BAN vs WI - இரண்டாம் ODI Review

இரண்டாவது ODI match பொறுத்த வரைக்கும், கதைல பெரிய திருப்பம் லாம் ஒன்னும் இல்ல. முதல் matchல என்ன நடந்துச்சோ, அதே சோகக்கதை தான் ரெண்டாவது matchலயும் நடக்குது. West Indies team, அவங்ககிட்ட இருக்குற குறை எல்லாத்தையும் சரி செஞ்சுட்டாங்களான்னு கேட்டோம்னா, குறைய தாண்டி சில சமயத்துல வசமா மாட்டிக்கிட்டாங்களோன்னு தோணுது. அந்த எண்ணம் ஏன் வந்துச்சுன்னு இந்த ஒரு blogல நாம பாக்கலாம்.

இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், மழை எதுவும் கெடயாது. ஆனா, used wicket. இது used wicketன்னு கூட புரிஞ்சிக்காம, toss ஜெயிக்கிற Jason Mohammed, திரும்பவும் batting choose பன்றாரு. இந்த வாட்டி நாம நம்மளோட battingக improve பண்ணிக்கலாம்ன்னு முடிவெடுத்து, Chemar Holderர வெளில உக்கார வெக்குறாங்க. அவருக்கு பதிலா, Kjorn Ottleyன்னு ஒரு young openerர உள்ள கொண்டு வர்றாங்க.

Sunil Ambris'ஓட form, ரொம்பவே மோசமா இருக்கு. Kjorn Ottleyவ உள்ள கொண்டு வந்தது, ஓரளவுக்கு பலன் கொடுத்துச்சுன்னு தான் சொல்ல முடியும். காரணம், இவரோட துணையில, ஆரம்பத்துல கொண்டு வந்த ஒரு partnership. ஆனா, அது ரொம்ப நேரத்துக்கு நிலைச்சு நிக்கல. 

போன matchல எப்படி ஷாகிப் கிட்ட மாட்டிகிட்டு முழுச்சங்களோ, அந்த மாதிரி இந்த முறை Mehedy Hasan கிட்ட மாட்டிகிட்டு தவிக்குறாங்க. Pitchல movement இருக்கு, ஆனா வேகம் இல்ல. இதை நல்லா பயன்படுத்தின Mehedy Hasan, Shakib Al Hasan மற்றும் Mustafizur Rahman, எல்லாரும் சேர்ந்து, எந்த பக்கம் திருப்பவும், நகர்த்தவும் முடியும்ன்னு முயற்சி பண்ணிகிட்டே இருக்காங்க.

அந்த முயற்சியோடு பலனா, ஒவ்வொரு wicketடும் மடியில வந்து விழுது. Inexperienceங்கிற ஒரு factor, West Indies teamமுக்குள்ள திரும்பவும் தெரிஞ்சுது. பொதுவா, West Indies teamக்கு spin bowling விளையாடுறதுல பல பிரச்சனை இருக்கு. இதுக்கு நடுவுல, அனுபவமே இல்லாத players வெச்சு rotate பண்ணது தான் மொத்தமா முடிச்சி விட்ருச்சு. 

ஒரு சில positives'உம் இருக்கு. Lower orderல வந்து ஒழுங்கா விளையாடின Rovman Powell, அவருக்கு துணையா நின்ன Alzarri Josephன்னு இவங்களோட batting depth கொஞ்சம் appreciableலா இருந்துச்சு. ஆனா, அதை தாண்டி வேற எதுவும் பெருசா நிக்கல. 

திரும்ப, Bangladesh battingக்கு வர்றாங்க. போன match மாதிரியே, இங்கயும் Akeal Hoseinக்கு நல்ல turn கிடைக்குது. ஆனா அவருக்கு துணையா வேற யாரும் சொல்லிக்குற அளவுக்கு fight கொடுக்கல. அது காரணமா, ரொம்பவே easyயா chase பண்ணிட்டு போயிட்டாங்க. 

  

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?