PAK vs SA, PAK Test அணி அறிவிப்பு

இம்மாதம், 26ம் தேதியன்று துவக்கம் பெற்றும் February மாதம் 14ம் தேதியன்று, நிறைவு பெறுவதாக இருந்துகொண்டிருக்கும், பாகிஸ்தானுக்கும் தென் ஆஃப்பிரிக்காவுக்கும் இடையேயான தொடரில், 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 T20I போட்டிகளில் பங்குபெறவுள்ளார்கள். பயணம் மேற்கொள்ளும் தென் ஆஃப்பிரிக்காவின் அணிவகுப்பை, சென்ற சில வாரங்களுக்கு முன் நாம் பார்த்திருப்போம். அவற்றைத்தொடர்ந்து, தற்போது பாகிஸ்தானின் அணிவகுப்பு வெளியாகியுள்ளது. அவையவை என இப்பதிவில் நாம் பார்ப்போம்.

முதலில், இரண்டு test போட்டிகள் நடைபெறவிருக்கிறது. அதில், கராச்சியில் முதல் போட்டியும், ராவல்பிண்டியில் மற்றோரு போட்டியும் நடைபெற, அதற்கான அணியை மட்டுமே, பாக்கிஸ்தான் கிரிக்கெட் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. அந்த அணியை பொறுத்தவரை, 9 உள்நாட்டு வீரர்களை தேர்வு செய்துள்ளார்கள். ஷடாப் கான், முஹம்மத் அப்பாஸ், ஹாரிஸ் சொஹைல் மற்றும் ஷான் மசூத் ஆகிய நாவரும், இத்தொடரில் பங்கேற்கவில்லை. 

பாகிஸ்தானின் அணி - பாபர் அசாம், முஹம்மத் ரிஸ்வான், அபித் அலி, அப்துல்லா ஷஃபிக், அசார் அலி, ஃபவாத் அலாம், கம்ரான் குலாம், சல்மான் அலி அகா, சவுத் ஷகீல், ஃபாஹீம் அஷ்ரஃப், முஹம்மத் நவாஸ், சர்ஃபராஸ் அஹ்மத், நௌமன் அலி, சாஜித் கான், யாசிர் ஷா, ஹாரிஸ் ராஃப், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, டாபிஷ் கான்.

இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும், இரு அணியினருக்கு மிகவும் முக்கியமானவை. இவர்களையடுத்து, தென் ஆஃப்ரிக்கா அணியும், ஓர் மாற்றத்தை அறிவித்துள்ளார்கள். Ottniel Baartman அவர்களுக்கு மாற்றாக Marco Jensen எனும் வீரனை நியமித்துள்ளார்கள்.

26ம் - 30ம் ஜனவரி - முதல் டெஸ்ட், ராவல்பிண்டி
4ம் - 8ம் பிப்ரவரி - இரண்டாம் டெஸ்ட், கராச்சி 

11ம் பிப்ரவரி - முதல் T20I, லாஹூர் 
13ம் பிப்ரவரி - இரண்டாம் T20I, லாஹூர் 
14ம் பிப்ரவரி - மூன்றாம் T20I, லாஹூர்            

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?