயமாக நாங்கள் களமிறங்குவோம் எனவும் தெரிவித்தார். அதன் அடிப்படையில், தற்போது இத்தொடரின் அட்டவணை வெளியிட்டனர்
இத்தொடரில், மூன்று ஒரு நாள் போட்டிகளும் மூன்று டெஸ்ட் போட்டிகளும் அடங்கும். அவற்றில், பல போட்டிகள், தாக்கா'வில் நடைபெறுகிறது.
20 Jan - 1st ODI, Dhaka
22 Jan - 2nd ODI, Dhaka
25 Jan - 3rd ODI, Dhaka
28-31 Jan - 1st Test, Chattogram
03-07 Feb - 2nd Test, Chattogram
11-15 Feb - 3rd Test, Dhaka
சிங்கமாக வாழ்ந்த மேற்கு இந்திய தீவுகள், தற்போது வலுவில்லாமல் தவிக்க, இந்த ஒரு தொடர், காயப்பட்ட சிங்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைபெற்றால் நன்மையே !
Comments
Post a Comment